Published:Updated:

` கொலை வழக்கை விசாரிக்க வந்தவர்!' - நெல்லை எஸ்.பி-யிடம் சிக்கிய போதை இன்ஸ்பெக்டர்

வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் பயிற்சிக்காக விடுமுறையில் சென்றிருப்பதால், அருகில் உள்ள சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டரான ராஜாராம் விசாரிக்கச் சென்றுள்ளார்.

இன்ஸ்பெக்டர் ராஜாராம்
இன்ஸ்பெக்டர் ராஜாராம்

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் உப்பாத்து காலனி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பாத்திரக்கடை உரிமையாளரான மாரியப்பன் என்பவர் மது அருந்திக்கொண்டிருந்திருக்கிறார். அவர் போதையில் இருப்பதை அறிந்த ஒரு கும்பல், டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றது.

Vikatan

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அதனால் சம்பவ இடத்துக்குப் போலீஸார் சென்று விசாரணை நடத்துமாறு மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் உத்தரவிட்டார். வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் பயிற்சிக்காக விடுமுறையில் சென்றிருப்பதால், அருகில் உள்ள சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டரான ராஜாராம் விசாரிக்கச் சென்றுள்ளார்.

Vikatan

வீரவநல்லூர் பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடந்துவரும் நிலையில், பிரச்னையின் தீவிரம் கருதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அருண் சக்திகுமார் அங்கு வந்திருக்கிறார். அப்போது அங்கு விசாரித்துக்கொண்டிருந்த ஆய்வாளர் ராஜாராம் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவர் மீது அதிருப்தியடைந்த காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், இன்ஸ்பெக்டர் ராஜாராமைக் கண்டித்ததுடன் அவரைப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.

``சரியா விசாரிக்கல; டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுங்க!" - எஸ்.பிக்கு உத்தரவிட்ட நீதிபதி!

அங்கு நடந்த பரிசோதனையில், அவர் மது அருந்திவிட்டு பணிக்கு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.ஐ.ஜி-யிடம் புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் துறைரீதியான விசாரணை நடத்தப்படுவதால் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.