தமிழகத்திற்கு மூன்றாம் இடம்! ஆனால் நாம் பெருமைப்பட முடியாது. லஞ்ச-ஊழல் மிகுந்த மாநிலங்களில் மூன்றாமிடம் என்பது பெருமைக்குரிய விஷயமா என்ன..?

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட 2018-ம் ஆண்டிற்கான `லஞ்ச-ஊழல் அறிக்கை'யில் உத்தரப்பிரதேசம், பஞ்சாபிற்கு அடுத்தபடியாகத் தமிழகம். தமிழகத்திற்கு மூன்றாமிடம் பெற்றுத்தந்த `பெருமைக்குரிய' முதல் மூன்று துறைகளாக இருப்பது பத்திரப்பதிவுத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை.

குட்கா வழக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் டி.ஜி.பி உட்பட காவல்துறை உயரதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியிருக்கிறது. தனது துறையில் ஊழல் நடந்திருந்தால் அதை மூடிமறைக்கவே பார்ப்பார்கள் துறைத் தலைவர்கள். ஆனால், டி.ஜி.பி.திரிபாதி, காவல்துறைக்கு ரூ.350கோடிக்கு சிசிடிவி வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதை அறிந்து, இதுகுறித்து விசாரிக்க லஞ்ச-ஒழிப்புத்துறை விசாரணை கோரியிருப்பது பாராட்டுக்குரியது.

மதுரை கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சகாயம், ஐ.ஏ.எஸ் தாக்கல்செய்த அறிக்கையின் மீது கிரானைட் கல்லை வைத்து மூடிவைத்துள்ளது தமிழக அரசு. சென்னை மாநகராட்சிப் பணிகளில் ஆற்றுமணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளது என்ற புதிய குற்றச்சாட்டுகள், வலுவான ஆதாரங்களுடன் வெளியாகி யுள்ளன. இந்தப் புதுவகையான மணல்கொள்ளைக்குள் புதைந்திருக்கும் மர்மத்தைத் தோண்டியெடுக்க எவ்வளவு காலம் பிடிக்குமோ தெரியாது!

உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் வேலுமணிமீது தொடரப்பட்ட வழக்கை விரைவுபடுத்த நீதிமன்றம் தொடர்ந்து சாட்டை சுழற்றிவந்தாலும் இதுவரை ஆரம்பக்கட்ட விசாரணையைக்கூட லஞ்ச ஒழிப்புத்துறை முடிக்கவில்லை.

பன்னாட்டுத் தகவல்தொழில்நுட்ப நிறுவனமான சி.டி.எஸ், தனது புதிய அலுவலகக் கட்டடத்திற்கு ஒப்புதல் வழங்க, தமிழக அரசுக்கு ரூ.20 கோடி லஞ்சம் கொடுத்தது. இதைக் கண்டுபிடித்த அமெரிக்க நீதிமன்றம், அமெரிக்கப் பங்குச்சந்தை நிறுவனம் சி.டி.எஸ்ஸுக்கு ரூ.175 கோடி அபராதம் விதித்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனம், அபராதம் கட்ட சம்மதித்தது. லஞ்சம் கொடுத்தவருக்கு தண்டனை வழங்கியாயிற்று; வாங்கியவர் களுக்கு..?

திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரி ஒருவரைக் கையும் களவுமாக எங்கள் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறைவசம் பிடித்துக்கொடுத்துக் கைது செய்ய வைத்தது. அப்போது, கைது செய்ய வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி “இவரை ஏற்கெனவே ஒருமுறை லஞ்சம் வாங்கும்போது கைது செய்திருக்கிறோமே, மீண்டுமா?” என்று கேட்டு எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து விடுதலையாகிய, மீண்டும் மீண்டும் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அரசியல்வாதிகளின் ஊழலுக்குத் துணைபோகும் இதுபோன்ற அதிகாரிகள் இருக்கும்வரை எப்படி ஊழல் ஒழியும்?