Published:Updated:

`2021-ல் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைக்குத் தகுதியில்லை' HDFC வங்கியின் சர்ச்சை விளம்பரம் - உண்மை என்ன?

2021-ல் தேர்ச்சி பெற்றவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததா HDFC வங்கி... உண்மை என்ன?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த சில நாள்களாக, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் செய்தித்தாள் விளம்பரம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் விளம்பரத்தில் என்ன சொல்லப்பட்டிருந்தது... அதற்கு ஹெச்.டி.எஃப்.சி வங்கி அளித்திருக்கும் விளக்கம் என்ன? - இந்தக் கட்டுரையில் காணலாம்!

விளம்பரத்தில் என்ன இருந்தது?

ஹெச்.டி.எஃப்.சி வங்கி அளித்திருந்த நேர்காணலுக்கான ஆங்கில விளம்பரத்தில், `28 வயதுக்குக் குறைவான ஆண்கள், பெண்கள் தேவை. 2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலைக்குத் தகுதியில்லை. வேலைக்கான இடங்கள்: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அந்த விளம்பரத்தில், `நேர்காணல் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் நடைபெறும்' எனவும் சொல்லப்பட்டிருந்தது.

HDFC Ad
HDFC Ad
`இந்திய ஹாக்கி அணி' வெற்றிபெறும்போதெல்லாம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கொண்டாடப்படுவது ஏன்?!

இதில், `2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்குத் தகுதியில்லை' என வங்கி விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தித்தாள் விளம்பரத்தைப் பகிர்ந்து, ``இதோ ஆரம்பித்துவிட்டனர். 2021-ல் தேர்ச்சி பெற்றவர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ள மறுக்கின்றன. இது மிகவும் சோதனையான காலகட்டம். அரசு இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களும் அதற்கேற்ப தயாராக வேண்டும்'' என்றெல்லாம் நெட்டிசன்கள் பதிவிடத் தொடங்கினர்.

இந்தநிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதியன்று ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, இந்த விளம்பரத்தைப் பகிர்ந்து, `இது கொடூரமானது' என்று பதிவிட்டிருந்தார் ஒருவர். அதற்கு ஹெச்.டி.எஃப்.சி நிர்வாகம், ``இது எழுத்துப் பிழை. பிழைக்காக வருந்துகிறோம். நாங்கள் குறிப்பிட்டிருக்கும் வயது வரம்புக்குள் இருப்பவர்கள், எந்த ஆண்டில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே நாங்கள் சரியான விளம்பரத்தை வெளியிட்டுவிட்டோம்'' என்று ஆகஸ்ட் 3-ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியான விளம்பரத்தில், `Not' என்ற வார்த்தையை `Also' என்று மாற்றி வெளியிட்டிருந்தனர். அதாவது `2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்குத் தகுதியானவர்கள் இல்லை' என்பதை `2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் இந்த வேலைக்குத் தகுதியானவர்களே' என்று மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து வங்கியின் மேலாளர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்திருந்த பேட்டியில், ``விளம்பரத்தைத் தயார் செய்யும்போது ஏற்பட்ட பிழை இது. `Also' என்ற சொல்லுக்குப் பதிலாக `Not' என்ற சொல் தவறுதலாக வந்துவிட்டது. இதை நாங்கள் ஆகஸ்ட் 3-ம் தேதி கொடுத்த விளம்பரத்தில் சரி செய்துவிட்டோம்'' என்று கூறியிருக்கிறார்.

நீதா அம்பானியை பணிவாகக் கும்பிட்டாரா மோடி?! வைரலாகும் புகைப்படம் - உண்மை என்ன?! #FactCheck
விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னரும், ``வங்கி தரப்பு சொல்வது உண்மைதானா... இல்லை சாமளிப்பதற்காகச் சொல்கிறார்களா?'' என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. மேலும், ``2021-ல், அதாவது `கொரோனா பேட்ச்' என்று அழைக்கப்படும் பேட்ச்சில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்காலத்தை மனதில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கைகளும் நெட்டிசன்களால் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு