Published:Updated:

``இஸ்லாமியப் பெண்களுக்கு தேர்தலில் சீட்... இஸ்லாத்துக்கு எதிரானவர்கள்" - மதகுரு சர்ச்சைப் பேச்சு

மதகுரு ஷபீர் அகமது சித்திக் ( ட்விட்டர் )

``பெண்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டுமா... இஸ்லாமிய ஆண்களே இல்லையா?'' - மதகுரு ஷபீர் அகமது சித்திக்

``இஸ்லாமியப் பெண்களுக்கு தேர்தலில் சீட்... இஸ்லாத்துக்கு எதிரானவர்கள்" - மதகுரு சர்ச்சைப் பேச்சு

``பெண்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டுமா... இஸ்லாமிய ஆண்களே இல்லையா?'' - மதகுரு ஷபீர் அகமது சித்திக்

Published:Updated:
மதகுரு ஷபீர் அகமது சித்திக் ( ட்விட்டர் )

குஜராத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், அகமதாபாத்திலுள்ள ஜமா மசூதியின் தலைமை மதகுரு ஷபீர் அகமது சித்திக்கிடம் இஸ்லாம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

குஜராத் தேர்தல்
குஜராத் தேர்தல்

அதற்கு பதிலளித்த மதகுரு, “இஸ்லாத்தைப் பற்றிப் பேசினால், இந்த மதத்தில் தொழுகையைவிட முக்கியமானது எதுவுமில்லை. ஆனால், பெண்கள் மசூதியில் தொழுகையைக் கடைப்பிடிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா... முஸ்லிம் பெண்கள் அனைவரின் முன்னிலையிலும் வருவது சரியென்றால், அவர்கள் மசூதிக்குள் வருவதைத் தடைவிதித்திருக்க மாட்டார்கள். எனவே, பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு. அதனால்தான் அவர்கள் மசூதிக்கு தொழுகைக்காக வருவதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

அதனால்தான் சொல்கிறேன், இஸ்லாமியப் பெண்களுக்கு தேர்தலில் சீட் கொடுப்பவர்கள், இஸ்லாத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார்கள். பெண்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டுமா... முஸ்லிம் ஆண்களே இல்லையா... இது எங்கள் மதத்தை பலவீனப்படுத்துகிறது. பெண்களை எம்.எல்.ஏ., கவுன்சிலர் ஆக்கினால் ஹிஜாபை நாங்கள் கடைப்பிடிக்க முடியாது.

மேலும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். எனவே , நான் அதைக் கடுமையாக எதிர்க்கிறேன். நீங்கள் ஆண்களுக்குத் தேர்தலில் சீட் கொடுக்கலாம்" எனச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம் மதகுருவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.