Published:Updated:

“சிறைவாசிகளை சித்ரவதை செய்கிறார்!”

புழல் சிறை
பிரீமியம் ஸ்டோரி
புழல் சிறை

சர்ச்சையில் புழல் சிறைக் கண்காணிப்பாளர்...

“சிறைவாசிகளை சித்ரவதை செய்கிறார்!”

சர்ச்சையில் புழல் சிறைக் கண்காணிப்பாளர்...

Published:Updated:
புழல் சிறை
பிரீமியம் ஸ்டோரி
புழல் சிறை

புழல் சிறைக் கண்காணிப்பாளரான செந்தில்குமார் மீது, சிறைக்கைதிகளை சித்ரவதை செய்வதாக அடுக்கடுக்கான புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. அதேசமயம், “நான் நேர்மையாக இருப்பதால் என்னை மாற்றத் திட்டமிட்டு சிலர் சதிசெய்கிறார்கள்” என்று கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். என்னதான் நடந்தது புழல் சிறையில்?

2018-ம் ஆண்டு புழல் சிறைக் கண்காணிப் பாளராக செந்தில்குமார் பொறுப்பேற்றார். அதன் பிறகு, கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், அவர்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்படுவதாகவும் புகார்கள் வரத் தொடங்கின. இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார் என்ற சிறைவாசியை, மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளை அடைக்கும் சிறைக்குள் செந்தில்குமார் அடைத்துவைத்ததாக ஒரு புகார் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. பழிவாங்கும் நோக்கத்தில் அவர் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. ‘‘இனி, இதுபோல் நடக்காது’’ என்று அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

‘‘அதற்குப் பிறகும் செந்தில்குமார் தனது சித்ரவதை நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவில்லை. இதனால், சிறைவாசிகள் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தற்கொலை செய்துகொள்ளவும் வாய்ப்பு உண்டு’’ என்கிறார்கள், சிறைத்துறை வட்டாரத்தில் உள்ளவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘‘பிப்ரவரி 18-ம் தேதி ஒரு சம்பவம் நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் விஜயன் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் சிறைவாசியாக இருந்துவருபவர் கார்த்திக். இவர், கண்காணிப்பாளரின் உதவியாளர் மேகநாதனின் தூண்டுதல் பேரில், நைஜீரியாவைச் சேர்ந்த சிறைவாசி ஜேம்ஸை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் ஜேம்ஸ். இதுகுறித்து செந்திலிடம் புகார் தெரிவிக்கப் பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ‘எனக்கு எதிராக நடப்பவர்களுக்கு இப்படித்தான் நடக்கும்’ என மிரட்டியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதே நாளில், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி-யான ஆபாஷ்குமார் சிறைக்கு வந்தபோது, செந்தில் தன்னை தொந்தரவு செய்வதாக ஈரான் சிறைவாசி மசூத் முறையிட்டார். ஆனால், செந்தில் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுகுறித்து, தன் வழக்கறிஞர் மூலமாக தங்கள் நாட்டுத் தூதுவருக்கு ஒரு மனு அனுப்பியிருக்கிறார். செந்தில் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது, இரு நாடுகளின் நட்புறவில் பிரச்னையை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்றார்கள் வருத்தத்துடன்.

ஏற்கெனவே, சேலம் சிறையில் இலங்கையைச் சேர்ந்த சிறைவாசி செல்வம் என்பவரைத் தாக்கியதாக செந்தில்குமார்மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கைத் தொடர்ந்தவரும், வழக்கறிஞருமான புகழேந்தியிடம் பேசினோம்.

செந்தில்குமார் - புகழேந்தி
செந்தில்குமார் - புகழேந்தி

‘‘சேலம் சிறையில் சமூகச் செயற்பாட்டாளரான பியூஷ் மானுஷைத் தாக்கியது, தூக்குத்தண்டனைக் கைதியாக இருந்து ஆயுள்தண்டனை பெற்ற கன்னியாகுமரி சிறைவாசி தூக்கு செல்வம் என்பவரைத் தாக்கியது என அவர்மீது பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அடி, உதைதான் அவரது பதிலாக இருக்கிறது. சிறைத்துறை என்பது, சிறைவாசிகளைச் சீர்த்திருத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறை. குற்றத்தை உணரவைக்க வேண்டும். சிறைவாசிகளை, இந்தச் சமூகத்துக்கு ஏற்ற ஆட்களாகப் பக்குவப்படுத்த வேண்டும். இதுவே சிறைத்துறையினரின் கடமை. இதை செந்தில் உணர வேண்டும். சிறைவாசிகள் தவறு செய்தால், அவர்கள்மீது வழக்கு போடும் அதிகாரம் மட்டுமே சிறைத்துறையினருக்கு உண்டு. அடிக்கும் உரிமையில்லை. அரசும், கைதிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும்’’ என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள்குறித்து சிறைத் துறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் பேசினோம். ‘‘நீங்கள் கூறுவது மாதிரியெல்லாம் இல்லை. சரியாகத்தான் நடந்துகொள்கிறோம். நைஜீரிய சிறைக்கைதி தாக்கப்பட்டது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறோம். ஈரான் கைதி தொடர்பாக எந்தப் பிரச்னையும் நடக்கவில்லை. அது பொய்யான குற்றச்சாட்டு’’ என்றார்.

திரும்பவும் அவராக நம்மை தொடர்புகொண்டவர், ‘‘நான் மிகவும் நேர்மையாக நடந்துகொள்வதால், சிறையில் பலருக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலர் என் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டு இதுபோன்ற குற்றச்சாட்டுகளைப் பகிர்ந்துவருகின்றனர். மறைந்த ஆட்டோ சங்கரின் அண்ணன் ஆட்டோ மோகன் செல்லுலர் ஜெயிலில் இருக்கிறார். குரோஸ் என்கிற மைனர் குரோஸ் என்பவரும் செல்லுலர் ஜெயிலில் சிறையில் இருக்கிறார். இவர்களை பொது பிளாக்குக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர். அவர்களை மாற்றினால், அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதால் நான் மறுத்துவிட்டேன். இதனால், என்மீது பொய்ப்புகார் கொடுத்து என்னை இடமாற்றம் செய்யத் துடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சிறைக்குள் வந்து ஒவ்வொரு சிறைவாசியிடமும் தனித்தனியாகப் பேசி ஆய்வு நடத்தினார். ஒருவர்கூட என்மீது புகார் தெரிவிக்கவில்லை. நீங்களுமேகூட இதை உறுதிசெய்து கொள்ளலாம்” என்றார் விளக்கமாக.