Published:Updated:

டாப் 10 பிரச்னைகள் - தலைமுறைமீது சுமத்தப்படும் தவறுகள்!

டாப் 10 பிரச்னைகள்
பிரீமியம் ஸ்டோரி
டாப் 10 பிரச்னைகள்

பிரின்ஸ் கஜேந்திரபாபு; கல்வியாளர்

டாப் 10 பிரச்னைகள் - தலைமுறைமீது சுமத்தப்படும் தவறுகள்!

பிரின்ஸ் கஜேந்திரபாபு; கல்வியாளர்

Published:Updated:
டாப் 10 பிரச்னைகள்
பிரீமியம் ஸ்டோரி
டாப் 10 பிரச்னைகள்

2019-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப்பற்றி பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

நீலகிரி மாவட்டத்தில் பத்துப் பள்ளிகளை மூடினார்கள். தமிழகத்தின் 2019-2020 கல்வியாண்டு இப்படித்தான் தொடங்கியது. தமிழகத்தில் மூன்று கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி மதிய உணவுத் திட்டம் உள்ளிட்டவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. பள்ளி நடத்த நிதியில்லை என்கிற நிலைவந்தபோது ஊர் ஊராகச் சென்று நிலம் வைத்திருந்தவர்களிடம் பள்ளி திறப்பதற்காகக் கையேந்தினார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு;  கல்வியாளர்
பிரின்ஸ் கஜேந்திரபாபு; கல்வியாளர்

கிராமங்களுக்குச் சென்று தாமே முன்னின்று பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து வந்தார். தமிழகத்தின் தரம்மிக்க கல்வி வரலாறு இப்படித்தான் உருவானது. காமராஜர் பள்ளிகளைத் திறந்தார், தற்போதைய அரசு அந்தப் பள்ளிகளை மூடுவதற்கான அலுவலகங்களைத் திறக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்தின் கீழ் முதன்மைச் செயலர் தொடங்கி, ஆசிரியர் பணிநியமன வாரியத்துக்கான செயலர், சமக்ரா கல்விக்கான செயலர் என அத்தனை ஐ.ஏ.எஸ்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இத்தனை நிர்வாகிகள் போதாது என்று நவம்பர் 2019-ல் பள்ளிக்கல்வித்துறைக்கான ஆணையர் ஒருவரையும் தனியாக நியமித்திருக்கிறது அரசு. ஆனால் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் அவருக்குக் கீழ் இயங்கும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பொறுப்புகளே இன்று அந்தத் துறையில் இல்லை. இதனால் களத்துக்குச் சென்று தொடக்கப் பள்ளிகளின் நிலையை ஆய்வு செய்யும் அலுவலர்களே இன்றைய தேதியில் தமிழகத்தில் கிடையாது. ஒருபக்கம் கல்வித்துறையில் அதிகரிக்கப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மறுபக்கம் களத்துக்குச் சென்று பார்வையிடும் அலுவலர்களின் எண்ணிக்கை குறைவது எனப் பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றும் கொள்கை முடிவை அரசு யாருடைய ஒப்புதலுடன் எடுத்தது?

தலைமுறைமீது சுமத்தப்படும் தவறுகள்!
தலைமுறைமீது சுமத்தப்படும் தவறுகள்!

ஆணையரின் உத்தரவின் பேரில் அருகில் இருக்கும் உயர்நிலைப்பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளிகள் இணைக்கப்படும். உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே இணைக்கப்பட்ட பள்ளிகளையும் நிர்வகிப்பார்கள். இணைக்கப்பட்ட இந்தப் பள்ளிகளுக்கு அந்தப் பள்ளிகளின் உயர்நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர்களே பாடம் நடத்துவார்கள் என்று கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. ஒட்டுமொத்தத் தமிழகமும் எதிர்க்கும் மத்திய அரசின் வரைவு தேசியக் கல்விக்கொள்கை ஒருங்கிணைந்த பள்ளி வளாகங்கள் என்கிற பெயரில் குறிப்பிடுவதும் இதைத்தான். இதன்மூலமாக பிள்ளைகளுக்கான சமமான கற்றல் வாய்ப்பை அரசே பறிக்கிறது. இத்தனையும் பறித்துவிட்டு ஐந்தாவது மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு முறையை அரசு அறிவித்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியில்கூட மதராஸ் மாகாணத்தில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்தான் பள்ளிகளில் பயிற்றுமொழியாக இருந்தது. ஆங்கிலம் ஒரு பாடமாகக்கூடக் கருதப்படவில்லை. மக்கள் தங்களுடைய பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறார்களே ஒழிய ஆங்கில வழிப்பாடம் என என்றுமே அவர்கள் கேட்கவில்லை. 2020 கல்வி ஆண்டிலாவது அரசு சட்டத்தை மதித்துத் தாய்மொழி வழிக்கல்வியைப் பரவலாக்க வேண்டும், பள்ளிகளை இணைப்பதை நிறுத்திவிட்டு அண்மைப் பள்ளிகளாக ஊராட்சிப் பள்ளிகளை அறிவித்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.