‘‘சாதி என்பது, பெருமையல்ல; சக மனிதனைத் தாழ்த்திப் பார்க்கும் குரூரமான மனநோய். எங்கள் பிணங்களையும் சாதிவெறி விட்டுவைக்க வில்லை’’ என்று கண்ணீர் சிந்துகிறார்கள் சடலத்தைக் கயிறு கட்டி பாலத்திலிருந்து இறக்கிய பட்டியலினச் சமூக மக்கள்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்திருக்கிறது, நாராயணபுரம் காலனி. இங்கு ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் தமிழக எல்லையிலும், 20 குடும்பத்தினர் ஆந்திர எல்லையிலும் வசிக்கிறார்கள். காலனியிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள கிராமத்தில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 350 குடும்பத்தினர் உள்ளனர்.

காலனியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இடவசதி இல்லாத காரணத்தால், இயற்கையாக மரணிப்பவர்கள் சடலங்களை குடியிருப்புகளின் ஒதுக்குப்புறத்திலேயே புதைக்கின்றனர். விபத்தில் மரணம், தற்கொலை போன்ற அகால மரணமடைந்தோர் உடல்களை, அருகில் உள்ள பாலாற்றங்கரையில் தகனம் செய்கின்றனர்.

இரு புறங்களிலும் ஏக்கர்கணக்கில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர், தங்கள் நிலங்களின் வழியாகச் சடலங்களைத் தூக்கிச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்தான் விபத்தில் உயிரிழந்த குப்பன் என்பவரின் உடலை எரியூட்டு வதற்காக, பாலாற்றங்கரைக்குத் தூக்கிச் சென்றனர். விவசாய நிலத்தின் உரிமையாளர் களிடம், இந்த ஒரு முறை வழிவிடுமாறு கேட்டனர். அவர்கள் வழிவிட வில்லை. அதனால், பாலாற்றைக் கடப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயரமுள்ள பாலத்தின் மேலிருந்து சடலத்தைக் கயிற்றால் கட்டி பாலாற்றுக்குள் இறக்கி எரித்தனர்.

இந்தச் சம்பவத்தை, அங்கு இருந்த சிலர் செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதைப் பார்த்தவர்கள் பதைபதைத்துப்போனார்கள்! இந்த விவகாரம் தேசிய அளவில் பேசப்பட்டதால், வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், விசாரணைக்கு உத்தரவிட்டார். வாணியம்பாடி தாசில்தார் முருகன் தலைமையிலான வருவாய்த் துறையினர் நாராயணபுரம் காலனிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தனர். அரசுக்குச் சொந்தமான 50 சென்ட் புறம்போக்கு நிலத்தை, சுடுகாட்டுக்காக ஒதுக்கிக் கொடுத்தனர்.

இந்த விவகாரத்தின் தாக்கத்தை உணர்ந்த சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. ‘ஆதிதிராவிட மக்களுக்கு தனி மயானம் அமைத்துத் தந்திருப்பதாக’ வேலூர் மாவட்ட நிர்வாகத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘‘ஆதிதிராவிடர்களுக்கென தனி மருத்துவமனை களோ, அரசு அலுவலகங்களோ, காவல் நிலையங்களோ இல்லாத நிலையில், தனி மயானத்தை அரசே அமைத்துக் கொடுத்திருப்பது, சாதிப் பிரிவினையை ஊக்குவிப்பதுபோல் உள்ளது’’ என்று வருத்தம் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தோம். ‘‘சுடுகாட்டுக்காக அரசாங்கம் தற்போது ஒதுக்கியுள்ள இடம், ஆதிக்கச் சமூக மக்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏற்கெனவே, இரு சமூகங்களுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. விவசாய நிலத்தின் வழியாகவே அவர்கள் செல்ல விடவில்லை. சடலத்தை கிராமத்தின் வழியாகத் தூக்கிச் சென்றால், வன்முறைகூட ஏற்படலாம்.

எங்களின் காலனிக்குள் வந்து சென்ற அரசுப் பேருந்தையும், ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தடுத்துவிட்டனர். எங்கள் பகுதியில்தான் ரேஷன் கடை இருந்தது. அதையும் அகற்றி தங்கள் பகுதிக்குள் மாற்றிக் கொண்டனர். சுடுகாட்டை யாவது வேறு இடத்துக்கு மாற்றிக் கொடுங்கள். வாழும்போதுதான் கஷ்டங்களை அனுபவிக்கிறோம். இறந்த பிறகும் எங்களின் பிணங்களை சாதிவெறி துரத்து கிறது’’ என்று வேதனைப்பட்டனர்.

இதுபற்றி தாசில்தார் முருகன், ‘‘ஆதிதிராவிட சமூக மக்கள், சுடுகாடு வேண்டுமென்று இதுவரை எங்களிடம் முறையிட்டதில்லை. பிணத்தைக் கயிற்றால் கட்டி பாலத்திலிருந்து இறக்க வேண்டிய அவசியமே யில்லை. எனக்கு ஒரு போன் செய்திருந்தால், உடனே அங்கு சென்று சுடுகாட்டை அமைத்துக் கொடுத்திருப்பேன்.

விபத்தில் உயிரிழந்த குப்பன் என்பவர், நாராயணபுரம் காலனியைச் சேர்ந்தவரே அல்ல. சம்பந்தமே இல்லாமல் அவரின் உறவினர்கள், சடலத்தை இங்கு கொண்டுவந்து எரித்திருக்கின்றனர். சுடுகாடு கேட்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்க, அப்படிச் செய்திருக்கலாம். சுடுகாட்டுக்குத் தேவையான இடத்தை ஒதுக்கிவிட்டோம்’’ என்றார்.

சாதிவெறி ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!