Published:Updated:

பிப்ரவரி 14-ல் பெற்றோருக்கு பூஜை... சூரத் கல்வி அலுவலரின் சர்ச்சை சுற்றறிக்கை!

பள்ளி
பள்ளி

சூரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பிப்ரவரி 14-ஐ `மாத்ரு பித்ரு பூஜன் திவஸ்', அதாவது தாய், தந்தைக்கு வழிபாடு செய்யும் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பிப்ரவரி-14 காதலர் தினமான இன்றைய பொழுதை உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ரோஜா பூக்களுடனும், விதவிதமான இனிப்புகளுடனும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டக் கல்வி அலுவலர் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி
பள்ளி

குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்த மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில், சூரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பிப்ரவரி 14-ஐ `மாத்ரு பித்ரு பூஜன் திவஸ்', அதாவது தாய், தந்தைக்கு வழிபாடு செய்யும் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒருவருக்கு கொரோனா தொற்று - 300 ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பிய சிங்கப்பூர் வங்கி!

மேலும், ``தற்போதைய காலங்களில் இளைஞர்கள் நம் நாட்டின் புகழ்பெற்ற மரபுக்கு எதிரான நடைமுறைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே சிறந்த மதிப்புகளை வளர்ப்பதற்கும், நம் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கும், தாய்-தந்தை வழிபாட்டு நாள் பின்பற்றப்பட வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்ததுடன், எவ்வாறு இந்த விழா பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விழா
விழா

அதில், ``பள்ளிகளில் படிக்கும் வெவ்வேறு மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்த ஐந்து முதல் 10 பெற்றோர்களை அழைக்க வேண்டும். மேலும் மாவட்டக் கல்வி அலுவலக உறுப்பினர்கள், சூரத் மாநகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், கல்வியாளர் மற்றும் சமூக சேவையாளர்களை இந்த நிகழ்வைக் காண அழைக்க வேண்டும்.

நிகழ்வில், குழந்தைகள் இந்திய மரபுக்கு ஏற்ப குங்குமம், மாலை ஏந்தி, பெற்றோர்களைச் சுற்றி வந்து வணங்கி அவர்களுக்கு இனிப்புகளை வழங்க வேண்டும். வாழ்க்கையில் பெற்றோரின் முக்கியத்துவம் குறித்தும் ஓர் உரை நிகழ்த்தப்பட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. மேலும், பள்ளிகளில் இந்த விழா கொண்டாடப்படும்போது புகைப்படங்கள் எடுக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பள்ளி
பள்ளி

`பெற்றோரைக் கொண்டாடுவது நல்ல விஷயம்தானே' என்று சிலரும், `அதை ஏன் பிப்ரவரி 14 அன்று செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும்? மாணவர்கள் மீது மதச் சடங்குகளைத் திணிக்க இதுபோன்ற விஷயங்களை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது' என்று பலரும் இது குறித்துக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு