தனித்தனியாக அரசு நடத்திக் கொண்டிருந்த பல்வேறு மொழி – இன மன்னர்களைப் பீரங்கியால் வென்று உருவாக்கப்பட்டதே பிரித்தானிய இந்தியா. இந்த உண்மையை உணர்ந்த காந்தியடிகள் ஆங்கிலேயர் உருவாக்கியிருந்த மொழி – இன கலப்பு மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று 1920 காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் போடச் செய்தார்.

எனவேதான், இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்று கூறாமல், `அரசுகளின் ஒன்றியம்' (Union of States) என்கிறது. இந்தியை `தேசிய மொழி' (National Language) என அறிவிக்காமல், ஒன்றிய அரசின் `அலுவல் மொழி' என்று குறிப்பிடுகிறது.

1956-ல் இயற்றப்பட்ட மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழி இன மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்தந்த மாநில மொழி, பண்பாடு, பொருளாதார வளர்ச்சிக்காக மாநிலங்கள் மறுவரையறை செய்யப்படுகின்றன என்று அச்சட்டத்தின் நோக்கவுரை கூறுகிறது. ஆனால், முதல் நோக்கமான `மொழிப் பாதுகாப்பு’ என்பதைச் சிதைக்கும் வகையிலேயே 1965-ம் ஆண்டு இந்தி மட்டுமே ஆட்சிமொழி என இந்திய அரசு அறிவித்தது.

அதை முறியடிக்கவே, தமிழ்நாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் எழுந்தது! அப்போராட்டம் நடைபெற்ற அதே தமிழ்நாட்டில்தான், இன்றைக்கு வங்கி, அஞ்சலகம், தொடர்வண்டி நிலையம் உள்ளிட்ட எல்லா நடுவணரசு நிறுவனங்களிலும் இந்தியும் ஆங்கிலமும் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு கடைப்பிடித்துவரும் `இந்தி – சமற்கிருத மொழி பரப்பும் வாரங்கள்’, தமிழினம் உள்ளிட்ட மற்ற இனத்தார்மீது இனப்பாகுபாடு காட்டும் செயலாகும். எல்லா மக்களின் சமத்துவ உரிமையோடு இந்தியாவை நடத்துவதென்றால், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் பரப்புதற்கான `இந்திய மொழிகள் வாரம்’தான் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்திமொழியில் அறிவிக்கப்படும் நடுவண் அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தமிழாக்கம் செய்யாமல் அப்படியே இந்திப் பெயரைத் தமிழில் எழுத வேண்டும் என்கிறது இந்திய அரசு. ஒரே கட்சியின் ஆட்சியில் உலக வல்லரசாகத் திகழ்ந்த சோவியத் ஒன்றியம், பதினைந்து நாடுகளாகப் பிரிந்துபோனதற்கு முதன்மையான காரணம் – மற்ற 14 மொழி பேசும் மக்களிடம் இரசிய மொழியைத் திணித்ததும், இரசிய இன மேலாதிக்கத்தைச் செயல்படுத்தியதும்தான்!

இந்திய ஆட்சியாளர்கள் இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்த்து, இந்தி – சமற்கிருதத் திணிப்புகளைக் கைவிட வேண்டும். தமிழர்கள் தங்கள் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்து சூழ்ந்துவருவதைப் புரிந்துகொண்டு, வரலாற்றில் தமிழினம் இல்லாமல் – தமிழ் மொழி இல்லாமல் துடைக்கப்படும் வரை காத்திருக்காமல், இந்தித்திணிப்பு எதிர்ப்பையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து மக்கள் திரள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்!