Published:Updated:

`கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்!’ - சர்ச்சைக்கு விளக்கம் சொன்ன சிவகங்கை ஆட்சியர்

சிவகங்கை ஆட்சியர்
சிவகங்கை ஆட்சியர்

கொரோனா பாதிப்பில் உலக நாடுகள் அஞ்சிவரும் நிலையில் சிவகங்கை கலெக்டர் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா
கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் தற்போதுவரை 5 பேர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இதில் முக்கியத்துவம் காட்டாமல் மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ``கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் அச்சமடைந்து அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

`கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்!’ - சர்ச்சைக்கு விளக்கம் சொன்ன சிவகங்கை ஆட்சியர்

மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளையும் அப்பகுதியில் உள்ள கடைகளை முடக்கி வைத்தனர்.

ஆனால், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், `பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக முடக்கத் தேவையில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் வழக்கல்போல செயல்படலாம்’ என்று அறிவித்தார். இது அதிருப்தியை ஏற்படுத்தியது. முக்கியத் தேவைகளுக்காக வெளியூர் செல்லும் பாஸ் வழங்குவதில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்களை கூட்டமாக நிற்க வைத்து பாஸ் வழங்கினார். எனவே, மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

அமைச்சர் பாஸ்கரனுடன்
அமைச்சர் பாஸ்கரனுடன்

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், ``ஒரு பகுதியை முழுமையாக முடக்கும்போது அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைவார்கள். பால் பாக்கெட் வாங்குவதில் கூட சிக்கல் ஏற்படும். அதனால், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதியை முழுமையாக முடக்கவில்லை. கொரோனா பாதிப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா அதிகளவு பரவாமல் இருக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு