Published:Updated:

சிவகங்கையில் மான் கறி... திருச்சியில் ஆட்டுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்!

மான் கறி
பிரீமியம் ஸ்டோரி
மான் கறி

`வனவிலங்கை வேட்டையாடிச் சாப்பிட்டார்கள்’ என வனத்துறை வழக்குத் தொடரும். அதை ஊர்மக்கள் மறுப்பார்கள். இதுதான் வழக்கம்.

சிவகங்கையில் மான் கறி... திருச்சியில் ஆட்டுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்!

`வனவிலங்கை வேட்டையாடிச் சாப்பிட்டார்கள்’ என வனத்துறை வழக்குத் தொடரும். அதை ஊர்மக்கள் மறுப்பார்கள். இதுதான் வழக்கம்.

Published:Updated:
மான் கறி
பிரீமியம் ஸ்டோரி
மான் கறி

ஆனால், சிவகங்கை அருகே உள்ள சானாங்குளம் கிராமத்திலோ, விவகாரம் தலைகீழ். மான்கறியைச் சமைத்துச் சாப்பிட்டதாக கிராம மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என்று வனத்துறை மறுக்கிறது. இதென்ன விநோதம் என்கிறீர்களா?

சிவகங்கையில் மான் கறி...  திருச்சியில் ஆட்டுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்!

நடந்த சம்பவம் இதுதான் என்று விவரமறிந்த வட்டாரத்தினர் விவரிக்கிறார்கள்... ‘‘சிவகங்கை மாவட்டம் ஒக்கூரிலிருந்து நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில் இருக்கிறது சானாங்குளம். இங்கு உள்ள காப்புக்காட்டில் மான்கள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு ஊருக்குள் நுழைய முயன்ற ஆண் மான் ஒன்று, சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தது. அந்த மானை, நாய்கள் கடித்துக்கொன்றுவிட, இறந்துபோன மான் இறைச்சியை ஊர்மக்கள் சிலர் பங்கிட்டு, சமைத்துச் சாப்பிட்டனர். இந்தத் தகவல் வனத்துறையினருக்குத் தெரியவர, கிராமத்தில் ரகசிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து மான்கறி சாப்பிட்டவர் களிடம் பணம் வசூலித்து, வனத்துறையினருக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது’’ என்கிறார்கள் அவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகங்கையில் மான் கறி...  திருச்சியில் ஆட்டுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்!

சானாங்குளம் சென்று விசாரணையில் இறங்கினோம். எதிர்பட்ட பெண்மணி ஒருவரிடம் பேசியபோது, ‘‘மானை நாங்க யாரும் அடிக்கலை. நாய் விரட்டிக்கிட்டுப் போய் மானைக் கொன்னுடுச்சு. ஊர்க்காரங்க அதை உடனே உரிப்பாங்கன்னு நெனச்சுக்கூடப் பார்க்கலை. நானும் என் வீட்டுக்காரரும் ‘எங்களுக்கு ரத்தக்கொதிப்பு இருக்கு. கறி வேணாம்’னு சொன்னோம். எங்களுக்கும் வம்படியா கறியைக் கொடுத்து வம்புல மாட்டிவிட்டுட்டாங்க. மான் தோல், கொம்புகளை எல்லாம் என்ன செஞ்சாங்கன்னு தெரியலை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊர் பெரியவங்க சிவகங்கைக்குப் போய், மான் கறி சாப்பிட்டதுக்காக ஒரு லட்சம் ரூபாய் கட்டிட்டு வந்திருக்காங்க. இப்போ, வீட்டுக்கு வீடு ஆள் அனுப்பி மான் கறி சாப்பிடவங்களைப் பணம் கொடுக்கச் சொல்லியிருக்காங்க. எங்ககிட்ட 5,000 ரூபாய் கேட்டிருக்காங்க. அவ்வளவு பணத்துக்கு எங்கே போறதுன்னு தெரியலை’’ என்றார் வேதனையுடன்.

சிவகங்கையில் மான் கறி...  திருச்சியில் ஆட்டுக்கறி... வில்லங்கம் கிளப்பும் விருந்துகள்!

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஜோசப் என்பவரிடம் பேசினோம். ‘‘அந்தச் சமயத்துல நான் ஊர்ல இல்லை. எங்க குடும்பத்துக்கு மான் கறி கொடுக்காம ஒதுக்கிட்டாங்க. நான் வீட்டுல இருந்திருந்தா நிச்சயமா எனக்கும் பங்கு கொடுத்திருப்பாங்க. அன்னைக்கு நான் ஊர்ல இல்லாததால, தப்பிச்சுட்டேன்’’ என்றார்.

வனச்சரகர் கோபிநாத்திடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘‘மான் கறி சாப்பிட்டதாகக் கிடைத்த தகவலின்பேரில் விசாரணை மேற்கொண்டோம். மானை அறுத்துச் சாப்பிட்டதற்கான தடயங்கள், ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் யாரும் கைது செய்யப்படவில்லை’’ என்றார்.

சிவகங்கை மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வர், ‘‘விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. மான் கறியை கிராம மக்கள் சமைத்துச் சாப்பிட்டது ஆதாரங்களுடன் தெரிந்தால், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கறி விருந்து எஸ்.ஐ... கடுப்பான எஸ்.பி!

இது ஆட்டுக்கறி விவகாரம்...

திருச்சி முக்கொம்பு அருகே உள்ளது, வாத்தலை கிராமம். இங்கு உள்ள காவல்நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றியவர் மாரிமுத்து. ஜூலை 20-ம் தேதி, சக போலீஸாருடன் சிறுகாம்பூர் பகுதியில் இவர் ரோந்து சென்றுள்ளார். திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆடு ஒன்றுடன் வாலிபர் ஒருவர் பைக்கில் வந்துள்ளார். போலீஸாரைப் பார்த்ததும் ஆட்டை அப்படியே விட்டுவிட்டு, வண்டியை முறுக்கிக்கொண்டு அந்த வாலிபர் பறந்துவிட்டார்.

காவல்நிலையத்துக்கு அந்த ஆட்டைக் கொண்டு வந்த போலீஸார், அதை அங்கேயே கட்டிப்போட்டு, `ஆடு யாருக்குச் சொந்தம்?’ என்று விசாரித்து வந்தனர். சில நாள்கள் கழித்தும், ஆட்டைத் தேடி யாரும் வரவில்லை. இதையடுத்து, பக்கத்தில் உள்ள பனையடி கருப்புசாமி கோயிலுக்கு ஆட்டைப் பலிகொடுத்த எஸ்.ஐ மாரிமுத்து, சக போலீஸாருக்கு பிரியாணி விருந்துவைத்துள்ளார். கறி விருந்து தகவல் திருச்சி எஸ்.பி-யான ஹியாவுல் ஹக் கவனத்துக்குப் போகவே, யாரும் உரிமை கோராத பொருளை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தத் தவறிய குற்றத்துக்காக எஸ்.ஐ மாரிமுத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

பிரியாணி சாப்பிட்டு ஏப்பம்விட்ட போலீஸாரும், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.