Published:Updated:

சித்தார்த் விவகாரம்: அழுத்தம் கொடுத்த மகளிர் ஆணையம் - விசாரணையைத் தொடங்கிய தமிழகக் காவல்துறை!

சித்தார்த்
News
சித்தார்த்

நடிகர் சித்தார்த் மீது தேசிய மகளிர் ஆணையம் தொடுத்திருந்த வழக்கை விசாரிக்கும் விதமாக சித்தார்த்தை நேரில் அழைத்து விசாரிக்க இருப்பதாகக் காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பஞ்சாப்பில் ஏற்பட்ட பிரதமர் பாதுகாப்பு குறைபாடு பிரச்னை குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். அந்த வகையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் இது தொடர்பாக ட்விட்டரில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். சாய்னா நேவாலின் இந்த ட்வீட்டுக்கு பதில் ட்வீட் செய்த நடிகர் சித்தார்த்தின் கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. அதையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். சாய்னாவின் தந்தையும் சித்தார்த்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதையடுத்து, தேசிய மகளிர் ஆணையம் நடிகர் சித்தார்த் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என வழக்குத் தொடுத்திருந்தது.

சாய்னா நேவால்
சாய்னா நேவால்

பின்னர் சித்தார்த், தான் தவறான நோக்கில் அவ்வாறு பதிவிடவில்லை, என மன்னிப்பு கூறி இன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு சாய்னா நோவாலும் கடவுள் மன்னிப்பார் எனவும் பதில் ட்வீட் செய்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தொடுத்திருந்த வழக்கை விசாரிக்கும் விதமாக நடிகர் சித்தார்த்தை நேரில் அழைத்து விசாரிக்க இருப்பதாகக் காவல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் சித்தார்த் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் காவல் ஆணையம் கூறியுள்ளது.