Published:Updated:

`தூய்மை இந்தியா திட்டம் சரியாகச் செயல்படவில்லை!’- காமன்வெல்த் நாயகன் சதீஷ்குமார் சிவலிங்கம் வேதனை

சதீஷ்குமார் சிவலிங்கம்

``அதிகாரிகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், ‘டெங்கு’ போன்ற நோய்கள் வந்துவிடும் என்பதால், நாங்களே இறங்கி சுத்தம் செய்திருக்கிறோம்’’ என்கிறார், காமன்வெல்த் நாயகன் சதீஷ்குமார் சிவலிங்கம்.

`தூய்மை இந்தியா திட்டம் சரியாகச் செயல்படவில்லை!’- காமன்வெல்த் நாயகன் சதீஷ்குமார் சிவலிங்கம் வேதனை

``அதிகாரிகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், ‘டெங்கு’ போன்ற நோய்கள் வந்துவிடும் என்பதால், நாங்களே இறங்கி சுத்தம் செய்திருக்கிறோம்’’ என்கிறார், காமன்வெல்த் நாயகன் சதீஷ்குமார் சிவலிங்கம்.

Published:Updated:
சதீஷ்குமார் சிவலிங்கம்

`சுவச் பாரத்’ என்னும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்திச் சிறப்பாகச் செயல்படுத்திவருவதாகப் பிரதமர் மோடிக்குச் சமீபத்தில், அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் பில்கேட்ஸ் `குளோபல் கோல் கீப்பர்’ விருதை வழங்கிக் கௌரவித்தார். இந்த நிலையில், உலக அரங்கில் காமன்வெல்த் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம், ‘தூய்மை இந்தியா திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை’ என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

சதீஷ்குமார் சிவலிங்கம்
சதீஷ்குமார் சிவலிங்கம்

அவரைப் பற்றி, ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் பார்ப்போம். தன் 15 வயதில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கிய சதீஷ்குமார் சிவலிங்கம் வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பில் பலமுறை கலந்துகொண்டு பதக்கங்களைக் குவித்தவர். இதற்கெல்லாம் சிகரமாக, 2014-ல் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் `தங்கம்’ வென்று புதிய சாதனை படைத்தார். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்தான் சதீஷ்குமார் சிவலிங்கம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தன் வீட்டுக்குச் சமீபத்தில் வந்த சதீஷ்குமார் சிவலிங்கம், குடியிருப்புப் பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும், தெருக்கள் சேறும் சகதியுமாக மாறியிருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுவதையும் பார்த்து வருத்தப்பட்டார். இதுபற்றி வேலூர் மாநகராட்சியில் அவர் புகார் தெரிவித்தார். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு, ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கான மொபைல் செயலியில் புகாரைப் பதிவுசெய்தார். அதற்கும் நடவடிக்கை இல்லை.

வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சி

இதனையடுத்து, ஓரிரு நாள்களுக்கு முன்பு நண்பர்கள் சிலருடன் கைகோத்து, சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார் சதீஷ் சிவலிங்கம். இதுபற்றி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்தார். ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அவர் விமர்சனம் செய்திருப்பதை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். அதிக லைக்ஸ், ஷேர் எனச் சமூக வலைதளங்களில் அவரது வீடியோ ட்ரெண்டிங்கில் பகிரப்பட்டுவருகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வீடியோவில் அவர், ‘‘எங்கள் பகுதியில் தண்ணீர், சேறு தேங்கியிருப்பதால் புதிய சாலை அமைத்துத் தருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரியிருந்தேன். ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கான மொபைல் ஆப்பிலும் புகார் செய்தேன். தீர்வு கிடைக்கவில்லை. ஆனால், அந்த ஆப்பில் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக வருகிறது. ஆனால், இங்கு எதுவுமே நடக்கவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் டெங்கு கொசுக்கள் அதிகமாயிருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றிலும் நிறைய வீடுகள் இருக்கின்றன.

தூய்மை பணி
தூய்மை பணி

இதுபற்றி புகார் அளித்தும், எந்தப் பயனும் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து நானே தூய்மைப் பணியில் ஈடுபட்டேன். அதிகாரிகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், ‘டெங்கு’ போன்ற நோய்கள் வந்துவிடும் என்பதால் நாங்களே இறங்கி சுத்தம் செய்திருக்கிறோம். நீங்களும் யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். உங்கள் பகுதி குப்பைகளை நீங்களே சுத்தம் செய்துவிடுங்கள். நிச்சயமாக ஆரோக்கியமாக வாழலாம்’’ என்று கூறியிருக்கிறார். சதீஷ்குமார் சிவலிங்கத்தின் பேச்சுதான் வேலூரில் இப்போது ‘ஹாட் டாக்காக’ இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism