Published:Updated:

பெண்கள் குறித்து சர்ச்சைக் கருத்து... `சக்திமான்’ முகேஷ் கன்னாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

முகேஷ் கன்னா

``பெண்கள் வரம்புகளுக்குள் இருக்கவும், மரபுகளை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்" - `சக்திமான்’ முகேஷ் கன்னா

பெண்கள் குறித்து சர்ச்சைக் கருத்து... `சக்திமான்’ முகேஷ் கன்னாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

``பெண்கள் வரம்புகளுக்குள் இருக்கவும், மரபுகளை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்" - `சக்திமான்’ முகேஷ் கன்னா

Published:Updated:
முகேஷ் கன்னா

90's கிட்ஸ்களின் ஃபேவரைட் தொடர்களில் ஒன்று `சக்திமான்.’ அப்போது முதல் இப்போது வரை சக்திமானாக நடித்த முகேஷ் கன்னாவின் நடிப்பின் தாக்கம் எல்லா 90'ஸ் கிட்ஸ்களிடமும் இன்னும் இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. இப்படி மக்களிடம் பிரபலமான `சக்திமான்’ புகழ் நடிகர் முகேஷ் கன்னா பீஸ்ம் ​​இன்டர்நேஷனல் என்ற யூடியூப் சேனலை நடத்திவருகிறார். அதில் அவ்வப்போது சில கருத்துகளைப் பேசி வீடியோவாகப் பதிவிடுவது வழக்கம்.

சக்திமான்
சக்திமான்
ட்விட்டர்

அப்படி அவர் சமீபத்தில் பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையாகியிருக்கிறது. அந்த வீடியோவில், ``உடலுறவை விரும்பி ஆண்களிடம் கேட்கும் பெண்கள் பெண்களே அல்ல. அவர்கள் பாலியல் தொழிலாளர்கள். இணையத்தில் பெண்களால் ஆண்கள் கவர்ந்திழுக்கப்படுவதால் ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்கள் மோசடிகளை நடத்த முயல்கிறார்கள். அப்பாவி ஆண்களை மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள். அவர்களின் நிர்வாணப் படங்களை அனுப்பி உங்களின் நிர்வாணப் படங்களை அனுப்பும்படி வற்புறுத்தி, பணத்துக்காக உங்களை மிரட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற சமூக ஊடக தளங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

முகேஷ் கண்ணா
முகேஷ் கண்ணா
ட்விட்டர்

பெண்கள் வரம்புகளுக்குள் இருக்கவும், மரபுகளை மதிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்" எனச் சர்ச்சைக்குரியவிதமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வெளியானதிலிருந்து முகேஷ் கன்னாவின் கருத்துகளுக்காக அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருகிறார்கள்.