Election bannerElection banner
Published:Updated:

நாமக்கல் : முழு ஊரடங்கு; உடலை தகனம் செய்ய மறுத்த மின்மயான நிர்வாகம் - அவதிப்பட்ட உறவினர்கள்

பரமத்தி வேலூர் மின் மயானம்
பரமத்தி வேலூர் மின் மயானம் ( நா.ராஜமுருகன் )

அங்கு இருந்தவர், `பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் உடலை எரிக்க முடியாது. இன்று விடுமுறை. நீங்கள் பிணத்தை வீட்டில் வைத்திருந்துவிட்டு, நாளை காலை கொண்டு வாங்க. உடலை எரித்துத் தர்றோம்' என்று கூறியிருக்கிறார். இதனால், அவரது பிணத்துக்கு இறுதிச் சடங்கு நிகழ்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

பரமத்தி வேலூரிலுள்ள மின்மயானத்தில் ஊரடங்கைக் காரணம் காட்டி இறந்தவர் உடலை எரிக்க மறுத்ததால், 30 கிலோமீட்டர் கொண்டு சென்று பிணத்தை எரித்த சம்பவம், அந்தப் பகுதி மக்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது.

பரமத்தி வேலூர்
பரமத்தி வேலூர்
நா.ராஜமுருகன்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்களின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் பொது நிதி மற்றும் பல்வேறு நிதிகளிலிருந்து மின் மயானம் கட்டப்பட்டிருக்கிறது. பரமத்தி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த மின் மயானம், அரிமா சங்க அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருக்கிறது.

நாமக்கல்: கிராமத்து வீட்டில் பாலியல் தொழில்; 10 பெண்கள் மீட்பு! - பெண் உட்பட 5 பேர் கைது

பரமத்தி வேலூர், சுல்தான் பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் (45) என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடலை மின் மயானத்தில் தகனம் செய்யக் கொண்டு சென்றனர். ஆனால், மின்மயானத்தை நிர்வகித்தவர்கள், ``முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் இன்று உடலை எரிக்க முடியாது. இன்று விடுமுறை. எனவே, நீங்கள் பிணத்தை வீட்டில் வைத்திருந்துவிட்டு, நாளை காலை கொண்டு வாருங்கள்" என்று கூறியிருக்கின்றனர். இதனால், இறுதிச் சடங்குகள் செய்வது எப்படி எனத் தெரியாமல் உறவினர்கள் தவித்தனர்.

பரமத்தி வேலூர் மின் மயானம்
பரமத்தி வேலூர் மின் மயானம்
நா.ராஜமுருகன்

இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ், பரமத்தி வேலூர் சரக டி.எஸ்.பி ராஜா ரணவீரன், பரமத்தி வேலூர் தாசில்தார், பரமத்தி வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய நபர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மின் மயானத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் பார்த்திபனின் உடலை தகனம் செய்ய மறுத்துவிட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால், வேறு வழியின்றி பார்த்திபன் உடலை 30 கிலோமீட்டர் தாண்டி, அருகிலுள்ள மாவட்ட தலைநகரான கரூர் மின் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்தனர். இதனால், பரமத்தி வேலூர் பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு