Published:Updated:

இந்துக்கள் குறித்து அவதூறு பேச்சு; அமெரிக்க வாழ் இந்தியரைக் கைதுசெய்த போலீஸ் - என்ன நடந்தது?

அமெரிக்க வாழ் இந்தியர் கைது

``நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள். இது இந்தியா அல்ல. இதுபோன்று பொதுவெளியில் கேவலமாக வர வேண்டாம். இந்துக்களாகிய நீங்கள்தான் கேவலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என அவதூறாகப் பேசியிருக்கிறார் அந்த நபர்.

இந்துக்கள் குறித்து அவதூறு பேச்சு; அமெரிக்க வாழ் இந்தியரைக் கைதுசெய்த போலீஸ் - என்ன நடந்தது?

``நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள். இது இந்தியா அல்ல. இதுபோன்று பொதுவெளியில் கேவலமாக வர வேண்டாம். இந்துக்களாகிய நீங்கள்தான் கேவலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என அவதூறாகப் பேசியிருக்கிறார் அந்த நபர்.

Published:Updated:
அமெரிக்க வாழ் இந்தியர் கைது

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நான்கு அமெரிக்கா வாழ் இந்தியப் பெண்களை இனரீதியில் அவதூறாகப் பேசிய மெக்சிகன் பெண் கைதுசெய்யப்பட்டார். அந்தச் சம்பவம் இந்தியர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், அதே போன்ற சம்பவம் அமெரிக்காவில் மீண்டும் நடந்திருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கலிஃபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள உணவகத்துக்கு தனித்தனியே உணவருந்த சென்ற கிருஷ்ணன் ஜெயராமன், தேஜிந்தரால் சிங் (37) என்ற அமெரிக்க வாழ் இந்தியர் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்க வாழ் இந்தியர் தேஜிந்தரால் சிங்
அமெரிக்க வாழ் இந்தியர் தேஜிந்தரால் சிங்

அப்போது தேஜிந்தர் சிங், ``நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள். இது இந்தியா அல்ல. இதுபோன்று பொதுவெளியில் கேவலமாக வர வேண்டாம். இந்துக்களாகிய நீங்கள்தான் கேவலமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இந்தியாவுக்கு அவமானம். நீ அருவருப்பான நாய்” என்று வசைபாடியதுடன், கிருஷ்ணன் ஜெயராமன் இறைச்சி சாப்பிடவில்லை என்பதைக் குறிப்பிட்டு மாட்டிறைச்சியை அவரின் முகத்தில் வீசியதாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு உணவக ஊழியர் ஒருவர் காவல்துறையை அழைத்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் தேஜிந்தரால் சிங்கை கைதுசெய்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஃபிரீமாண்ட் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தேஜிந்தரால் சிங்
தேஜிந்தரால் சிங்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறையினர், ``வெறுப்பு சம்பவங்கள் மற்றும் வெறுக்கத்தக்க குற்றங்களை நாங்கள் தீவிரமாக கையாள்கிறோம். மேலும் அவை எங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் புரிந்துகொள்கிறோம். பாலினம், இனம், தேசியம், மதம் மற்றும் பிற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூக உறுப்பினர்களையும் பாதுகாக்க நாங்கள் இங்கு இருக்கிறோம். ஒருவரையொருவர் மதிக்கும்படி சமூகத்தை வலியுறுத்த விரும்புகிறோம், மேலும் இது போன்ற எந்தவொரு சூழ்நிலையையும் உடனடியாக புகாரளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.