“நான் ஒரு நாளுக்கு இரண்டு வாளித் தண்ணீர்தான் பயன்படுத்துகிறேன்.”

இதுவரை சொத்துக் கணக்கை அறிவித்த முதல்வர்களைத்தான் பார்த்துள்ளோம். முதன்முதலில் குளிக்கும் தண்ணீர்க் கணக்கை அறிவித்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். 2019 கோடையில் நிலவிய கடும் நீர்ப்பற்றாக்குறையே அதற்குக் காரணம். முன்னதாகத் தமிழகத்தின் 17 மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களாகத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இருந்தும் நிலைமை கைமீறிப் போனது.

சென்னையில் தண்ணீர் லாரிக்குப் பின்னே ஓடும் மக்களின் மாரத்தான்களோடு சிக்கல் முடியவில்லை. உணவகங்கள் மூடப்பட்டன. ஐ.டி.நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிசெய்யுமாறு பணிக்கப் பட்டனர். அலுவலகப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே நீர் கொண்டுவர அறிவுறுத்தப் பட்டனர். நிலைமையைச் சமாளிக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

2017-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 62% மழை குறைவு என்றார் அமைச்சர் ஒருவர். ஊர்ப்புறத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘எட்டு வருசத்துக்கு ஒரு வருசம் மொட்டை வருசம்.’ இதன்பொருள் எட்டாண்டுக்கு ஒருமுறை பருவமழை பொய்க்கும் என்பதாகும். பருவமழையின் சூதாட்டம் நிகழும் ஒரு நாட்டில் அதைச் சமாளிக்க நம்மிடம் என்ன நீர் மேலாண்மைத் திட்டங்கள் இருந்தன?

ஆளும்கட்சியினர் கோயில்களில் சிறப்பு யாகபூஜை செய்தனர். அண்டா நீருக்குள் அமர்ந்து ‘வருண ஜெபம்’ செய்கிறேன் என்று சிலர் அந்த நீரையும் அழுக்காக்கியதே மிச்சம். இதுவா நீர் மேலாண்மை?

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நீர்வணிக அரசியலின் ஒரு பகுதியே தவிர அதுவும் நிரந்தரத் தீர்வல்ல. எங்கிருந்தோ ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார், `இந்தச் சூழ்நிலையிலிருந்து சென்னையை மழையால் மட்டுமே காப்பாற்ற முடியும்.’ 100% உண்மை.

நிலத்தில் பெய்யும் மழையில் 16% நிலத்தடி நீராகச் சேமிக்கப்பட வேண்டும் என்பது நியதி. மரங்கள் அடர்ந்த நிலமாக இருந்தால் 25% சேமிக்கப்படும். ஆனால் கான்கிரீட் காடான சென்னையில் 4% அளவுகூட சேமிக்கப்படுவதில்லை. இந்திய ஒன்றியம் 40% நிலத்தடி நீரைச் சார்ந்திருக்கும் நிலையில் தமிழ்நாடு 70% அதைச் சுரண்டியே வாழ்கிறது. எனவே மழைநீரைச் சேமிக்காமல் எந்த நீர் மேலாண்மையையும் சாதிக்க முடியாது. நகரங்களின் கழிவுநீரை 100% மறுசுழற்சி செய்யும் திட்டங்களும் முடுக்கிவிடப்பட வேண்டும்.

அதற்கு அரசு தொலைநோக்குத் திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். நீர்ப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பை ஏற்படுத்தும் என்கிற நிதி ஆயோக்கின் எச்சரிக்கையையும் மனதில் கொள்ள வேண்டும். `மழைநீர்' வரதராஜன் சொல்வார்: “500 சதுரஅடி பரப்புள்ள 20,000 வீடுகளின் மொட்டைமாடியில் பெய்யும் ஓராண்டு மழையை நிலத்தடியில் சேமித்தால் அது மேட்டூர் அணையின் கொள்ளளவு நீருக்குச் சமம்” என்று.

நாம் எத்தனை மேட்டூர் அணைகளை இழந்துகொண்டிருக்கிறோம்?!