Published:Updated:

‘கர்த்தாவிண்டே நாமத்தில்!’ - கேரளத்தைக் கலங்கடிக்கும் கன்னியாஸ்திரியின் சுயசரிதை

லூஸி கலப்புரா
பிரீமியம் ஸ்டோரி
லூஸி கலப்புரா

ரா.சதீஸ்குமார்

‘கர்த்தாவிண்டே நாமத்தில்!’ - கேரளத்தைக் கலங்கடிக்கும் கன்னியாஸ்திரியின் சுயசரிதை

ரா.சதீஸ்குமார்

Published:Updated:
லூஸி கலப்புரா
பிரீமியம் ஸ்டோரி
லூஸி கலப்புரா

கேரளாவில் ஒரு புத்தகம் அச்சுக்கு ஏறும்போதே அனலைக் கிளப்பியது; கடும் எதிர்ப்பு எழுந்தது.வெளியான அன்றே விற்றுத் தீர்ந்தது. புத்தகத்தைத் தடைசெய்யக் கோரி ஒரு கூட்டம் நீதிமன்றம் வரை சென்றது. கடவுளின் தேசத்தையே கலங்கடித்த அந்தப் புத்தகம், ‘கர்த்தாவிண்டே நாமத்தில்’.

‘கர்த்தாவிண்டே நாமத்தில்!’ - கேரளத்தைக் கலங்கடிக்கும் கன்னியாஸ்திரியின் சுயசரிதை

கேரளாவில் கன்னியாஸ்திரிகள்மீது பாதிரியார்களால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை தொடர்பான அந்தப் புத்தகத்தை எழுதியவர், 54 வயதான லூஸி கலப்புரா என்கிற கன்னியாஸ்திரி. தன் வாழ்வில் நேர்ந்த மிகக் கசப்பான அனுபவங்களைச் சேர்த்து மலையாளத்தில் 229 பக்கங்களில் அதை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்துக்கு எதிர்ப்புகள் வரும் என்பது அவர் எதிர்பார்த்ததுதான். அதைவிட, பல்வேறு திசைகளிலிருந்தும் அதிகளவில் மிரட்டல்கள் வந்தவண்ணமுள்ளன. எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படும் ஆபத்தான பாதுகாப்பற்ற நிலையில், கேரளத்தில் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். அவரைத் தொடர்புகொள்வதும் சந்திப்பதும் பெரும்சவாலாக இருந்தது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகே, அவரின் இருப்பிடத்தைக் கண்டறிய முடிந்தது. கேரளத்தில் ஒரு குக்கிராமத்தில் அவரைச் சந்தித்தோம். பேட்டிக்கு மறுத்தவரை, ஒருவழியாகப் பேசி சம்மதிக்கவைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘நீங்கள் எந்த வயதில் கன்னியாஸ்திரி ஆனீர்கள்?’’

‘‘11 குழந்தைகளில் ஏழாவதாகப் பிறந்தவள் நான். சிறுவயது முதலே அன்பு, சேவை, வறுமை இந்த மூன்றும் என் மனதில் அதிகம் குடிகொண்டிருந்தன. விளிம்புநிலை மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவ, கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. முறையான பயிற்சிகளைப் பெற்று 20 வயதில் முழு கன்னியாஸ்திரியாக மாறினேன். அடிப்படை யில் ஆசிரியையான நான், 34 ஆண்டுகளாக கன்னியாஸ்திரியாக சேவை செய்கிறேன்.’’

‘‘கன்னியாஸ்திரிகள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குறித்து எப்போது உங்களுக்குத் தெரிந்தது?’’

‘‘நான் மிகவும் வெகுளியாக இருந்த காலத்தில், கன்னியாஸ்திரிக்கு பாலியல்ரீதியான எந்தத் தொந்தரவும் இருக்காது என எண்ணினேன். கன்னியாஸ்திரிகள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள்குறித்து, சக கன்னியாஸ்திரிகள் மற்றும் தோழிகள்மூலம் காதுக்கு வரும். முதலில் நானும் நம்பவில்லை. ஆனால், ஒரு நாள் எனக்கே அந்தக் கசப்பான அனுபவம் நேர்ந்தது.’’

‘‘அப்படி என்ன நேர்ந்தது?’’

லூஸி கலப்புரா
லூஸி கலப்புரா

‘‘நன்கு பழகிக்கொண்டிருந்த பாதிரியார் ஒருவர், திடீரென என்னிடம் அத்துமீற முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத நான், கடுமையாக எதிர்த்து வெளியேறினேன். இந்த அதிர்ச்சியி லிருந்து என்னால் மீளவே முடியவில்லை. இந்தச் சம்பவம் நிறைய வலிகளையும் வேதனைகளையும் தந்தது. அதற்குப் பிறகு மூன்று பாதிரியார்களும், மடத்தில் நான்கு பாதிரியார்களும் என்னிடம் அத்துமீற முயன்றனர். கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து என்னைக் காப்பாற்றிக்கொண்டேன்.’’

‘‘அப்போதே ஏன் புகார் தெரிவிக்கவில்லை?’’

‘‘நாட்டில் ஏராளமான கன்னியாஸ்திரிகள்மீது நாள்தோறும் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. இதை முறையிட வழியே இல்லை. அதையும் மீறி வெளியில் சொன்னால், குடும்ப உறுப்பினர்கள் முதல் நண்பர்கள் வரை ஏன்... சக கன்னியா ஸ்திரிகள்கூட நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படி வெளியில் சொன்ன சிலரையும் சபையிலிருந்து நீக்கியும், வீட்டுக்கு அனுப்பி தனிமைப்படுத்தியும் உளவியல்ரீதியாகத் துன்புறுத்துவார்கள்.’’

‘‘கேரளாவில் புயலைக் கிளப்பிய பிஷப் ஃபிராங்கோ வுக்கு எதிரான போராட்டம் பற்றிச் சொல்லுங்கள்!’’

‘‘பிஷப் ஃபிராங்கோ தன்னிடம் இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். பாதிரியார்களால் வன்கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரிகளின் வலியும் வேதனையும் எனக்குத் தெரியும் என்பதால், போராட்டம் நடைபெற்ற கொச்சிக்குச் சென்று பிஷப் ஃபிராங்கோவை கைதுசெய்ய வேண்டி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டேன்.

அதற்கு, கடுமையான எதிர்ப்பும் மிரட்டலும் வந்தன. என்னை சபையிலிருந்து நீக்கினார்கள். எங்கெங்கிருந்தோ அழுத்தங்கள் வந்தன. மதப் பற்றாளர்கள் எனக் காண்பித்துக்கொள்ளும் பலரும் என்னை எதிரியாகப் பார்த்தனர். எனக்கு எதிராக ஊர்வலமே நடத்தி உருவ பொம்மையையும் எரித்தார்கள். என்னைத் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். கன்னியாஸ்திரிகளும் என்னுடன் பேசுவதில்லை. எனக்கு உணவு கிடைப்பதையே தடுக்கும் முயற்சி நடக்கிறது. ஆனால், நான் துவண்டுவிடவில்லை.’’

‘‘எந்த மாதிரியான விளைவுகளை ‘கர்த்தாவிண்டே நாமத்தில்’ ஏற்படுத்தி யிருக்கிறது?’’

‘‘நூல் அச்சுக்கு ஏறும்போதே பிரச்னை ஆரம்பித்து விட்டது. முன்பின் அறியாத லிஸி ஜோசப் என்கிற கன்னியாஸ்திரி ஒருவர், என் சுயசரிதை நூலை தடைசெய்ய வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம், அவர் மனுவை தள்ளுபடி செய்தது. என் சுயசரிதையை ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.’’

‘‘பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் கன்னியாஸ்திரி களுக்கு நீங்கள் கூற விரும்புவது?’’

‘‘கன்னியாஸ்திரிகளுக்கான பயிற்சியில், பாலியல்ரீதியான சுரண்டல்களை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான எந்த ஒரு படிப்பினையும் இல்லை. அப்படி ஏதாவது நிகழ்ந்தால், அதை முறையிடவும் வழியில்லை. அதையும் மீறி புகார் அளித்தால், கன்னியாஸ்திரிகள்மீதே பழி திரும்பும். பாதிரியார்களைப் பாதுகாக்கவே சபையும் முயலும். இங்கு சமநீதி என்பதே கிடையாது. அது கிடைக்கும் வரை நான் போராடுவேன்’’ - கம்பீரமாகச் சொல்கிறார் லுாஸி கலப்புரா.