முன்பெல்லாம் ஹோட்டல்களில் சாப்பிடுவது மாதத்துக்கு ஒரு முறை என்றிருந்தது. பிறகு, வார இறுதியில் ஹோட்டல் அவுட்டிங் வழக்கத்துக்கு வந்தது. இன்றோ... வீட்டைவிட்டு வெளியூர்களில் வாழ்பவர்கள், ஆன்லைன் ஃபுட் ஆப்களின் தாக்கத்தால் ஹோட்டல் உணவை வீட்டுக்கு வரவழைப்பவர்கள், உணவுப் பிரியர்களான ஃபுட்டீஸ் என, ஹோட்டல் உணவே பலருக்கும் அன்றாடமாகிவிட்டது.

இப்படி ஹோட்டல் உணவுகளுக்கான தேவை அதிகரித்திருக்கும் சூழலில், உணவுகளில் செய்யப் படும் கலப்படமும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான தகவல். இதனால், மக்கள் பல்வேறு நோய்களில் சிக்குகிறார்கள். இதுகுறித்து, சென்னையில் அமைந்துள்ள இந்திய நுகர்வோர் அமைப்பின் தொடர்பு அலுவலர் சோமசுந்தரத்திடம் பேசினோம்.

‘‘உணவுக்கான சேர்மானப் பொருள்களில் கலப்படம், சமையலின்போது கலப்படம், சமைத்த உணவில் கலப்படம் என மூன்று விதங்களில் கலப்படம் செய்யப்படுகிறது. ஹோட்டல்களில் அரிசி, பருப்பு, எண்ணெய், பால் பொருள்கள் எனப் பலவற்றில் கலப்படம் செய்கிறார்கள்.

கோதுமை, சோளம் போன்ற தானியங்களில் ‘எர்காட்’ எனும் நச்சுத்தன்மைமிக்க காளான், ஊமத்தை விதைகள் கலக்கப்படுகின்றன. பருப்பு வகைகளில் சேர்க்கப்படும் கேசரிப் பருப்புகள், கீல்வாதநோயை உண்டாக்கக்கூடியவை. எண்ணெய்யில் மினரல் ஆயில் கலக்கப்படுகிறது. மிளகாய்த்தூளில் மூன்றாம் ரக ‘சுதான்’ என்கிற சாயம் கலக்கப்படுகிறது. இது புற்றுநோயை உண்டாக்கும். உப்பில் சாக்பவுடரும், வெள்ளைக்கல் தூளும் கலக்கப்படுகின்றன. மஞ்சள்தூளில் லெட் குரோமேட் கலக்கப்படுகிறது. மைதா மாவில் மரவள்ளிக்கிழங்கு மாவு சேர்க்கப்படுகிறது.

சமையலின்போது நடக்கும் கலப்படங்கள் இன்னும் அதிர்ச்சி ரகம். சுவை, மணம், வண்ணத்தை அதிகரிக்க உணவில் சேர்க்கப்படும் பொருள்கள், மெதுவாகக் கொல்லும் நச்சுகள். கலரிங் ஏஜென்ட்டுகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. இவை சரும அழற்சி, குடல் அழற்சி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஹோட்டல்களில் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்த இறைச்சி மிருதுவாக இருக்க, சமைக்கும்போது ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளைச் சேர்க்கிறார்கள். துரித உணவுகளில் ருசியைக் கூட்ட மோனோசோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படுகிறது. குறைந்த அளவு சாப்பிட்டாலே வயிறு நிறையும் உணர்வைக் கொடுப்பதற்காக சோடா உப்பை கூடுதலாகச் சேர்க்கிறார்கள்..

பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துகிறார்கள். விலை குறைந்த வனஸ்பதியையும் பயன்படுத்துகிறார்கள். இவை நம் உடலில் கெட்ட கொழுப்பு, உடல் பருமன், சர்க்கரை நோய், நரம்புக் கோளாறுகள், மாரடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். உணவு வகைகளை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தும் போது, பழுதான ஃபிரிட்ஜிலிருந்து வெளியாகும் மீத்தைல் குளோரைடு உணவை நஞ்சாக்கிவிடும். சமைத்து அதிக நேரமான உணவுகளில் ஏற்படும் நுண்ணுயிரிகள் நோயை ஏற்படுத்தும்’’ என்றார்.

அவரே தொடர்ந்து, ‘‘உணவின் தரம், தயாரிக்கும் முறை, சேர்மானம், சுகாதாரம் ஆகியற்றில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் சில தரக் குறியீடுகளை வரையறுத்துள்ளது. ஆனால், ஹோட்டல்காரர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. சென்னையில் கிண்டி மற்றும் ரிப்பன் பில்டிங் ஆகிய இடங்களிலும், நெல்லை, சேலம், மதுரை, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் அரசின் உணவுப் பகுப்பாய் வகம் இயங்குகிறது. இங்கே ஹோட்டல் உணவுகள் குறித்த புகார்களை அளிக்கலாம்; உணவுக் கலப்படம் குறித்து விளக்கமும் பெறலாம்’’ என்றார்.

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு மெஸ்ஸின் உரிமையாளரிடம் பேசினோம். ‘‘தொழில் சுத்தம்தான் எங்களை நல்லபடியா வெச்சிருக்கு. எல்லா கடைக்காரங்களும் எங்களை மாதிரி இல்லை. மனச்சாட்சியைக் கழட்டி வெச்சுட்டு கலப்படம் செய்றாங்க. உதாரணமா, மிஞ்சிப்போன பழைய சாதத்தை இட்லிமாவோடு சேர்த்து அரைச்சுடுறாங்க. இன்னொரு பக்கம், மக்களும் நிறம், மணம், அதீத சுவைனு தேடிப் போகாம ஆரோக்கிய மான உணவே போதும்னு நினைக்கணும்’’ என்றார்.

தமிழ்நாடு உணவக அசோசியேஷனின் பொதுச் செயலாளர் சீனிவாசன், “ஹோட்டல் உணவுகள்ல மூலப்பொருள் கள்லதான் பிரச்னை இருக்கு. பிராண்டட் பொருள்கள் வாங்கிறவங்களும் இருக்காங்க; மலிவு விலையில கலப்படப் பொருள்களை வாங்கிறவங்களும் இருக்காங்க. அதன் அடிப்படையில கடைகளைத் தேர்ந்தெடுக்கிறப்போ மக்கள்தான் விழிப்பு உணர்வோடு இருக்கணும்” என்றார்.

தமிழ் மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.டி.அன்பழகன், “உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயத் துக்கான சட்டத்தின்படி பெரிய உணவகங்கள், ரோட்டோரக் கடைகள் மட்டுமல்ல... கோயிலுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும் என்றால்கூட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்’’ என்றார்.

சென்னை மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டுத் துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன், “உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை தரும் தரக்குறியீட்டைப் பெற்று, ஹோட்டல்கள் தங்களின் தரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம் மக்களுக்கும் குறிப்பிட்ட உணவகத்தின்மீது நம்பத்தன்மை அதிகரிக்கும். அந்த வகையில், சென்னையில் 60-க்கும் மேற்பட்ட ஹோட்டல் களுக்கு தரக்குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,250 ரோட்டோரக் கடைகளை ஆய்வுசெய்து, அவற்றில் 2,500 கடைகள் வரை லைசென்ஸ் தந்திருக்கிறோம். தரமில்லாத ஏராளமான கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம்.

கலப்படத்தை ஹை ரிஸ்க், லோ ரிஸ்க் என வகைப்படுத்தி, சோதனைகள் மேற்கொள்ள இருக்கிறோம். பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸப் எண்ணில் உணவுக் கலப்படம் பற்றி புகார் அளித்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். உணவுக் கலப்படங்கள் மட்டு மல்லாமல், கார்பைடு கல் போட்டு மாங்காயைப் பழுக்கச்செய்வது, வாழைப்பழத்தில் எத்திலின் சேர்த்து செயற்கையாகப் பழுக்கவைப்பது உள்ளிட்டவற்றையும் கட்டுப்படுத்தியுள்ளோம். மக்களுக்கு ஆரோக்கியமான உணவு சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’’ என்றார்.

தரமான உணவைத் தரும் உணவகங்கள் மிகச் சொற்பமே. லாபம் எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால், அதிக லாபம் பார்க்க எண்ணி அநியாயங்களுக்குத் துணைபோவதுதான் பெரும்தவறு. பசியாற வரும் நுகர்வோருக்கு நோய் தருவதுதான் அறமா?