Published:Updated:

கால்மீது பட்டால் மூளையைக் குழப்பி திசைமாறி போகச் செய்யும் செடி; உங்களுக்குத் தெரியுமா?

மூளையைக் குழப்பி வழிதவறிப் போகச்செய்யும் தாவரம்! ( Image by OpenClipart-Vectors from Pixabay )

இதைப்போன்று 30 - 40 வகையான சர்ச்சைக்குரிய தாவரங்கள் உள்ளன. அவை பற்றிய குறிப்புகள் நூலில் இடம்பெற்றுள்ளன. அதேபோல மலைகளிலுள்ள சுனைகளில் உதக நீர் என்ற ஒருவகை நீர் இருக்கும். அது உடலில் பட்டால் கல்லாகிவிடுவார்கள் என்பார்கள்.

கால்மீது பட்டால் மூளையைக் குழப்பி திசைமாறி போகச் செய்யும் செடி; உங்களுக்குத் தெரியுமா?

இதைப்போன்று 30 - 40 வகையான சர்ச்சைக்குரிய தாவரங்கள் உள்ளன. அவை பற்றிய குறிப்புகள் நூலில் இடம்பெற்றுள்ளன. அதேபோல மலைகளிலுள்ள சுனைகளில் உதக நீர் என்ற ஒருவகை நீர் இருக்கும். அது உடலில் பட்டால் கல்லாகிவிடுவார்கள் என்பார்கள்.

Published:Updated:
மூளையைக் குழப்பி வழிதவறிப் போகச்செய்யும் தாவரம்! ( Image by OpenClipart-Vectors from Pixabay )

மனித மூளையின் எல்லைக்கு எட்டாத எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் பல கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும் நம்மிடையே உலாவுவது வழக்கம். மனிதனால் முழுமையான புரிதலுக்கு வர முடியாத கடல், ஆகாயம், வனங்கள் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் பற்றிய கதைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அப்படி ஒரு சம்பவம் அண்மையில் தமிழகத்தில் நடந்துள்ளது.

Forest
Forest
Pixabay

கோவை மாவட்டம், வால்பாறையின் அருகில் அக்காமலை எஸ்டேட்டில் வேலை செய்து வரும் நடுத்தர வயது பெண், வீட்டில் அடுப்பெரிக்க விறகு தேடி அருகிலுள்ள ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றிருக்கிறார். வனத்துக்குள் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. வனத்துறை, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இறுதியாக 3 நாள்களுக்குப் பிறகு, சின்ன கல்லாறு பகுதியில் மிகவும் பலவீனமான நிலையில் அந்தப் பெண்ணை மீட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்று நாள்களாக எதுவும் சாப்பிடாததால் மிகவும் பலவீனமாக இருந்த அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு, சற்று தேறியவரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் தெரிவித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. `தான் காட்டுக்குள் சென்றபோது தன் காலில் ஒரு செடி உரசியது. அரிக்கிறதே என்று கீழே குனித்து பார்த்ததும் நிலை தடுமாறிவிட்டேன். பிற திசை மாறிச் சென்றுவிட்ட'தாகத் தெரிவித்துள்ளார்.

Forest
Forest

இதனால்தான் வழக்கமாகச் செல்லும் இடத்துக்கு விறகு சேகரிக்கச் சென்றபோதும் வழி தவறிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். அவர் அளித்தத் தகவலின் பேரில் அந்தச் செடி பற்றி ஆய்வு நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாகவே, வனத்துக்குள் ஆள் விழுங்கும் மரம், திசை திருப்பான் செடி எனப் பல்வேறு செவி வழிச் செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதெல்லாம் உண்மையா, இதுபோன்ற செடிகள் காடுகளுக்குள் இருக்குமா என்று மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் கேட்டோம்: ``சிறுகுறிஞ்சான் என்ற மூலிகையை மென்றுவிட்டு வாயில் சர்க்கரையைப் போட்டால் அதன் ருசியே தெரியாது. மணலை மெல்லுவது போன்று தெரியும். அந்த மூலிகை சுவை அரும்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தி சுவை தெரியாமல் செய்துவிடுகிறது. அதுபோல இந்தத் தாவரம் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதால் திசை தெரியாமல் போய்விடும் என இலக்கிய நூல்களில் குறிப்பு உள்ளது. அந்தத் தாவரத்தின் பெயர் `திகைப்பூண்டு.'

plant
plant

இந்தச் செடியை மிதித்தால் திகைத்துவிடுவார்கள். அதற்குப் பிறகு, திக்கு திசை தெரியாமல் போய்விடும் என்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை யாரும் அதைக் கண்ணால் பார்த்ததற்கான சான்று இல்லை. அந்தமான் தீவுகளில் சில இடங்களில் இருப்பதாகவும் பதிவுகள் உள்ளன.

மனிதனுடைய நரம்பு மண்டலத்தின் நரம்புகள் அனைத்தும் பாதத்தில்தான் முடிகிறது. அந்தச் செடி பாதத்தில் படும்போது அது நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, வழி தவறிப் போக வைத்திருக்கலாம். அதற்கான சாத்தியம் இருக்கிறது.

இல்லையென்றால் அந்த நபருக்கு ஏற்கெனவே மனநலம் தொடர்பான பிரச்னை இருந்திருந்தாலும் அவர் வழி தவறியிருக்கலாம். அதனால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.

சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு
சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு

நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அந்தத் தாவரத்துக்கு நல்ல வினைகளை ஏற்படுத்தும் தன்மை இருக்கலாம். ஆனால், சரியான ஆராய்ச்சிகளின் மூலம்தான் அதை உறுதிசெய்ய முடியும். எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது அதுபற்றி உடனடியாக ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம்.

சர்ச்சைக்குரிய தாவரங்கள்!

இதைப்போன்று 30 - 40 வகையான சர்ச்சைக்குரிய தாவரங்கள் உள்ளன. அதைப் பற்றிய குறிப்புகள் நூலில் இடம்பெற்றுள்ளன. அதேபோல மலைகளிலுள்ள சுனைகளில் உதக நீர் என்ற ஒருவகை நீர் இருக்கும். அது உடலில்பட்டால் கல்லாகி விடுவார்கள் என்பார்கள். திகைப்பூண்டு, செங்குமரி (சிவப்பு கற்றாழை), உதக நீர் உள்ளிட்ட அரிய விஷயங்கள் பற்றிய குறிப்பு `கோரக்கர் மலை வாகடம்' என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.

திருவனந்தபுரத்தில் தொடங்கி ஊட்டி வரையுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன மூலிகைகள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோரக்கர் மலை வாகடத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த நூலில் வரைபடம் போன்று குறிப்புகள் இருக்கும். உதாரணத்துக்கு, இந்த இடத்தில் அரச மரம் வரும். அங்கிருந்து பத்து காத தூரம் நடந்து சென்றால் அங்கு ஒரு சுனை இருக்கும். அதைத் தாண்டிப் போனால் ஒரு குளம் இருக்கும் என்பதுபோல தெளிவான குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். அந்த நூலில்தான் இதுபோன்ற தாவரங்களைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

Forest
Forest

எந்த மூலிகையும் தாவரமும் மனிதர்கள் அதைத் தொந்தரவு செய்யாத வரையில் அழியாமல் இருந்துகொண்டே இருக்கும். குடியேற்றம், நகர்ப்புற விரிவாக்கம், சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களால்தான் பல மூலிகைகள், தாவரங்கள் அழிவைச் சந்திக்கின்றன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism