Published:Updated:

டாப் 10 பிரச்னைகள் - சாதி பார்த்தே நீதி!

சாதி பார்த்தே நீதி!
பிரீமியம் ஸ்டோரி
சாதி பார்த்தே நீதி!

ஆதவன் தீட்சண்யா; எழுத்தாளர்

டாப் 10 பிரச்னைகள் - சாதி பார்த்தே நீதி!

ஆதவன் தீட்சண்யா; எழுத்தாளர்

Published:Updated:
சாதி பார்த்தே நீதி!
பிரீமியம் ஸ்டோரி
சாதி பார்த்தே நீதி!

2019-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப்பற்றி பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

ண்ணல் அம்பேத்கர் பிறந்த 1891-ம் ஆண்டில் அயோத்திதாசர் நீலகிரியில் கூட்டிய திராவிடசபையின் மாநாடு ‘... விவசாய ஏழைகளுக்கு பூமி...’ கோரியது. செங்கல்பட்டு ஆட்சியர் திரமென்ஹீர் பரிந்துரையால் 1892-ல் சென்னை மாகாணத்தில் தலித்துகளுக்கு 12 லட்சம் ஏக்கர் பஞ்சமிநிலம் ஒதுக்கப்பட்டது.

டாப் 10 பிரச்னைகள் - சாதி பார்த்தே நீதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`அசுரன்' திரைப்படத்தை முன்னிட்டு, பஞ்சமி நிலம் தொடர்பாகக் கிளம்பிய விவாதம், ஒரு கட்சியின் தலைவரிடம் இன்னொரு தலைவர் மூலப்பத்திரம் கேட்பதாகவும், ‘ஆண்ட சாதி’யை நீக்கும்படி வெற்றிமாறனை மிரட்டுவதாகவும் திரிந்துபோனது. இதேபோல பா.இரஞ்சித் தலித்துகளின் நிலவுரிமை பற்றி எழுப்பிய கேள்வியை ராஜராஜசோழன் மீதான அவதூறாகத் திரித்தார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவ்விரண்டு விஷயங்களிலும் பின்தள்ளப் பட்ட கேள்விகள்: மானியங்களுக்காக நிலம் பறிக்கப்பட்டு குடிநீக்கிகளாக ஆக்கப் பட்டவர்கள் யார்? சாதியமின்றி நிலக்குவிப்பு நடந்ததா? பஞ்சமிநிலம் ஏன் இப்போது தலித்துகளிடம் இல்லை? தீண்டினால் தீட்டு, பார்த்தாலே பாவம் என்பவர்கள் தலித்துகளின் பஞ்சமிநிலம் முழுவதையுமே அபகரித்திருப்பது தீட்டுக்குரியதாகாதா? அபகரிக்கப்பட்டுள்ள பஞ்சமிநிலத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்?

ஆதவன் தீட்சண்யா; எழுத்தாளர்
ஆதவன் தீட்சண்யா; எழுத்தாளர்

மேலவளவு முருகேசனும் அவரின் தோழர்கள் ஐவரும் கொடூரமாக துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டதை உலகறியும். சாதிய வன்மத்தால் முருகேசனின் தலையை வெட்டியெடுத்து வெகுதூரத்திலிருந்த கிணற்றில் வீசிப்போயினர் கொலையாளிகள். ஆயுள்தண்டனைக் கைதிகளான இக்கொலையாளிகள் 17 பேரும் ஒருசேர நன்னடத்தையோடு இருப்பதாக எப்படியோ கண்டுபிடித்து விடுதலை செய்திருக்கிற தமிழக அரசு, மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவரால் கொல்லப்பட்டவர் களுக்கு நீதிகேட்டுப் போராடியவர்கள்மீது காவலர்களை ஏவியது. பாதிக்கப்பட்டவர் களை சாதிப்பெயரிட்டுத் திட்டி அவமதித்துத் தாக்கியதுடன் பொய்வழக்கில் சிறைப்படுத்தியுள்ள காவல்துறையினர்மீது ஒரு நடவடிக்கையுமில்லை. பாராட்டிப் பதக்கம் கொடுப்பார்களாக்கும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடுகாடின்றியும், இடுகாட்டுக்குப் பாதை மறுக்கப்பட்டதால் பாலத்தின் மீதிருந்து பிணத்தைக் கயிறுகட்டி இறக்கியெடுத்தும் தலித்துகள் அல்லாடுகையில் ஏறெடுத்தும் பாராத அரசு, மேட்டுப்பாளையத்தில் மாண்ட 17 பேரையும் அவசரமாக எரித்து அழித்தது. கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு போராடியவர்களில் ஒருவரை குண்டர்சட்டத்தில் சிறைப்படுத்தியுள்ளது.

சாதி பார்த்தே நீதி!
சாதி பார்த்தே நீதி!

தேர்தலின்போதான பொன்பரப்பி வன்முறையாளர்கள் மனக்கண்ணிலேயே இருக்கிறார்கள். அந்த கும்பலில் பலருக்கும் திடகாத்திரமான உடல்வாகு இல்லை; நேர்த்தியான உடையில்லை; செருப்பில்லை; எண்ணெயற்ற பரட்டைத்தலை. ஆனால் மனம் முழுக்க சாதிவெறியும் அதன் மறுவடிவமாய் உருட்டுக்கட்டையும் ஏந்தி அவர்களையொத்த தலித்துகளின் வீடுகளையும் பண்டபாத்திரங்களையும் அடித்து நொறுக்கியும் தீராத ஆத்திரம் வசவானது. எது எதிர்ப்படினும் அழித் தொழிக்கும் வன்மத்தை உடல்மொழியால் காட்டியபடி விரைந்த அவர்கள் ஒருநாளில் சாதிவெறியர்களாகிவிடவில்லை. குடும்பம், சுற்றம், கோயில், திருவிழா, கல்விக்கூடம், ஊடகம் என ஒவ்வொன்றும் தன்பங்கிற்கு ஊட்டிய விஷத்தினால் அவ்விதமாகியிருக்கும் அவர்களை இக்கட்டுரை என்ன செய்யும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism