Published:Updated:

``2 நிமிடப் புகழுக்கு அலைபவர்கள்..."- மகளைக் கிண்டலடித்த நபரால் கொதிக்கும் குஷ்பு!

ஒரு மர்மநபர் குஷ்பு மகள் அவந்திகா குறித்து உருவகேலி செய்து விமர்சித்துப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதில் கமென்ட் கொடுத்த குஷ்பு அந்த மர்ம நபரை வார்த்தைகளால் விளாசியிருக்கிறார்.

குஷ்பு
குஷ்பு

தீபாவளியையொட்டி இரண்டு நாள்களுக்கு முன்பாக குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், மகள் அவந்திகா சுந்தரின் புகைப்படத்தைப் பதிவேற்றியுள்ளார். அந்தப் பதிவில் கமென்ட் செய்த ஒரு மர்மநபர் குஷ்பு மகள் அவந்திகா குறித்து உருவகேலி செய்து விமர்சித்துப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதில் கமென்ட் கொடுத்த குஷ்பு அந்த மர்ம நபரை வார்த்தைகளால் விளாசியிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் இரண்டு நாள்களாக டிரெண்டாகப் பரவி வருகிறது. அந்த நபரின் கருத்தும் குஷ்புவின் கருத்தும் தற்போது ட்விட்டரில் நீக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக குஷ்புவிடம் பேசினோம். FFH

குஷ்பு
குஷ்பு

லண்டனில் இருந்த குஷ்பு நம்மிடையே இதுகுறித்து விரிவாகப் பேசினார். ``பெண்களை கேலிசெய்றது எப்போதும் எல்லோரும் செய்வதுதான்னு ஆகிப்போச்சு. இது ஓர் ஆணாதிக்க மனோபாவம். தன்னைப் பத்தின தாழ்வு மனப்பான்மை கொண்டவங்கதான் பிறரைத் தாழ்த்திப்பேச நினைப்பாங்க. சோறு ஊட்டி வளர்த்த பெத்தவங்க, தங்கள் பிள்ளைக்கு நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்க்கணும்.

Vikatan

சமூக வலைதளங்களைப் பொறுத்தவரையில், அவற்றிலுள்ள எல்லோருமே விமர்சகர்களாகவும், கருத்துகளைக் கொடுப்பதற்குத் தயாராகவும் மூக்கை நுழைத்துக்கொண்டு வர்றாங்க. கருத்துச் சுதந்திரம் தேவைதான். ஆனா அதைத் தவறா பயன்படுத்துறவங்க அதிகம் இருக்கிறாங்க. உருவகேலி செய்வது மிகவும் மோசமான குணம். தமிழிசையை கேலிசெய்வது தினமும் நடக்குது. இதை எதிர்த்து விமர்சிச்சு நான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிப் பதிவிட்டிருக்கேன். அரசியல்ரீதியாக கருத்து சொல்வது ஓகே. அதனால் உருவகேலி செய்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குஷ்பு
குஷ்பு

என் பாதுகாப்பும், என் குழந்தைகளோட பாதுகாப்பும் என் பொறுப்பில் இருக்கு. அதை நான் சரியா செய்வேன். நான் கேட்பதெல்லாம் ஒண்ணுதான். இதுவே, ரசிகர்களையோ, பொதுமக்களையோ எங்களைப்போன்ற பிரபலங்கள் இப்படிப் பேசினால் எல்லோரும் கொந்தளிப்பாங்க. எங்களை ஒருவர் இப்படிப் பேசியதைப் பற்றி ஏன் கருத்துச் சொல்ல மறுக்கிறீர்கள் என்பதுதான்.

நான் அந்த நபரின் கமென்டுக்கு எதிர்வினை ஆற்றியதற்குக் காரணம், என்னைப்போலவே எல்லாப் பெண்களும் தனக்கு நேர்கிற கொடுமைகளுக்கு எதிராக எழ வேண்டும், அந்த தைரியத்தை அவர்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

குஷ்பு
குஷ்பு

நான் செய்தால் என்னைப் போலவே பல பெண்களும் என்னை முன்னுதாரணமாக நினைச்சாவது முன் வருவாங்க. அப்படி நடந்தால்தான் நான் வளர்ச்சியடைந்து இருக்கிறேன் என்று அர்த்தம். இதுபோன்று தேவையில்லாத எண்ணத்துடன் கருத்து தெரிவிக்க வருபவர்கள் வெறும் இரண்டு நிமிடப் புகழுக்காகக் காத்திருப்பவர்கள். வேலை வெட்டி இல்லாத நபர்கள் இவர்கள்" என்றார் காட்டமாக.