Published:Updated:

டாப் 10 பிரச்னைகள் - ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்

ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்

- சி.மகேந்திரன்; இடதுசாரி சிந்தனையாளர்

டாப் 10 பிரச்னைகள் - ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்

- சி.மகேந்திரன்; இடதுசாரி சிந்தனையாளர்

Published:Updated:
ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்

2019-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப்பற்றி பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

வ்வோர் ஆண்டும், எழுச்சியோடு கூடிய மக்கள் போராட்டங்கள் நிகழத்தான் செய்கின்றன என்றாலும், 2019-ம் ஆண்டு இதில் மிகவும் வேறுபட்டதாகவே தோன்றுகிறது.

டாப் 10 பிரச்னைகள் - ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமலாக்கத் துறையினரின் பயத்தில் ஆளுமை இழந்த மாநில அமைச்சரவை; போராட்ட முனைப்பு கொண்ட மக்கள்; மத்திய அரசின் உளவுத்துறை வழிகாட்டுதலில், எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொண்டுவிட்ட போலீஸ் ராஜ்ஜியத்தால், நசுக்கப்படும் மனித உரிமைகள்... இதுதான் இன்றைய தமிழகம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முந்தைய ஆண்டுகளின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இயற்கைவளங்களைப் பாதுகாக்கும் இயக்கங்கள் பல நடந்துள்ளன. இதில் முகிலன் காணாமல்போனதும் அவர் மீது போடப்பட்ட வழக்கும் மிக முக்கியமானது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் கொடூரத்தை மறைப்பதற்கான திரைமறைவுச் செயல்பாடு தான் இந்த வழக்கு என்ற குற்றச்சாட்டுக்கு, இந்த நொடி வரை எந்தப் பதிலும் இல்லை. காவிரி ஆறு பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பெரிய போராட்டம் நடைபெற்றது. தோழர் நல்லகண்ணு தலைமையில் போராடிய மணல் போராளி விஸ்வநாதன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட மனித நேயமற்ற செயல்களும் அரங்கேறின.

சி.மகேந்திரன்; இடதுசாரி சிந்தனையாளர்
சி.மகேந்திரன்; இடதுசாரி சிந்தனையாளர்

மிக விரிந்த அளவில் தங்கள் அடிப்படைக் கோரிக்கைகளுக்காக ஆசிரியர், அரசுப் பணியாளர் போராட்டம் நடைபெற்றது. காவல்துறை அமைச்சகப் பணியாளர்களே விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், துணிவுடன் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் அரசுத்தரப்பில் ஐனநாயகபூர்வமான ஒரு பேச்சு வார்த்தைகூட இல்லை. என்றும் இல்லாத அளவுக்கு மருத்துவர்கள் போராட்டம் நடைபெற்றது. ஆனால், மருத்துவர்களை அவதூறு செய்யும் பிரசாரமாகவே இந்தப் போராட்ட முகத்தை மாற்றிவிட்டது தமிழக அரசு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான மாணவர் போராட்டங்களில் காவல்துறையே நேரடியாகத் தலையிட்டு, கல்வி நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வைக்கிறது. இதைப்போலவே மதுரைச் சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய போராட்டத்தில், ‘கஞ்சாக் கடத்தலுக்குச் சிறை அதிகாரிகளின் லஞ்சமும் ஊழலும்தான் காரணம்’ என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

 ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்
ஒடுக்கப்படும் உரிமைக்குரல்கள்

தமிழ்நாட்டில் ஜனநாயகப் போராட்டங் களுக்கென ஒரு சிறந்த பாரம்பர்யம் இருந்தது. காங்கிரஸ் இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்டு இயக்கம் என்று அனைவருமே ஜனநாயகப் போராட்டங்களுக்கு மதிப்பளித்து வந்துள்ளனர். போராட்டங்கள் நடத்து பவர்கள் கௌரவம் மிக்கவர்களாகக் கருதப்பட்டனர். இன்று வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன. போராடுபவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி!

தமிழ்நாட்டில், கூட்டங்கள் நடத்துவதற்கும் உண்ணாவிரதம் இருக்கவும்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் பேச்சுரிமை, சங்கம் அமைத்துப் போராடும் உரிமை ஆகியவை பழங்கனவாய் நம்மிடமிருந்து மறைந்து வெகுதூரத்தில் சென்றுகொண்டே இருக்கின்றன..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism