Published:Updated:

விளை நிலங்களில் மின் கோபுரங்கள்... வேதனையில் விவசாயிகள்!

விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள்

டெல்லியில் நடந்த உச்சக்கட்ட போராட்டம்!

விளை நிலங்களில் மின் கோபுரங்கள்... வேதனையில் விவசாயிகள்!

டெல்லியில் நடந்த உச்சக்கட்ட போராட்டம்!

Published:Updated:
விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
விவசாயிகள்

வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில், விவசாய நிலங்களில் இஷ்டம்போல விளையாடுகிறது மத்திய அரசு. விவசாயிகளின் பெரும்பிரச்னையாக மாறிவருகின்றன உயர் அழுத்த மின் கோபுரங்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். இந்தப் போராட்டத்தில் கர்நாடகம், ஆந்திரம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் விவசாயிகளும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

விளை நிலங்களில் மின் கோபுரங்கள்... வேதனையில் விவசாயிகள்!

உயர் அழுத்த மின் கோபுரங்கள், எரிவாயுக் குழாய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு, இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தது. திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈசன், இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த இந்தப் போராட்டத்தில், வைகோ உள்ளிட்ட தமிழக எம்.பி-க்கள் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விளை நிலங்களில் மின் கோபுரங்கள்... வேதனையில் விவசாயிகள்!

போராட்டத்தில் பங்கேற்ற விவசாயியான தூரன் நம்பியிடம் பேசினோம். ‘‘மின் கோபுரம் அமைச்ச புதுசுல, 110 கிலோ வாட் ஆம்பியர் (KVA) பவர் மட்டும்தான் போச்சு. ஆனா, இப்ப 400 கே.வி.ஏ, 800 கே.வி.ஏ, 1,200 கே.வி.ஏ-ன்னு மின்சாரம் போகுது. அதிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள் பயங்கரமா இருக்கு. ஏற்கெனவே நீங்க ஜூனியர் விகடனில் வெளியிட்டதுதான்... வெறும்காலுல கம்பிக்குக் கீழ நின்னு கையில டியூப்லைட்டைப் பிடிச்சாவே எரியுது. இதை ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியும் செயல்படுத்திக் காட்டியிருக்கார்.

விளை நிலங்களில் மின் கோபுரங்கள்... வேதனையில் விவசாயிகள்!

1885-ம் ஆண்டு டெலிகிராபிக் சட்டப்படி நிலத்தை எடுக்குறாங்க. அதன்படி, உரிமையாளருக்கு நிலம் சொந்தமானதா இருக்கும். மேல் பகுதியை இவங்க பயன்படுத்திக்குவாங்க. அந்தக் காலத்துல போஸ்ட் ஊன்றி, ஒரு கம்பியை டெலிபோனுக்காகக் கொண்டுபோனாங்க. அதனால விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனா, அதே சட்டத்தை வெச்சுக்கிட்டு இன்னிக்கு இவ்வளவு பெரிய கோபுரம் அமைச்சு, விவசாயத்தை அழிக்கிறாங்க. வழக்கு நீதிமன்றத்துல இருந்தப்ப, கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனா, உச்ச நீதிமன்றத்துல வழக்கு தள்ளுபடி ஆகிடுச்சு. அதனால, அரசாங்கத் தலையீடு அதிகமா இருக்கு. போராடுற விவசாயிகளை, போலீஸை வெச்சு மிரட்டுறாங்க; கைதுபண்ணி வழக்கு போடுறாங்க” என்றவர், டெல்லியில் நடத்திய போராட்டம் பற்றியும் கூறினார்.

எரியும் மின்விளக்குடன் கணேசமூர்த்தி
எரியும் மின்விளக்குடன் கணேசமூர்த்தி

“இதுமாதிரியான எங்க பிரச்னையை எல்லாம் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுபோறதுக்காகத்தான் இந்தப் போராட்டத்தை நடத்தினோம். பல மாநில விவசாயிகள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தாங்க. பிற மாநில விவசாயிகள் 500 பேர் கலந்துக்கிட்டாங்க. வரலாற்றுலேயே முதல் முறையா எங்க போராட் டத்துக்கு 27 எம்.பி-க்கள் வந்து தரவு கொடுத்தாங்க. கொங்கு மண்டலத்துல இருக்கும் எல்லா எம்.பி-க் களும் வந்தாங்க. திருமாவளவன் கலந்துக் கிட்டாரு. வைகோ, மூணு தடவை வந்து கலந்துக்கிட்டாரு. மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், அத்தனை பரபரப்புக்கு நடுவுல வந்து எங்ககிட்ட மனு வாங்கிக்கிட்டார். ‘இதற்காக ஒரு கமிட்டி அமைக்கிறேன். இதனால் என்னென்ன பிரச்னைகள் வருகின்றன எனப் பார்த்து, அதற்கேற்ப ஆவன செய்கிறேன்’னு வாக்குக் கொடுத்துட்டுப் போயிருக்காரு.

தூரன் நம்பி
தூரன் நம்பி

நாங்க, அரசாங்கத்தோட எந்தத் திட்டத்தையும் எதிர்க்கலை. கேரளத்துல போற மாதிரி சாலையோரமா கேபிள் மூலமா கொண்டுபோகச் சொல்றோம். அதையும் தாண்டி சில இடங்கள்ல அமைச்சுதான் ஆகணும்னா அதுக்கும் நாங்க மறுக்கலை. முறையான நிவாரணம் கொடுக்காம அடாவடித்தனமா செயல்படுறது, போலீஸை வெச்சு மிரட்டுறதைத்தான் வேணாம்னு சொல்றோம்’’ என்றார் தூரன் நம்பி.

விவசாயிகளிடம் கடிந்துகொண்ட டி.ஆர்.பாலு!

போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு தமிழக விவசாயிகள் டி.ஆர்.பாலுவைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போது அவர் நடந்துகொண்ட விதம் விவசாயிகளை வேதனையடைய வைத்திருக்கிறது. ‘‘பவர் லைன், கெயில் பைப், ஹைட்ரோ கார்பன் பிரச்னைக்கு எதிராகப் போராட்டம் நடத்துறோம். உங்க எம்.பி-க்களை அனுப்பிவையுங்க’’ என விவசாயிகள், டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை வைத்திருக் கிறார்கள். முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொண்ட பாலு, ‘‘அதெல்லாம் அனுப்ப முடியாது. நீங்க கேட்டா உடனே அனுப்பிடணுமா? கெயில் பைப் கொண்டு வந்ததே நான்தான். அதுக்கு எதிரா நானே எப்படிப் பேச முடியும்? எனக்கு நிறைய வேலையிருக்கு. எங்களுக்கு முதல் பிரியாரிட்டி வேலூர்தான். அதுக்கு அடுத்து உங்க பிரச்னையைப் பாப்போம். அதை நான் முடிவுசெய்ய முடியாது. தலைவர்கிட்ட கலந்துக்கிட்டு, அப்புறம் சொல்றேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நிலவிய பரப்பான சூழ்நிலையிலும், தேடி வந்து மனு வாங்கிச் சென்ற மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், விவசாயிகளிடம் காட்டிய கரிசனம்கூட தமிழக எம்.பி-யான டி.ஆர்.பாலு காட்டவில்லையே என்பதுதான் விவசாயிகளின் வேதனை.