Published:Updated:

நாமக்கல்: "அலட்சியமாக போன் இணைப்பைத் துண்டித்தார்" -ஆணையரைக் குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர்!

பி.தங்கமணி
பி.தங்கமணி ( நா.ராஜமுருகன் )

'நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதற்குரிய வசதிகள் இங்கே இல்லை. சமீபத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர், 'ஆக்சிஜன் பற்றாக்குறை இங்கே இல்லை' என்று தெரிவித்துள்ளார். அதை நான் அரசியலாக்க விரும்பவில்லை' - பி.தங்கமணி

"தமிழக முதலவர் தெரிவித்ததுபோல், இந்த நோய்த்தொற்று காலத்தில் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளோம். ஆனால், திருச்செங்கோடு அம்மா உணவகத்தில் உணவு வழங்குவது தொடர்பாக அங்குள்ள ஆணையரைத் தொடர்புகொண்டு பேசினேன். ஆனால், அவர் அலட்சியமாக எனது இணைப்பைத் துண்டித்துவிட்டார்" என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நா.ராஜமுருகன்
`28 வயதில் எம்.பி; 1,000 பள்ளிகளை திறந்து சாதனை’ - 101 வயதில் மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டர்

குமாரபாளையம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, பரமத்தி வேலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சேகரோடு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜை சந்தித்து மனு அளித்தார். கொரோனா நோயாளிகளுக்கான வசதிகளை அதிகரித்துக் கொடுப்பது சம்பந்தமான கோரிக்கைகளை அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பி.தங்கமணி,

 பி.தங்கமணி
பி.தங்கமணி
நா.ராஜமுருகன்

"நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதற்குரிய வசதிகள் இங்கே இல்லை. சமீபத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர், 'ஆக்சிஜன் பற்றாக்குறை இங்கே இல்லை' என்று தெரிவித்துள்ளார். அதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. அ.தி.மு.க சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த நோய்த் தொற்றுக் காலத்தில், முதல்வர் சொன்னதுபோல் நாங்களும் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். அ.தி.மு.க சார்பில் தற்போது குமாரபாளையம் அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அம்மா உணவகத்தில் அ.தி.மு.க சார்பில் இலவச உணவு வழங்குவது சம்பந்தமாக அங்குள்ள ஆணையரைத் தொடர்புகொண்டு பேசினேன். ஆனால், அவர் அலட்சியமாக எனது போன் இணைப்பைத் துண்டித்து விட்டார். இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளேன். அரசு விரும்பினால், நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கத் தயாராகவே உள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு