‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ - ரஜினியின் வசனம். ரஜினியின் இன்னொரு பேர் ‘சர்ச்சை.’ சமீபத்திய சர்ச்சை, ரஜினி இ-பாஸ் இல்லாமல் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்துக்குச் சென்றதாக எழுந்தது.

இரண்டு நாள்கள் கழித்து புதிதாக ஒரு இ-பாஸ் ஆதாரத்தை ரஜினிகாந்த் தரப்பு வெளியிட, அது சொந்தச் செலவில் சூனியம் ஆனது. கேளம்பாக்கத்தில் இருக்கும் மகள் சௌந்தர்யாவின் வீட்டுக்கு ரஜினி மருத்துவக் காரணங்களுக்காகச் சென்றதாக அந்த இ-பாஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘மகள் வீட்டுக்குப் போவதில் என்ன மருத்துவ அவசரம்?’, இ-பாஸ் தேதி, ரஜினி பயணித்த வாகனம் என அடுக்கடுக்காக வைக்கப்பட்ட பல கேள்விகளுக்கு ரஜினி தரப்பிலிருந்து முறையான பதில்கள் இல்லை. அது ஒருபக்கம் இருக்கட்டும், ஆனால் வெளியான ரஜினியின் இ-பாஸை வைத்து அவரின் மொத்த பயோடேட்டாவையும் வெளிக்கொண்டு வந்துவிட்டனர் நெட்டிசன்கள். ‘ரஜினிக்கே இந்தக்கதி என்றால்...?’ என்ற கேள்வி சாதாரண சிட்டிசனுக்கு எழுத்தானே செய்யும்.

சரி, இந்தத் தகவல்களை எப்படி எடுத்தனர்? ரஜினியின் இ-பாஸை வெளியிட்ட ஊடகங்கள், அதிலிருக்கும் முக்கியத் தகவல்களை மறைத்தே வெளியிட்டனர். ஆனால் அதிலிருக்கும் QR கோடை மட்டும் ஸ்கேன் செய்து ரஜினியின் இ-பாஸை அனைவராலும் பதிவிறக்க முடிந்தது. ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு முகவரி, கேளம்பாக்கம் வீட்டு முகவரி, ரஜினி எந்தக் காருக்கு இ-பாஸ் வாங்கினார், அவரது ஆதார் கார்டு எண் என்ன என எல்லாத் தகவல்களும் அதன்மூலம் கிடைத்துவிட்டன. அதுமட்டுமல்ல, சீட் பெல்ட் அணியாமல் வண்டி ஓட்டிய காரணத்திற்காக ரஜினிக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. ஒரு மாத காலமாக அதைக் கட்டாமல் வைத்திருந்தார் ரஜினி. இந்த விவரத்தையும்கூட சிலர் தோண்டி எடுத்துவிட்டார்கள். (ஜூலை 23-ம் தேதி அதைக் கட்டிவிட்டார்)

எப்படி இதெல்லாம் சாத்தியமானது..? ஒன்றும் பெரிய விஷயமில்லை. அரசே அனைத்தையும் வெளிப்படையாகப் பொதுவெளியில் வைத்திருக்கிறது. mParivahan என்ற செயலி உங்களிடம் இருந்தால் போதும். அதில் ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை மட்டும் குறிப்பிட்டால், அதன் உரிமையாளர் யார், அவருடைய டிரைவிங் வரலாறு என்ன என்பதையெல்லாம் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள தேசத்தில் ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு விலை இருக்கிறது. ஆனால் கலியுக கர்ணன்களாக கேட்பவர்களுக்கெல்லாம் தகவல்களை நாமே கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அமேசான், ஃப்ளிப்கார்ட் என அனைத்து ஆன்லைன் டெலிவரி தளங்களும் கடந்த வருடம் வாடிக்கையாளர்களின் ஆதார் எண் வாங்குவதைக் கட்டாயமாக்கினார்கள். வேறு வழியில்லாமல், நாமும் நம் பற்றிய தகவல்களைத் தாரைவார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சரி, ரஜினி விஷயத்துக்கு வருவோம். மேலே சொன்னதுபோல இந்த வாகன விவரங்களை ‘Vahan’ என்ற டேட்டாபேஸில் வெளிப்படையாக வைத்திருக்கிறது அரசு. இதில், இந்தியாவின் 28 கோடி வாகனங்கள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. ஒரு சின்ன உதாரணம்: சில மாதங்களுக்கு முன்பு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் நமக்குத் தெரியும். இது நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில் சிறுபான்மையினரைக் குறிவைத்து டெல்லியில் கலவரங்கள் வெடித்தன. அப்போது இதே Vahan டேட்டாபேஸ்தான் கலவரக்காரர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது. வாகனங்களுக்குத் தீ வைக்கவேண்டும் என்று முடிவுசெய்துவிட்ட கலவரக்காரர்களுக்கு அது யார் வாகனம் என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த டேட்டாபேஸ் பெரிதும் உதவியது. இப்போது அபாயம் உங்களுக்கு உறைக்குமே!

இதை மேற்கோள் காட்டி, `இப்படியான தகவல்களை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் வெளிப்படையாக வைக்காதீர்கள்’ என அரசிடம் கோரிக்கை வைத்தன டேட்டா உரிமைக்காகப் போராடும் அமைப்புகள். `இனி, பெயரில் சில எழுத்துகளை நீக்கி இந்தத் தகவல்களைக் காட்டுகிறோம்’ என்றது அரசு. ஆனால் இதுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

வாகனப் பதிவு எண் என்பது மிகவும் வெளிப்படையான ஒரு தகவல். சாலையில் செல்லும் யாராலும் உங்கள் வாகன எண் என்னவென்று பார்க்கமுடியும். அந்த எண் மூலம் யாராலும் உங்கள் வாகனத்தைப் பற்றிய விவரங்களைப் பெறமுடியும். சில மாநிலங்கள் இதிலிருக்கும் இந்த ப்ரைவசி சிக்கலைப் புரிந்துகொள்கின்றன. தெலங்கானா மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களின் இணைய தளங்களில் வாகன எண் மட்டும் கொடுத்தால் போதாது. அதன் Chasis எண் அல்லது Engine எண்ணையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். இந்தத் தகவல்கள் உரிமையாளர்களிடம் மட்டும்தான் இருக்கும். ஆனாலும், மாநில அரசுகள் இந்தமாதிரி சில முற்போக்கு முயற்சிகள் எடுத்தாலும் மத்திய அரசின் Vahan இணையதளத்தில் எல்லா விவரங்களும் திறந்தே கிடக்கின்றன.

மத்தியப்பிரதேசம் போன்ற சில மாநிலங்கள் ‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’ எனத் தங்கள் மாநில இணையதளங்களில் வாகன உரிமையாளர்களின் நிரந்தர முகவரி வரை அனைத்தையும் கொடுக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் யாருடைய இருப்பிடத்தை வேண்டுமானாலும் அறிய முடியும் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து!

அதுமட்டுமல்ல, தகவல்களை விற்று அதிலிருந்து வருமானம் பார்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறது மத்திய அரசு. மார்ச் 2019, சாலைப் போக்குவரத்துத்துறையின் ‘Bulk Data Sharing policy’ திட்டத்தின்படி வண்டிகளின் பதிவெண்களையும், வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ் தகவல்களையும் பெரு நிறுவனங் களுக்கு விற்கலாம் என முடிவெடுக்கப்பட்டது, 25 கோடி வண்டிகளின் பதிவு எண்களும், 15 கோடி வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ் தகவல்களும் இப்படி விற்கப்பட்டன. பெரு நிறுவனங்களுக்கு மூன்று கோடிக்கும், கல்வி நிறுவனங்களுக்கு ஐந்து லட்சத்துக்கும் மொத்தத் தகவல்களும் விற்கப்பட்டன. மத்திய அரசு இதுவரை இதன்மூலம் சம்பாதித்தது 64 கோடி ரூபாய் என்கின்றன தகவல்கள். சமீபத்தில்தான் இப்படி விற்றது தவறென முடிவு செய்து, இந்தத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே விற்கப்பட்ட நம் தகவல்களை எப்படி மீட்கப்போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

ரஜினியை வைத்து ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டிவிட்டோம். ஆனால் இன்னும் இந்தியா டேட்டாவைக் கையாள்வதில் இருக்கும் பிரச்னைகள் ஏராளம். தொடர்ந்து ‘ஆதார் பாதுகாப்பானதுதானா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் டேட்டாவை விற்று அவ்வளவு லாபம் பார்க்கின்றன, அதை நாமும் செய்யலாமே என்ற ஒரு முடிவை அரசு எடுப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால் சமூக வலைதளமும் அரசும் ஒன்றா?

இதற்கெல்லாம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது இந்தியாவில் ஒழுங்கான டேட்டா பாதுகாப்புச் சட்டங்கள் இல்லை என்பதுதான். ஐரோப்பாவில் இதுபோன்ற பிரைவசி சார்ந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாணும் ஒரு சட்டமாக General Data Protection Regulation (GDPR) சில வருடங்களுக்கு முன் அமலுக்கு வந்தது. இதுபோன்ற ஒரு சட்டமாகத்தான் இந்தியாவில் ‘Personal Data Protection Bill’ வடிவமைக்கப்பட்டது. ஆனால் தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல்கூட நடந்துவிடும் போல... இந்தச் சட்டம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த மசோதா முன்வைக்கப்பட்டால் டேட்டா குறித்த தெளிவு கிடைக்கும்.

Compritech என்ற ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்றில் பயோமெட்ரிக் டேட்டாவை ஒழுங்காகக் கையாளாத நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இந்தியாவை மதிப்பிடுகிறது. அதே நேரத்தில் மக்களை அதிகம் கண்காணிக்கும் நாடுகளில் முன்னணி நாடாக இருக்கிறது இந்தியா. அதாவது ஒரு குடிமகன் பற்றி அதிக டேட்டா வைத்திருக்கும் நாடும் இந்தியாதான். அதை ஒழுங்காகக் கையாளாத நாடும் இந்தியாதான்.

மக்களாகிய நாமும் டேட்டாவின் மதிப்பை உணர வேண்டும். தேவையில்லாத இடங்களில் தகவல்களைத் தருவதைத் தவிர்க்கவேண்டும். அதே சமயம், ஆதார், PAN , லைசென்ஸ் நம்பர் என தன் குடிமக்களின் தனிநபர் விஷயங்களையும் ஓர் அரசு சொற்ப விலைக்கு விற்குமானால் என்ன செய்வது? சட்டம் வருகிறதோ இல்லையோ, ‘அரசுதானே’ என மக்கள் நம்பிக் கொடுக்கும் தகவல்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தார்மிகக் கடமை.

எல்லோரும் ரஜினி ஆக முடியாது. ஆனால், ரஜினிக்கு வந்த பிரச்னை எல்லோருக்கும் வந்துவிடவும் கூடாது.