Published:Updated:

ஆர்டர் செய்த உணவுடன் வந்த குளிர்பானத்தில் சிறுநீர் - மன்னிப்புக் கோரிய பிரபல நிறுவனம்!

லண்டனில், ஆர்டர் செய்த உணவுடன் வந்த கோக் பாட்டிலில், சிறுநீர் நிரப்பப்பட்டிருந்தது வாடிக்கையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலக அளவில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனம் ஹலோஃப்ரெஷ் (HelloFresh). மீல் கிட் (Meal Kit) எனப்படும், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் இடு பொருள்களைக் கொண்டு உணவு தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவையை இந்நிறுவனம் வழங்கிவருகிறது.

கோக் பாட்டிலில் சிறுநீர்
கோக் பாட்டிலில் சிறுநீர்

அப்படியொரு மீல் கிட்டை ஆர்டர் செய்த லண்டனைச் சேர்ந்த ஆலிவர் மெக்மனாஸ் என்பவருக்கு வந்த பொருளால் பெரும் சர்ச்சை எழுந்தது. உணவுடன் வரும் கோக் குளிர்பானத்தில், சிறுநீர் நிரப்பப்பட்டிருந்ததே சர்ச்சைக்குக் காரணம்.

இது குறித்து ட்விட்டரில் மெக்மனாஸ் புகைப்படத்துடன் ஹலோஃப்ரெஷ் நிறுவனத்திடம் தனது புகாரைப் பதிவு செய்தார். இந்த ட்வீட் பலரின் கவனத்தை ஈர்த்தது. பலரும் இதைக் கண்டித்து கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். இந்நிலையில், ஹலோஃப்ரெஷ் நிறுவனத்திலிருந்து ஆலிவரை தொடர்புகொண்டு பதிலளித்தனர்.

இந்த விவகாரம் குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,`இந்தத் தவறுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறு நடந்திருக்கிறது. எங்கள் விநியோக நிறுவனத்துடன் சேர்ந்து, நாங்கள் அனுப்பிய பெட்டியுடன் , சிறுநீர் பாட்டில் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை தீவிரமாக விசாரித்துவருகிறோம்’’ என்று கூறினார்.

`ஃப்ரியா இருந்தா வாங்களேன் ஃப்ளைட்ல ரவுண்ட் போகலாம்!’: ட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு சுவாரஸ்யம்

மேலும், ``நாங்கள் மெக்மனஸிடம் நேரடியாக மன்னிப்புக் கோரியுள்ளோம். இது மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடுமையாக உழைத்துவருகிறோம். இதில் எங்கள் நிறுவனத்தின் மீது முழுமையாகக் குறைகூற முடியாது. ஏனெனில் மெக்மனாஸிடம் கொடுக்கப்படும்போது, உணவுப் பெட்டி திறக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது. அதனால் இடையில் விநியோகம் செய்த நபர் அல்லது ஓட்டுநர்களால் இவை நிகழ்ந்திருக்கலாம்” என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு