Published:Updated:

`சிங்கம்–2' டேனி பாணியில் சர்வதேசக் கடல் பகுதியில் சுற்றித் திரியும் நித்தி!

நித்தி
நித்தி

'நித்யானந்தா எங்கே இருக்கிறார்?' என்று இப்படி ஆளாளுக்கு ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில்தான், 'கைலாசா என்கிற தீவு, கரீபியன் கடலில் எந்த நாட்டுக்கு அருகில் இருக்கிறது?' என்ற கேள்வியும் வலுத்தது.

கரீபியன் கடலில் உள்ள ஈக்குவடார் தீவில் நித்யானந்தா அடைக்கலமாகியிருப்பதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், 'நித்யானந்தா எங்கள் நாட்டில் இல்லை' என்று அந்த நாட்டு தூதரகம் அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டது. அடுத்ததாக, டிரினிடாட் டொபாகோ என்கிற தீவில்தான் நித்யானந்தா இருக்கிறார் என்று கூறப்பட்டது.

'நித்யானந்தா எங்கே இருக்கிறார்?' என்று இப்படி ஆளாளுக்கு ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில்தான், 'கைலாசா என்கிற தீவு, கரீபியன் கடலில் எந்த நாட்டுக்கு அருகில் இருக்கிறது?' என்ற கேள்வியும் வலுத்தது. அதற்குப் பதில் சொல்லாத நித்யானந்தா, 'கைலாசா இந்துக்களுக்கான தேசமாகத் திகழும்' என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லி வந்தார். இந்த நிலையில்தான் நித்தி இருக்கும் இடம் குறித்த, திடுக்கிடும் புதிய தகவல்கள் கிடைத்திருக் கின்றன.

''இந்தியாவின் பாஸ்போர்ட் நித்யானந்தாவுக்கு எப்போதோ காலாவதியாகிவிட்டது. ஆகையால், இப்போது அவரால் சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. எப்படியாவது புதிய பாஸ்போர்ட் பெற்றுவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் நித்தி இருந்தபோதுதான், ஈக்குவடார் நாட்டில் உள்ள சில மாஃபியா குழுக்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது'' என்கின்றனர் நித்யானந்தா குறித்த தகவல்களைச் சேகரித்துவரும் உளவுத் துறையினர். ''நித்யானந்தா குறித்து வேறு என்னென்ன தகவல்கள் கிடைத்திருக்கின்றன?'' என்று அவர்களிடம் விசாரித்தோம்... முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/35QPP6T

`சிங்கம்–2' டேனி பாணியில் சர்வதேசக் கடல் பகுதியில் சுற்றித் திரியும் நித்தி!

''ஈக்குவடார் நாட்டில் உள்ள மாஃபியாக்களின் தொடர்புகள் நித்திக்குக் கிடைத்ததும், அவர்களிடம் நித்தி வைத்த முதல் கோரிக்கை, 'கரீபியன் கடல் பகுதியிலுள்ள குட்டி நாட்டிலிருந்து பாஸ்போர்ட் ஒன்று வேண்டும்' என்பதுதான். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைமாறியிருக்கிறது. பணம் கைமாறியதும் பேசியபடியே பெலிஸ் என்ற குட்டித் தீவின் பாஸ்போர்ட்டை நித்யானந்தாவுக்கு ஏற்பாடுசெய்து கொடுத்திருக்கிறது அந்த மாஃபியா கும்பல். அந்த பாஸ்போர்ட்டை வைத்துதான் கரீபியன் தீவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் விசிட் அடித்துக் கொண்டிருக்கிறார் நித்தி. எந்த நாட்டுக்குச் சென்றாலும் நித்யானந்தாவைப் பற்றி விசாரிக்கப்படுவதால், 'நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சிக்கிக்கொள்ளலாம்' என்கிற அச்சம் நித்யானந்தாவுக்கு எழுந்திருக்கிறது.

'எந்த இடம் பாதுகாப்பாக இருக்கும்?' என்று தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் நித்தி. இதனையடுத்து, சிறிய அளவிலான சொகுசுக் கப்பல் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். அந்தக் கப்பல்தான் தற்காலிகமாக கைலாசாவாக மாறியிருக்கிறது. சகல வசதிகளுடன் கூடிய அந்தக் கப்பலில் இருந்துதான் 'சத்சங்' என்று சொல்லப்படும் ஆன்மிக உரையின் ஷூட் நடத்தப்படுகிறது. அந்தக் கப்பல் தற்போது கரீபியன் கடல் பகுதியின் சர்வதேச எல்லையில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறது. சர்வதேச கடல் பகுதியில் பயணிக்கும் கப்பலை, வேறு நாட்டு கப்பல் படையினர் பிடிக்க முடியாது. எளிதில் புரியும்படி சொல்ல வேண்டுமானால், சிங்கம்–2 படத்தில் டேனி என்கிற கடத்தல் மன்னன் சர்வதேசக் கடல் பகுதியில் சுற்றித் திரிவார் அல்லவா? கிட்டத்தட்ட நித்தியும் அப்படித்தான் சர்வதேசக் கடல் பகுதியில் தற்போது சுற்றிக்கொண்டிருக்கிறார்.

`சிங்கம்–2' டேனி பாணியில் சர்வதேசக் கடல் பகுதியில் சுற்றித் திரியும் நித்தி!

இந்திய உளவுத்துறை சர்வதேச அளவில் சல்லடை போட்டுத் தேடிவருவதால், எந்த நாட்டிலும் நித்தியால் நிம்மதியாக இருக்க முடிய வில்லை. அவர் வாங்கியுள்ள கைலாசா தீவை தனி நாடாக அறிவிப்பதற்கான அனுமதி கிடைப்பதிலும் இழுபறி நீடிக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை சமீபத்தில் ஐ.நா-விடம் இதுகுறித்த நீண்ட அறிக்கை ஒன்றையும் அளித்துள்ளதால், நித்திக்கான நெருக்கடி இன்னும் அதிகமாகியுள்ளது. தனது யூ-டியூப் உரையினை பெரும்பாலும் தனது சொகுசுக் கப்பலில் வைத்துக்கொள்ளும் நித்தி, அதன் ஒளிபரப்பை மட்டும் ஏதாதொரு நாட்டினுடைய ஐ.பி அட்ரஸிலிருந்து செய்வதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று பேர் நித்தி யுடன் இருக்கின்றனர். அவர்கள்மூலமே கைலாசா டி.வி ஒளிபரப்பு தங்குதடையின்றி நடக்கிறது" என்றார்கள்.

- நித்தியின் அம்மா பெயரில் சொத்துக்கள்... | குழந்தைகளைக் காட்டி கரன்சி வசூல் | கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி... - ஜூனியர் விகடன் இதழின் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > கப்பலில் கைலாசா! - கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி - 'அடடே' ஆராய்ச்சியில் நித்தி https://www.vikatan.com/news/general-news/nithyananda-atrocities-nithyananda-in-ship

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு