Published:Updated:

‘மாதம்தோறும் ஒரு லட்சம் ரூபாய் கமிஷன்...’ - நகராட்சி ஆணையரைச் சுற்றும் சர்ச்சை!

ராமநாதபுரம் நகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
ராமநாதபுரம் நகராட்சி

நகராட்சி ஆணையர் வெளியூர் செல்வதாக இருந்தால், மாவட்ட ஆட்சியர், நகர்மன்றத் தலைவர் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்

‘மாதம்தோறும் ஒரு லட்சம் ரூபாய் கமிஷன்...’ - நகராட்சி ஆணையரைச் சுற்றும் சர்ச்சை!

நகராட்சி ஆணையர் வெளியூர் செல்வதாக இருந்தால், மாவட்ட ஆட்சியர், நகர்மன்றத் தலைவர் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்

Published:Updated:
ராமநாதபுரம் நகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
ராமநாதபுரம் நகராட்சி

‘நகராட்சி ஊழியர்களை அவமரியாதையாக நடத்துகிறார்’ என்ற சர்ச்சையில் சிக்கிய ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சந்திரா, இப்போது ‘கமிஷன்’ குற்றச்சாட்டிலும் சிக்கியிருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் கட்சி வேறுபாடின்றி ஆணையருக்கு எதிராகக் கொந்தளித்ததுடன், அவரைப் பணியிட மாற்றம் செய்யக் கோரி தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க கவுன்சிலர் காளி, ‘‘நகர்மன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பு, கமிஷனர் தன் இஷ்டப்படி செயல்பட்டிருக்கிறார். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் அவை ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன. பாதாளச் சாக்கடைப் பராமரிப்பு ஒப்பந்தத்தை உள்ளூர் நபரிடமிருந்து பறித்து, சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார். இதற்காக மாதம்தோறும் ஒரு லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிக்கொண்டு பில் பாஸ் செய்திருக்கிறார்.பராமரிப்புப் பணிக்கு 18 பேர் இருப்பதாக தினமும் கையெழுத்து வாங்கிய நிலையில், இரண்டு பேர் மட்டுமே வேலை செய்திருக்கிறார்கள்.

‘மாதம்தோறும் ஒரு லட்சம் ரூபாய் கமிஷன்...’ - நகராட்சி ஆணையரைச் சுற்றும் சர்ச்சை!

எனவே, அந்த சென்னை ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு மீண்டும் உள்ளூர் நபருக்கே பராமரிப்புப் பணிகளை ஒப்படைக்க, தலைவரும் கவுன்சிலர்களும் முடிவு செய்தோம். இது தொடர்பாக நகராட்சிக் கூட்டத்தில் விவாதிக்க அஜண்டா தயாரித்தோம். இதை அறிந்த ஆணையர் சந்திரா யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், எங்கேயோ போய்விட்டார். அவரின் இந்தச் செயல்பாடு தொடர்பாக மதுரையிலுள்ள நகராட்சி நிர்வாக மதுரை மண்டல இயக்குநரிடம் புகாரளித்திருக்கிறோம்” என்றார்.

பா.ஜ.க கவுன்சிலர் குமார், ‘‘நகராட்சி ஆணையர் வெளியூர் செல்வதாக இருந்தால், மாவட்ட ஆட்சியர், நகர்மன்றத் தலைவர் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் இவர் யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டார். பொதுவாகவே அவர் பகல் நேரங்களில் வேலைக்கு வராமல் மாலையில் அலுவலகத்துக்கு வந்துவிட்டு இரவு 12 மணி வரை இருப்பார். அதனால் பெண் ஊழியர்களும் இரவு நேரத்தில் அலுவலகத்தில் இருக்கவேண்டிய சிரமம் ஏற்படுகிறது. இது தொடர்பாகவும் நகர்மன்றக் கூட்டத்தில் விவாதித்து மாலை 6 மணிக்கு மேல் பெண் ஊழியர்களை அலுவலகத்தில் வைத்திருக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதையெல்லாம் அவர் மதிப்பதே இல்லை” என்று படபடத்தார்.

காளி
காளி
குமார்
குமார்
சந்திரா
சந்திரா

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ஆணையர் சந்திராவிடம் பேசினோம். ‘‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று சொன்னால் என்மீது புகார் சொல்பவர்கள் நம்பவா போகிறார்கள்... ஊழியர்களை வேலை வாங்கினால், அவமரியாதையாக நடத்துவதாகச் சொல்கிறார்கள். வேலையே செய்யத் தெரியாத சிலரைக்கூட நான் அனுசரித்தே வேலை வாங்கியிருக்கிறேன். அதனால் என்மீது அவர்கள் ஏதாவது புகார் தெரிவித்திருந்தால், என் மேலதிகாரிகள் விசாரித்து நான் குற்றமற்றவள் என்பதைத் தெரிவிப்பார்கள்” என்றார் சுருக்கமாக.