Published:Updated:

`இதை வாங்க அதிகாரம் இல்லை!' - தமிழக அரசின் கடனை அடைக்க செக் கொடுத்த நபர்; திருப்பி அனுப்பிய ஆட்சியர்

செக்கோடு 'யோகா' ரமேஷ் ( நா.ராஜமுருகன் )

முதல்வருக்குக் கடிதம் எழுதி, அவருக்கு இந்த `செக்’கை அனுப்பவிருக்கிறேன். 'எங்க குடும்பத்தின் பேரில் அரசு வாங்கிய கடனுக்கான வரவு செலவைக் கொடுக்கணும்னு கோரிக்கைவைக்கிறேன். இதை ஆட்சியரும், ஆர்.டி.ஓ-வும் வாங்க மறுத்ததையும் கடிதத்தில் குறிப்பிடவிருக்கிறேன்.

`இதை வாங்க அதிகாரம் இல்லை!' - தமிழக அரசின் கடனை அடைக்க செக் கொடுத்த நபர்; திருப்பி அனுப்பிய ஆட்சியர்

முதல்வருக்குக் கடிதம் எழுதி, அவருக்கு இந்த `செக்’கை அனுப்பவிருக்கிறேன். 'எங்க குடும்பத்தின் பேரில் அரசு வாங்கிய கடனுக்கான வரவு செலவைக் கொடுக்கணும்னு கோரிக்கைவைக்கிறேன். இதை ஆட்சியரும், ஆர்.டி.ஓ-வும் வாங்க மறுத்ததையும் கடிதத்தில் குறிப்பிடவிருக்கிறேன்.

Published:Updated:
செக்கோடு 'யோகா' ரமேஷ் ( நா.ராஜமுருகன் )

தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, `ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ. 2,63,976 கடன் இருக்கிறது' என்று தெரிவித்தார். இந்தநிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த 'யோகா' ரமேஷ் என்பவர், அந்தத் தொகைக்குரிய செக்கை, நாமக்கல் ஆர்.டி.ஓ-விடம் கொடுக்க முயன்றது வைரலானது. இந்தநிலையில், நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங்கைச் சந்தித்து, அந்தச் செக்கை கொடுக்க முயல, 'இதை வாங்கும் அதிகாரம் எனக்கில்லை' என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், `முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த செக்கை அனுப்பவிருக்கிறேன்' என்று 'யோகா' ரமேஷ் சொல்ல, விவகாரம் நான்ஸ்டாப்பாகத் தொடர்கிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் 'யோகா' ரமேஷ்
ஆட்சியர் அலுவலகத்தில் 'யோகா' ரமேஷ்
நா.ராஜமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாமக்கல் மாவட்டம், மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்தவர் 'யோகா' ரமேஷ். யோகா மாஸ்டரான இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டுவருகிறார். சமீபத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, 'ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2,63,976 கடன் இருக்கிறது' என்று தெரிவித்தார். இந்தநிலையில், 'என் குடும்பத்தின் தலையை அடமானமாக வைத்து, தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்குரிய தொகையை நான் கொடுக்கிறேன். ஆனால், அந்த கடனுக்குரிய வரவு செலவு கணக்கு டீடெயிலை எனக்கு கொடுக்கணும்' என்று நாமக்கல் ஆர்.டி.ஓ கோட்டைக்குமாரிடம் ரூ. 2,63,976-க்கான செக்கை வழங்கினார் ரமேஷ்.

செக்கோடு 'யோகா' ரமேஷ்
செக்கோடு 'யோகா' ரமேஷ்
நா.ராஜமுருகன்

அதைக் கண்டு ஜெர்க்கான ஆர்.டி.ஓ பதறிப்போய், 'இதை வாங்கும் அதிகாரம் எனக்கு இல்லை' என்று கூறி, அவரை அனுப்பிவைத்தார். யோகா ரமேஷ் கையோடு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கை சந்திக்கச் சென்றார். ஆனால், அவரின் உதவியாளர், `மேடம் பிஸியாக இருக்காங்க' என்று கூறினார். இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் வைரலானது. விடாக்கண்டனாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கைச் சந்தித்த 'யோகா' ரமேஷ், செக்கைக் கொடுக்க, 'இதை வாங்கும் அதிகாரம் எனக்கு இல்லை' என்று கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து, 'யோகா' ரமேஷிடம் பேசினோம். ``ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும்போதும், 'இவ்வளவு லட்சம் கடன் வாங்குறோம், அவ்வளவு லட்சம் கடன் இருக்கு'னு சொல்றாங்க. ஆனா, எதுக்காக வாங்குறாங்க, என்ன விஷயத்துக்காக செலவு பண்ணினாங்கனு பொதுமக்களுக்கு விவரம் தெரிவிப்பதில்லை. ஒருபக்கம், நம்ம தலையைவெச்சு கடன் வாங்கும் அரசு இயந்திரத்திலுள்ள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திடீர்னு கோடீஸ்வரர்களாக ஆகறாங்க. ஆனா, நாம இன்னும் ஏழையாகுறோம். தனிப்பட்ட முறையிலும், அரசாங்க வாயிலாகவும் கடன்காரங்களாக ஆகுறோம். அதனால்தான், என் தலையை அடமானம்வெச்சு, அரசு வாங்கிய கடனை அடைக்க இந்த செக்கை நாமக்கல் ஆர்.டி.ஓ கோட்டைக்குமாரிடம் கொடுத்தேன். 'எனக்கு இதை வாங்கும் அதிகாரம் இல்லை'னு சொல்லி, என்னை வெளியே அனுப்பிட்டார்.

'யோகா' ரமேஷ்
'யோகா' ரமேஷ்
நா.ராஜமுருகன்

அதனால், கலெக்டரைப் பார்க்கப் போனேன். 'மேடம் பிஸி'னாங்க. இரண்டாவது நாளும் போனேன். ஆனால், விடாமல் 16 - ம் தேதி ஆட்சியரை சந்தித்து, செக்கைக் கொடுத்தேன். 'எனக்கு இதை வாங்கும் அதிகாரம் இல்லை'னு சொல்லிட்டாங்க. அதனால், நேரடியாக முதல்வருக்குக் கடிதம் எழுதி, அவருக்கு இந்த செக்கை அனுப்பவிருக்கிறேன். அதோடு, 'எங்க குடும்பத்தின் பேரில் அரசு வாங்கிய கடனுக்கான வரவு செலவைக் கொடுக்கணும்னு கோரிக்கை வைக்கவிருக்கிறேன். இந்த செக்கை ஆட்சியரும், ஆர்.டி.ஓ-வும் வாங்க மறுத்ததையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவிருக்கிறேன். அப்பாவி மக்களைவைத்து அரசுகள் லட்சங்களில் நடத்தும் விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வரை, இந்த செக் அனுப்பும் மேளாவைத் தொடர்வேன்" என்றார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism