Published:Updated:

``முஸ்லிம் நபர் எனக்கு உணவு டெலிவரி செய்யக் கூடாது..!" - இணையத்தில் விவாதப்பொருளான ஸ்க்ரீன்ஷாட்

விவாதப்பொருளான ஸ்க்ரீன்ஷாட்

ஹைதராபாத்தில் சமீபத்தில் ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்த ஒருவரின் `How To Reach' அறிவுறுத்தல் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகியிருக்கிறது.

``முஸ்லிம் நபர் எனக்கு உணவு டெலிவரி செய்யக் கூடாது..!" - இணையத்தில் விவாதப்பொருளான ஸ்க்ரீன்ஷாட்

ஹைதராபாத்தில் சமீபத்தில் ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்த ஒருவரின் `How To Reach' அறிவுறுத்தல் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகியிருக்கிறது.

Published:Updated:
விவாதப்பொருளான ஸ்க்ரீன்ஷாட்

ஹைதராபாத்தில் சமீபத்தில் ஸ்விக்கி செயலியில் உணவு ஆர்டர் செய்த ஒருவரின் அறிவுறுத்தல் சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகியிருக்கிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அண்மையில் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனத்தின் செயலியில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். அப்போது அந்த நபர், ``இந்த உணவு ஆர்டரை இஸ்லாமியர்கள் யாரும் எனக்கு டெலிவரி செய்யக் கூடாது" எனக் கண்டிப்புடன் குறிப்பிட்டிருக்கிறார்.

உணவு டெலிவரி
உணவு டெலிவரி

அந்த இந்து நபர், தான் மேற்கோளிட்டுக் குறிப்பிட்டிருந்ததை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஸ்க்ரீன்ஷாட் இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்த ஸ்க்ரீன்ஷாட்டைத் தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் தொழிலாளர் அமைப்பின் தலைவர் ஷைக் சலாவுதீன் என்பவர், ``நாங்கள் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என மத பேதமில்லாமல் அனைவருக்கும் உணவு டெலிவரி செய்வதற்காகவே பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்.

சர்ச்சை ஸ்க்ரீன்ஷாட்
சர்ச்சை ஸ்க்ரீன்ஷாட்

ஆனால், இத்தகைய கசப்பான சம்பவங்கள் எங்கள் மனதைப் புண்படுத்துகின்றன. எனவே, ஸ்விக்கி உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இவரின் ட்வீட் வைரலாகிவருகிறது. ஹைதராபாத்தில் இதுபோல சம்பவம் நடப்பது முதன்முறையல்ல... ஏற்கெனவே ஒருமுறை இஸ்லாமிய டெலிவரி பாய் அளித்த உணவை இந்து நபர் ஒருவர் ஏற்க மறுத்தது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.