Published:Updated:

நாமக்கல்: அடிகுழாயை அகற்றாமல் கான்கிரீட்... தொடரும் கான்ட்ராக்டர்களின் அலட்சியம்!

அடிகுழாயை அகற்றாமல் சிமென்ட் தளம்

ராசிபுரம் அருகே சாலையில் கான்கிரீட் பணியின்போது அடிகுழாயை அகற்றாமல் அப்படியே கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல்: அடிகுழாயை அகற்றாமல் கான்கிரீட்... தொடரும் கான்ட்ராக்டர்களின் அலட்சியம்!

ராசிபுரம் அருகே சாலையில் கான்கிரீட் பணியின்போது அடிகுழாயை அகற்றாமல் அப்படியே கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Updated:
அடிகுழாயை அகற்றாமல் சிமென்ட் தளம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில தினங்களாக சாலையில் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் அமைக்கும்போது சாலையில் இருந்த அடிபம்ப்பை அகற்றாமல் அலட்சியமாக அப்படியே கான்கிரீட்டை அமைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அடிபம்ப்பை அகற்றாமல் சிமென்ட் தளம்
அடிபம்ப்பை அகற்றாமல் சிமென்ட் தளம்

இங்கே கான்கிரீட் அமைக்கும் ஒப்பந்தப் பணிகளை அ.தி.மு.க-வைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மேற்கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. அடிபம்ப்பை அகற்றாமல், அதைச் சுற்றி அப்படியே கான்கிரீட் போடப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, ஒப்பந்ததாரர் அலட்சியமாக பதில் கூறியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, வேலூர் மாவட்டத்தில் இதுபோல் நடந்து சர்ச்சையான நிலையில், தற்போது அதேபாணியில் ராசிபுரம் பகுதியில் 'சம்பவம்' செய்திருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து, அப்பகுதி மக்கள், ``கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அந்த அடிகுழாய் மூலம் குடிநீர் எடுத்துவந்தோம். பயன்பாட்டில்தான் இருந்தது. இந்த நிலையில், சிறிய கோளாறு காரணமாக, சில மாதங்களாக அந்த அடிகுழாய் இயங்கவில்லை. இதனால், எங்களுக்குக் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. அதனால், அந்த அடிகுழாயைச் சரிசெய்யச் சொல்லி கோரிக்கைவைத்தோம். ஆனால், சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இந்த நிலையில்தான், அந்த அடிபம்பை சுற்றி கான்கிரீட் போட்டு, அடிகுழாயைப் பயன்படுத்த முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டனர்.

அடிபம்ப்பை அகற்றாமல் சிமென்ட் தளம்
அடிபம்ப்பை அகற்றாமல் சிமென்ட் தளம்

இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, `வேறு ஒரு குடிநீர்க் குழாய் மூலம் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்’ எனக் கூறினார். ஆனால், அதற்கு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், அடிகுழாயை அகற்றாமல் அலட்சியமாக கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.