Published:Updated:

பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய பாபா ராம்தேவ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பாபா ராம்தேவ் ( vikatan )

பெட்ரோல், டீசல் விலையுயர்வுக் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரை, ``நீ வாயை மூடு, உன்னால் என்ன செய்ய முடியும். இப்படிப் பேசாதே" என பாபா ராம்தேவ் ஒருமையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய பாபா ராம்தேவ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பெட்ரோல், டீசல் விலையுயர்வுக் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரை, ``நீ வாயை மூடு, உன்னால் என்ன செய்ய முடியும். இப்படிப் பேசாதே" என பாபா ராம்தேவ் ஒருமையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Published:Updated:
பாபா ராம்தேவ் ( vikatan )

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர். கடந்த பத்து நாள்களில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.6 வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹரியானா மாநிலம் கர்னாலில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட யோகா குரு பாபா ராம்தேவ், பெட்ரோல் - டீசல் விலையுயர்வைக் குறித்து தன்னிடத்தில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரைச் சரமாரியாகப் பேசிய வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

``பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.40-க்கும், சமையல் எரிவாயு காஸ் சிலிண்டர் விலையை ரூ.300-க்கும் உறுதி செய்யும் அரசை மக்கள் கருதிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தீர்களே" என பாபா ராம்தேவ்விடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த பாபா ராம்தேவ், ``ஆமாம், நான் சொன்னேன். உன்னால் என்ன செய்ய முடியும். இந்த மாதிரியான கேள்வியைத் தொடர்ந்து கேட்காதே. நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க நான் என்ன உனக்கு ஒப்பந்தப்பட்டிருக்கிறேனா?" எனக் கடுமையாகப் பேசினார்.

அதைத்தொடர்ந்து இதே கேள்வியை பத்திரிகையாளர் மீண்டும் கேட்க, எரிச்சலடைந்த பாபா ராம்தேவ், ``நான் தான் அன்றைக்குச் சொன்னேன். உன்னால் என்ன செய்ய முடியும். இப்படிப் பேசாதே, நீ வாயை மூடு. இது நல்லதல்ல. நீ ஒழுக்கமான பெற்றோரின் மகனாக இருக்க வேண்டும்" என சரமாரியாகப் பேசினார். பாபா ராம்தேவ், பத்திரிகையாளரிடம் இப்படி கடுமையாகப் பேசிய இந்த வீடியோ ட்விட்டரில் பெரும் வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism