Published:Updated:

“ஸ்டெர்லைட் ஆலையைத் திறங்க!”

ஸ்டெர்லைட் ஆலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டெர்லைட் ஆலை

சர்ச்சையைக் கிளப்பும் ஊராட்சி மன்றத் தலைவர்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ‘ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்’ என்று பலரும் கோரிக்கை வைத்துவருகிறார்கள். இந்தநிலையில், ‘ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து மூன்று ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஒருவரும் கலெக்டரிடம் மனு கொடுத்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். இதில், தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவரும் மனு கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் (அ.தி.மு.க ஆதரவாளர்), தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளரும், இராஜாவின்கோவில் ஊராட்சி மன்றத் தலைவருமான அன்புராஜ், சில்லாநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி (அ.தி.மு.க ஆதரவாளர்), புதூர்பாண்டியாபுரம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் செந்தில்குமார் (புதிய தமிழகம் கட்சியின் ஆதரவாளர்) ஆகிய நால்வர்தான் இப்படி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

பாத்திமா பாபு - அன்புராஜ் -  சந்தீப் நந்தூரி - அனிதா ராதாகிருஷ்ணன்
பாத்திமா பாபு - அன்புராஜ் - சந்தீப் நந்தூரி - அனிதா ராதாகிருஷ்ணன்

இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபுவிடம் பேசினோம். “உள்ளாட்சிப் பிரதிநிதியாக இருந்துகொண்டு அரசின் கொள்கை முடிவுக்கு எதிராகச் செயல்பட்ட ஊராட்சித் தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நாங்களும் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்’ என்று தி.மு.க வலியுறுத்திவரும் நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவரும் ஆலையைத் திறக்கக் கோரி மனு அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.

ஆலையை திறக்கக் கோரிய தி.மு.க-வைச் சேர்ந்த அன்புராஜிடம் பேசினோம். “ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பில் பல உதவிகள் எங்கள் கிராமத்துக்கு கிடைத்துவந்தன. அவையெல்லாம் நின்றுவிட்டன. ‘ஆலை திறக்கப்பட்டால், மீண்டும் நலத்திட்ட உதவிகள் தொடரும்’ என்ற ஊர் மக்களின் கோரிக்கையைத்தான் மனுவாக அளித்தேன். கட்சி சார்பாக அளிக்கவில்லை” என்றார். மற்ற மூன்று ஊராட்சித் தலைவர்களும், “நலத்திட்ட உதவிகளை எதிர்நோக்கித்தான் மனு அளித்தோம்” என்கின்றனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “இது தொடர்பாக அன்புராஜிடம் விசாரித்தேன். ஊர் மக்கள் வற்புறுத்தலால்தான் மனு அளித்ததாகச் சொன்னார். கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, கோரிக்கை மனு அளித்தது தவறு என உணர்ந்துகொண்டதாக மன்னிப்புக் கடிதமும் அளித்துள்ளார்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பேசினோம். “புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை அளிப்பது அவர்களின் உரிமை. தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. ‘ஆலையைத் திறக்கக் கூடாது’ என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. இது அரசின் கொள்கை முடிவு” என்றார்.