Published:Updated:

``நித்யானந்தாவை முழுமையாக நம்பினோம்!'' - மகள் இறப்புக்கு சி.பி.ஐ விசாரணை கோரும் தாய் ஜான்சிராணி

சங்கீதா
சங்கீதா

`என் மகளின் மரணம் தொடர்பாக நிறைய போலி ஆவணங்களைத் தயார் செய்து வழக்கை மூடி மறைக்கப் பார்க்கிறார் நித்யானந்தா’

பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தனசர்மா என்பவரின் குழந்தைகளை, நித்யானந்தாவின் குஜராத் மாநில ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டிருப்பதாக எழுந்த சர்ச்சையில், போலீஸாரின் பிடி இறுகவே, வெளிநாடு தப்பிச் சென்றார் நித்யானந்தா. தொடர்ந்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன.

கரீபியன் தீவில் நித்யானந்தா... ஸ்கெட்ச் போட்ட `ரா'! இனி என்ன நடக்கும்? #VikatanExclusive

மேலும், கனடா நாட்டுப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டும் தொடர்கிறது. இந்த நிலையில்தான், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் 5 வருடங்களுக்கு முன், மர்மமான முறையில் இறந்துபோன சங்கீதாவின் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோருகிறார் அவரின் தாய் ஜான்சிராணி.

Nithyananda
Nithyananda

திருச்சி நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் – ஜான்சிராணி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். அவர்களில், மூத்த மகள் விஜி 10-ம் வகுப்பு படித்தபோது, அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இரண்டாவது மகள் சிவசங்கரி, காது கேளாத, வாய் பேச முடியாதவர். இந்தக் காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்தார் இளைய மகள் சங்கீதா. மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக நித்தியின் தியான வகுப்புகளுக்குச் சென்றவர், பயிற்சிக்காக ஆசிரமத்துக்குச் சென்றார்.

தொடர்ந்து சங்கீதா, கடந்த 2010-ம் ஆண்டு முதல் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்பில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி ஆசிரமத்திலேயே மர்மமான முறையில் இறந்தார்.

சங்கீதாவின் குடும்பத்தார்
சங்கீதாவின் குடும்பத்தார்

இதுகுறித்து, அவரின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அடக்கம் செய்யப்பட்ட சங்கீதாவின் உடலைத்தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜான்சிராணி, தன் மகளின் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிட கோரிவருகிறார்.

`கையில் கண்ணாடித் துண்டு; எரிக்கப்பட்ட பெண் உடல்!' - பிரியங்கா மரணத்தைத் தொடர்ந்து அடுத்த கொடூரம்

சங்கீதாவின் அம்மா ஜான்சிராணியிடம் பேசினோம்.

``எங்கள் குடும்பம் கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பம். அதனால் நித்யானந்தாவை முழுமையாக நம்பினோம். அந்தவகையில் என் மகளை நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்க அனுமதித்தேன். என் மகள் இறக்கும்போது அவருக்கு 24 வயசு. அவர் மாரடைப்பில் இறந்ததாகச் சொன்னார்கள். மேலும், என் மகளின் மரணம் தொடர்பாக நிறைய போலி ஆவணங்களைத் தயார் செய்து வழக்கை மூடி மறைக்கப் பார்க்கிறார் நித்யானந்தா.

பிரேதப் பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது...
பிரேதப் பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுக்கப்பட்டபோது...

என் மகள் சங்கீதா இறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு, ஆசிரமத்தில் இருக்கவே பிடிக்கவில்லை எனச் சொந்த ஊருக்குக் கிளம்பி வந்துவிட்டார். சிலவாரங்கள் கழித்து ஆசிரமத்திலிருந்து வந்தசிலர், அவர் ஆசிரமம் தொடர்பான சிசிடிவி பதிவுகளை எடுத்து வந்துவிட்டதாகக் கூறியதுடன், அதுகுறித்து விசாரிக்க அவரை மீண்டும் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு என் மகளை நாங்கள் தொடர்புகொள்ள முடியவில்லை. நேரில் சென்ற எங்களை ஆசிரமத்துக்குள் அனுமதிக்கவும் இல்லை. இந்த நிலையில், திடீரென ஒரு போன் வந்தது. அதில் பேசியவர்கள், `சங்கீதாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்றார்கள்.

ஜான்ஸிராணி
ஜான்ஸிராணி

பதறியடித்துக்கொண்டு ஓடினோம். அப்போது என் மகள் இறந்துவிட்டதாக, ஆசிரமத்துக்குச் சொந்தமான ஆம்புலன்ஸில் உடலை வைத்திருந்தனர். அடுத்து உடலை அங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். நாங்கள் போராடி உடலை ஊருக்குக் கொண்டுவந்தோம். தொடர்ந்து, பெங்களூரில் இருந்துவந்த நித்யானந்தாவின் ஆதரவாளர்களே சங்கீதாவின் உடலை அடக்கம் செய்துவிட்டுச் சென்றனர். இவையெல்லாம்தான் எங்களுக்குச் சந்தேகத்தை அளித்தது. மேலும், இறுதிச் சடங்கின்போது, சங்கீதாவின் உடலில் ஏராளமான காயங்கள் இருந்ததைப் பார்த்தோம்.

அதைத்தொடர்ந்துதான், சங்கீதாவின் சாவில் மர்மம் இருப்பதை உணர்ந்து, திருச்சி ராம்ஜிநகர், பெங்களூர் ராம்நகர் உள்ளிட்ட போலீஸாரிடம் புதைக்கப்பட்ட என் மகளின் உடலை மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்திட புகார் கொடுத்தோம். அதையடுத்து, கடந்த 2015 ஜனவரி 6-ம் தேதி, கர்நாடகாவிலிருந்து தனிப்படை போலீஸார் முன்னிலையில், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி உடற்கூறு இயல் தலைமை மருத்துவர் சரவணன் தலைமையில் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

தங்க நகைகளுடன் இடைவிடா நடனம்..! நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளுக்கு கொடுமை

அப்போது, என் மகளின் உடலில் உள்ளுறுப்புகள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. தமிழக மருத்துவர்கள் அறிக்கையிலும் அப்படிதான் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதை மறைக்கும் கர்நாடக போலீஸார், நித்யானந்தாவுக்கு சாதகமாகச் செயல்படுகிறார்கள். சில ஆவணங்களை அழித்துவிட்டார்கள். இதற்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நித்யானந்தா கொடுக்கும் அழுத்தத்தால், வழக்கறிஞர்களை மாற்றும் சூழல். இதுபோன்ற காரணங்களால் சங்கீதாவின் மரணம் தொடர்பான வழக்கு கிணற்றில் போட்டக் கல்லாகவே கிடக்கிறது. மகளின் இறப்பைத் தாங்க முடியாமல் சில வருடங்களுக்கு முன்பு என் கணவரும் இறந்துபோனார். தொடர்ந்து கடந்த 5 வருடங்களாக என் மகளின் சாவுக்கு நீதிகேட்டு போராடிவருகிறேன். இந்த வழக்கு சி.பி.ஐ வசம் மாறினால், எங்களுக்கு நீதி கிடைக்கும்” என்றார்.

பின் செல்ல