Published:Updated:

டாப் 10 பிரச்னைகள் - மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!

மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!
பிரீமியம் ஸ்டோரி
மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!

ஆழி செந்தில்நாதன்; சமூக செயற்பாட்டாளர்

டாப் 10 பிரச்னைகள் - மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!

ஆழி செந்தில்நாதன்; சமூக செயற்பாட்டாளர்

Published:Updated:
மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!
பிரீமியம் ஸ்டோரி
மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!

2019-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப்பற்றி பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

ரேந்திர மோடி - அமித் ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம்தான் சுதந்திர இந்தியா இதுவரை கண்ட அரசுகளிலேயே மிகப்பெரிய அளவுக்கு மாநில அரசுகளுக்கு எதிரான ஒரு அரசாங்கம் என்பதைப் புரிந்துகொள்ள நாம் நிறைய மெனக்கெடத் தேவையில்லை.

மொழிவாரி மாநிலங்கள் என்கிற கருத்தாக்கத்தையே தொடக்கத்திலிருந்து ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ், இனி காஷ்மீருக்கு நடந்ததுதான் எல்லா மாநிலங்களுக்கும் நடக்கும் என மிரட்டிக்கொண்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசியல் அலகுகளாக இருக்கவேண்டிய மாநிலங்களை வெறும் நிர்வாக அலகுகளாக மாற்றி, இந்தியாவில் ஆட்சிமுறையின் அடிப்படையையே மாற்றிக்கொண்டிருக்கிறது இந்த அரசு. ஒரு சமீபத்திய உதாரணம்: ஏற்கெனவே மத்திய அரசின் வேலைவாய்ப்பு களில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மக்களுக்கு இருந்துவந்த இயல்பான வேலைவாய்ப்புரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தப்படும் நிலையில், மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு களையும்கூடப் பறித்துக்கொள்ள மோடி அரசு திட்டம் தீட்டுகிறது.

top 10 2019
top 10 2019

குரூப் பி மற்றும் சி பிரிவு வேலைகளுக்கும் அனைத்திந்தியப் பொதுத் தேர்வைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது. மாநில அரசுகள் அந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களையே வேலைக்கு எடுக்கவேண்டும் என்கிற நிலையைக் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது. இது மாநிலங்களின் அதிகாரத்தின் அஸ்தி வாரத்தையே குலைக்கும் முயற்சியாக முடியும் என்று அச்சம் எழுந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்குக் கொடுத்திருந்த சட்ட இறையாண்மைக் களங்கள் ஒவ்வொன்றையும் மோடி அரசு உடைத்தெறிகிறது. புதிய தேசியக் கல்விக்கொள்கை அதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. ராஷ்டிரிய சிக்சா ஆயோக் என்கிற புதிய பெயரில் உருவாக்கப்படவுள்ள ஒரு அமைப்பின்கீழ், ஒட்டுமொத்த இந்தியாவின் கல்வி அதிகாரங்களும் குவிக்கப்படும். கல்வியை முழுமையாகக் கையிலெடுக்கும் மோடி அரசு அதன் பிரதான அம்சங்களைத் தனியார்களுக்குத் திறந்துவிடும். நாம் ஒரு நீட்டை எதிர்த்தோம். மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்துக்கும் அனைத்திந்தியத் தேர்வுகளை நடத்துகிறேன் பேர்வழி என்று, முடிவெடுக்கும் உரிமைகளைத் தன்வசப்படுத்துகிறது.

டாப் 10 பிரச்னைகள் - மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!

அரசியல் ரீதியில் மாநிலக் கட்சிகளை இல்லாமலாக்கிவிடலாம் என்கிற பா.ஜ.க-வின் ஆசை மகாராஷ்ட்டிர சம்பவங்களுக்குப் பிறகு சற்றுத் தடுமாற்றத்துக்குள்ளாகியிருக்கலாம். ஆனால், இங்கே ஒரு ஸ்டாலின், அங்கே ஒரு மம்தா என்று ஒரு சிலர் மட்டும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவுமே இவ்விஷயத்தில் மெளனமாக இருக்கிறது.

ஆனால், இந்தியா அடிப்படையில் மாநிலங்களின் ஒன்றியம். அதை ஒற்றை அலகாக மாற்ற முயற்சிசெய்தால் அந்த சிஸ்டம் வேலைசெய்யாமல் போய்விடும். சாம்ராஜ் யவாதிகளுக்கோ அது புரியாது. ஆனால், வரலாறு அதை அவர்களுக்கு ஒருநாள் மண்டை யில் ஓங்கி அறைந்து சொல்லிக்கொடுக்கும்.

மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!
மத்திய அரசு என்னும் மாற்றாந்தாய்!

இந்தியாவில் அரசியல் இறையாண்மை மக்களிடமும், சட்ட இறையாண்மை மத்திய, மாநில அரசுகளிடம் பிரித்தளிக்கப்பட்டும் இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார் அறிஞர் அண்ணா. மாநிலங் களிடமிருந்து சட்ட இறையாண்மையைப் பறிப்பதும் மக்களிடமிருந்து அரசியல் இறையாண்மையைப் பறிப்பதும் ஒன்றுதான். இரண்டுமே கலகத்தில்தான் சென்று முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism