Published:Updated:

`மோடியிடம் என்ன பேசுவீர்கள்..?' அழகிப்போட்டியில் போட்டியாளர் சொன்ன வைரல் பதில்!

மிஸ் கோஹிமா 2019 அழகிப்போட்டி - நெட்டிசன்களிடையே சர்ச்சைக்குரிய பேசுபொருளாகி இருக்கும் போட்டியாளரின் பதில்.

மிஸ் கோஹிமா 2019 அழகிப்போட்டி
மிஸ் கோஹிமா 2019 அழகிப்போட்டி ( Nagalandpost.com )

நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமாவில் நடைபெற்ற 'மிஸ் கோஹிமா 2019' அழகிப்போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ஆறு போட்டியாளர்களுக்கிடையே கேள்வி, பதில் சுற்று நடைபெற்றது. 

க்ரிலிவினியோ சோஹு
க்ரிலிவினியோ சோஹு
easternmirrornagaland.com

இதில் பங்கேற்ற 19 வயது க்ரிலிவினியோ சோஹுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

இப்போட்டியின் ஃபர்ஸ்ட் ரன்னர் அப் டைட்டிலை வென்ற க்ரிலிவினியோ சோஹு சோஷியல் மீடியாக்களில் சர்ச்சைக்குரிய விவாதப்பொருளாக மாறியுள்ளார்.

மிஸ் கோஹிமா 2019
மிஸ் கோஹிமா 2019
morungexpres.com

போட்டியின் நடுவர்களில் ஒருவர், ``நம்முடைய நாட்டுப் பிரதம மந்திரி மோடி, தன்னுடன் பேசுவதற்கு உங்களுக்கு அழைப்பு விடுத்தால், என்ன பேசுவீர்கள்?'' என க்ரிலிவினியோ சோஹுவிடம் கேட்டார்.

சிறிது நொடிகள் சிந்தித்து பதிலளித்த க்ரிலிவினியோ, ``மாடுகளுக்கு பதிலாக பெண்களின் மேல் அதிக கவனம் செலுத்துங்கள் எனக் கூறுவேன்'' என்றார். அதுவரை நிசப்தமாக இருந்த பார்வையாளர்கள், கைதட்டி ஆரவாரமிட்டனர்.

மோடியின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என இருதரப்பினரும் க்ரிலிவினியோ சோஹுவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சோஷியல் மீடியாவில் காரசாரமாக விவாதமிட்டு வருகின்றனர்.

சில நெட்டிசன்கள் மோடிக்கு எதிராகவும், பாலிவுட் செலிபிரிட்டிகளை வம்பிழுத்தும் தங்களுடைய கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கமிருக்க, பல செய்தி ஊடகங்கள் ஃபர்ஸ்ட் ரன்னர் அப் க்ரிலிவினியோ சோஹு அளித்த இந்தப் பதிலை, இரண்டாவது ரன்னர் அப் டைட்டிலை வென்ற 'விக்குனு சாச்சு' அளித்த பதிலாக தவறுதலாகப் பதிவிட்டு வருகின்றன.