“இப்போது சங்கரமடத்துக்கு வருவதையே விஜயேந்திரர் தவிர்த்துவருகிறார். காரணம், மடத்துக்குள் சில விஷயங்கள் நடப்பதுதான்” என்று பகீர் கிளப்புகிறார்கள் மடத்துக்கு நெருக்கமானவர்கள்.

மடாதிபதிகள் வெளியூர் களுக்குச் சென்று தங்கி, பக்தர் களைச் சந்தித்து பிரசங்கம் நடத்துவது வழக்கம். காஞ்சி மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரரும் இது போன்ற பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட நாள்கள் வெளியூரிருந்தாலும், மீண்டும் தலைமை மடமான காஞ்சி மடத்துக்கு வந்துவிடுவார். ஜெயேந்திரரின் மறைவுக்குப் பிறகு காஞ்சி மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்ற விஜயேந்திரர் பக்தர்களைச் சந்திப்பது, மடத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை காஞ்சி காமகோடி மடத்தில்தான் தொடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காஞ்சி மடத்திலிருந்து பக்தர்களைச் சந்திப்பதற்கு முகாம்களுக்குப் புறப்பட்ட விஜயேந்திரர், மடத்துக்குத் திரும்பாமல் கேளம்பாக்கத்திலிருக்கும் காஞ்சி மடத்தின் முகாமிலேயே தங்கிவருகிறார். அதற்கு அவர் தரப்பிலிருந்து கசிந்திருக்கும் காரணம்தான் அதிர்ச்சியடைய வைக்கிறது.

மடத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். “ஜெயேந்திரர் மறைந்து சில நாள்கள் காஞ்சி மடத்திலிருந்து பணிகளை கவனித்து வந்தார் விஜயேந்திரர். ஆனால், ஜெயேந்திரர் வழக்கமாக அமர்ந்து பக்தர்களைச் சந்திக்கும் இடத்தில் விஜயேந்திரர் அமரவில்லை. ‘பெரியவா அமர்ந்த இடத்தில் பால பெரியவர் அமர விரும்பவில்லை’ என்று விஜயேந்திரர் சொன்னதாகச் சொன்னார்கள். கடந்த ஆண்டு மடத்தி லிருந்து முகாமுக்குக் கிளம்பினார் விஜயேந்திரர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அவருடைய முகாம் தொடர்ச்சியாக நடந்தது. `மடத்துக்கு வந்துவிடுவார்’ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முகாமை நீட்டித்துக் கொண்டே இருந்திருக்கிறார். இது குறித்து விஜயேந்திரருக்கு நெருக்க மானவர்கள் விசாரித்திருக்கிறார்கள்.

அதற்கு விஜயேந்திரர் தரப்பில், ‘மடத்திலிருந்தால் இரவில் என்னால் உறங்க முடியவில்லை. பெரியவர் ஜெயேந்திரர் மடத்துக்குள் உலவுவது போலவே எனக்கு உள்ளுணர்வு சொல்கிறது. பெரியவர் இருக்கும்போது வழக்கமாகக் கேட்கும் சில சத்தங்கள் இரவு நேரத்தில் கேட்கின்றன. அது எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது. அதனால், நான் கொஞ்ச நாள்கள் முகாமிலேயே இருக்கப்போகிறேன்’ என்று தகவல் கிடைக்க... கேட்டவர்கள் ஆடிப்போய்விட்டார்களாம். அவர் மட்டுமல்ல, மடத்தில் வேலை பார்ப்பவர்களும் இரவு நேரத்தில் அடிக்கடி ஆட்கள் நடப்பது, அசரீரிச் சத்தம் கேட்பது போன்ற சில விஷயங்களை உணர்வதாகச் சொல்கின்றனர். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஜெயேந்திரர் மறைந்த தினத்தன்று காஞ்சி மடத்தில் ஆராதனை நடந்தது. அதற்காகக் காஞ்சிபுரத்துக்கு வருகைதந்த விஜயேந்திரர், இரவில் மடத்தில் தங்காமல் மண்டபம் ஒன்றில்தான் தங்கியிருக்கிறார் ஆராதனையை முடித்துவிட்டு மீண்டும் அவர் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துவிட்டார்” என்கிறார்கள்.

இன்னொரு தகவலும் இப்போது காஞ்சி மடத்தை வட்டமடிக்கிறது. சங்கர மடத்தை விரைவில் ஆந்திர மாநிலத்துக்கு மாற்றும் திட்டத்தில் விஜயேந்திரர் இருப்பதாகச் சொல்கின்றனர். ஆந்திராவில் சங்கர மடத்துக்குப் பல இடங்களில் நிலங்கள் உள்ளன. அவற்றில் 600 ஏக்கர் பரப்பளவிலுள்ள ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.

இதுகுறித்து மடத்துக்கு நெருக்க மானவர்களிடம் கேட்டால், “60 ஆண்டுகளுக்கு முன்னால் கும்பகோணத்திலிருந்த சங்கர மடம் காஞ்சிபுரத்துக்கு மாறவில்லையா, அதுபோல எதுவும் நடக்கலாம்” என்றவர்கள், “காஞ்சி காமகோடி மடத்துக்குச் சொந்தமான அறக்கட்டளை மூலமாகவே இதுவரை வரவு செலவுக் கணக்குகள் பார்க்கப்பட்டன. தற்போது மடத்துக்குத் தேவையான பணம் காஞ்சி காமகோடி அறக்கட்டளையிலிருந்து ‘பிரதிக்ஷா’ என்ற மற்றோர் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்தே பணம் வெளியே செல்கிறது. இந்த பிரதிக்ஷா அறக்கட்டளை விஜயேந்திரர் தம்பி ரகு கண்காணிப்பில் செயல்படும் அறக்கட்டளையாகும்” என்றவர்கள், ``மடத்தின் நிர்வாகத்தில் தற்போது மத்தியில் ஆதிக்கம் செலுத்திவரும் மூத்த தலைவர் ஒருவரும் தலையிடுகிறார். அதனால், ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திவந்த ஆலோசகர் ஒருவருக்கும் அந்தத் தலைவருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன” என்று கூடுதல் தகவலையும் சொன்னார்கள்.

இதுகுறித்து காஞ்சி காமகோடி மடத்தின் மேலாளர் சுந்தரேசனிடம் கேட்டபோது. “இது போன்ற சர்ச்சைகள் எப்படிக் கிளம்புகின்றன என்று தெரியவில்லை. பெரியவர் யாத்திரையில் இருப்பதால் இப்போது மடத்துக்கு வருவதில்லை. ஆனால், ஆராதனைக்குக் காஞ்சி மடத்துக்கு வந்தார். தேவையில்லாமல் இது போன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்றார் காட்டமாக.

- நமது நிருபர்

புனிதநீர் சர்ச்சை!

சமீபத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் காஞ்சி மடத்துக்கு வந்திருந்தார். அப்போது ஜெயேந்திரர் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. இந்த பூஜைகளை ஜெயேந்திரரின் வாரிசு அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர்தான் செய்ய வேண்டுமாம். அப்படிப் பார்த்தால் விஜயேந்திரர் செய்திருக்க வேண்டும். ஆனால், மடத்தின் பணியாளர் ஒருவரை வைத்து பூஜைகளைச் செய்திருக்கிறார்கள். மேலும், ஆராதனை முடிந்த பிறகு புனிதநீரை அமைச்சர்மீது தெளித்தார்களாம். `வழக்கமாக காசி மகாராஜா, குவாலியர் மகாராஜா போன்ற அரச குடும்பத்தினருக்கு மட்டுமே தெளிக்க வேண்டிய புனிதநீரை அமைச்சர்மீது தெளித்துவிட்டார்கள்’ என்றும் ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.