Published:Updated:

அடுத்தடுத்து தற்கொலை முயற்சி! - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்

தீக்குளிக்க முயன்ற முதியவர்
News
தீக்குளிக்க முயன்ற முதியவர்

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த முதியவர், தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து ஏராளமானோர் மனு அளிக்க வருவது வழக்கம். கடந்த ஆண்டு, செங்கோட்டையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தனது இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தீக்குளிப்பைத் தடுத்த போலீஸார்
தீக்குளிப்பைத் தடுத்த போலீஸார்

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்திலிருந்த 10 வாயில்களும் அடைக்கப்பட்டு, இரு வாசல்கள் வழியாக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிலும், போலீஸாரின் பலத்த பாதுகாப்புக்கிடையே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தநிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் தீக்குளிக்க முயலும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த வாரம் நடந்த கூட்டத்தின்போது, வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றப்பட்ட இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். பலத்த பாதுகாப்பையும் மீறி இந்தச் சம்பவம் நடந்ததால், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் முதியவர்
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் முதியவர்

இன்று நடந்த கூட்டத்தின்போது மனு அளிக்க வந்த மானூர் அருகே உள்ள ரஸ்தா கிராமத்தைச் சேர்ந்த போதர் என்பவர், தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். காரணம் விசாரித்தபோது, தனக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தில் மற்றொருவர் கட்டடம் கட்டுவதாகவும், அதுகுறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தீக்குளிக்க முயன்றதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் ஊற்றிய போதர், தீ வைக்க முயற்சித்தபோது, அருகிலிருந்த போலீஸார் தடுத்ததால் உயிர் தப்பினார். தீயணைப்புத் துறையினர், அவர் உடலில் இருந்த மண்ணெண்ணெயைக் கழுவிவிட்டனர். பின்னர், விசாரணைக்காக அவரை அழைத்துச்சென்றார்கள். நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் அடுத்தடுத்து தீக்குளிப்பு முயற்சிகள் நடந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.