Published:Updated:

கரூர்: தடுப்பூசி மையத்துக்கு பூட்டு; தலைமை ஆசிரியை வாக்குவாதம்! - குளறுபடிகளால் மக்கள் அதிருப்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மையத்துக்கு வெளியே தடுப்பூசி பெட்டி
மையத்துக்கு வெளியே தடுப்பூசி பெட்டி

கோவாக்ஸின் 2-ம் கட்ட தடுப்பூசி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கரூர் மாவட்டத்தில் செலுத்தப்படாததால், ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடியதே இந்தக் குளறுபடிகளுக்கு காரணம் என்று மக்களே பேசிக்கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூரில் தடுப்பூசி மையத்துக்குப் பூட்டுப் போட்டதால், பொதுமக்களுடன் கேட்டுக்கு வெளியே காத்திருந்த தடுப்பூசி இருந்த பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தடுப்பூசி மையம் பள்ளியில் நடைபெற்றதால், தலைமை ஆசிரியை உள்ளே பணி செய்ய அனுமதிக்காததால், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மக்கள்
மக்கள்
கரூர்: சாலையில் நின்ற கன்டெய்னர்; கடத்திய இளைஞர்! - சினிமாவை விஞ்சிய 'சேஸிங்' செய்து மீட்ட போலீஸ்

கரூர் மாவட்டத்தில் கோவாக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி நீண்ட நாள்களுக்குப் பிறகு நேற்று பொதுமக்களுக்கு செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு தடுப்பூசி மையங்களில் 1,200 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், கரூர் நகர்ப் பகுதியிலுள்ள நகராட்சி பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 400 நபர்களுக்கு கோவாக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இதனால், இந்த மையத்தில் அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட குவிந்தனர். தடுப்பூசி மையத்தில் சுமார் 300 பேர் முதற்கட்டமாக உள்ளே அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கியது.

மக்கள்
மக்கள்

மேலும், 400 தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், மீதமுள்ள 100 தடுப்பூசிக்காக பொதுமக்கள் தடுப்பூசி மையத்துக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தடுப்பூசி மையத்துக்கு பூட்டுப் போட்டு சாவியை எடுத்துச் சென்றனர். இதனால் கொதிப்படைந்த மக்கள், 'பூட்டைத் திறந்து உள்ளே அனுப்புங்க' என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, 'யாரிடமும் சாவி இல்லை' என பதிலளித்தனர். இதனால், தடுப்பூசி மையத்துக்குக் கொண்டு வரப்பட்ட தடுப்பூசியைக் கொண்டு செல்ல முடியாமல் வெளியே காத்திருந்த பொதுமக்களோடு தடுப்பூசிப் பெட்டியும் காத்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மையத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அதிகாரிகளால் பொதுமக்களுடன் தடுப்பூசியும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து சுகாதாரத்துறையினர் தடுப்பூசியை கேட்டுக்கு சுவரின் மேல்புறமாக கொடுக்குமாறு கூறி, தடுப்பூசிப் பெட்டியை வாங்கிச் சென்றனர். இதற்கிடையில், தடுப்பூசி போடும் மையம் அமைந்துள்ள இடம் நகராட்சி அரசு பள்ளி என்பதால், பணிக்கு வந்த தலைமையாசியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் உள்ளே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். பள்ளியின் வளாகத்துக்கு முன்பு காத்திருந்த ஆசிரியர்களே உள்ளே அனுமதிக்கப்படாததால், பள்ளித் தலைமையாசிரியை, அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினருடன் தங்களை உள்ளே அனுப்புமாறு வாக்குவாதம் செய்தார்.

மக்கள்
மக்கள்

இன்னொருபக்கம், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தடுப்பூசி மையத்துக்கு உள்ளேயிருந்து வெளியேற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். கோவாக்ஸின் 2-ம் கட்ட தடுப்பூசி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கரூர் மாவட்டத்தில் செலுத்தப்படாததால், ஒரேநேரத்தில் ஏராளமானோர் கூடியதே இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம் என்று மக்களே பேசிக்கொண்டனர். இந்தநிலையில், 'தடுப்பூசி ஸ்டாக் இல்லாத காரணத்தால், இன்று (15-ம் தேதி) தடுப்பூசி போடப்படவில்லை' என்று அறிவித்திருப்பது, பொதுமக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு