Published:Updated:

டாப் 10 பிரச்னைகள் - சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்!

சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்!
பிரீமியம் ஸ்டோரி
சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்!

எஸ்.ஆர். பிரபு; திரைப்படத் தயாரிப்பாளர்

டாப் 10 பிரச்னைகள் - சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்!

எஸ்.ஆர். பிரபு; திரைப்படத் தயாரிப்பாளர்

Published:Updated:
சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்!
பிரீமியம் ஸ்டோரி
சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்!

2019-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப்பற்றி பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

2019 தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும் நல்லாண்டு. அதேசமயம் சில பின்னடைவுகளும் உண்டு. மகிழ்ச்சியான விஷயங்களை முதலில் பார்ப்போம்.

டாப் 10 பிரச்னைகள் - சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2018-ம் ஆண்டு வேலை நிறுத்தப்போராட்டங் களால் குறைந்த படங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்தது. 2019-ல் வெளியான படங்கள் 200-க்கும் மேல். தமிழகம் முழுக்க தியேட்டர்கள் பலவும் மேம்படுத்தப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டதால் ரசிகர்கள் குடும்பத் துடன் வந்து படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் மட்டு மல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைக் கண்டிருக்கின்றன. `கோமாளி', `அசுரன்', `கைதி' போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் நல்ல லாபம் பார்த்திருக்கிறார்கள். டிக்கெட் விலை உயர்வும் இந்த வெற்றிப் படங்களின் பொருளாதார வெற்றியை இன்னும் உயர்த்தியது.

எஸ்.ஆர். பிரபு; திரைப்படத் தயாரிப்பாளர்
எஸ்.ஆர். பிரபு; திரைப்படத் தயாரிப்பாளர்

இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி வீடியோ நுகர்வுக் கலாசாரத்தை அதிகரித்துள்ளது. இதனால் யூடியூப் ஸ்டார்களின் வருகையும் அதிகரித்துள்ளது. பெரிய OTT தளங்கள் பிராந்திய மொழிகளில் வெப் சீரிஸ், ஒரிஜினல்ஸ் எனக் களம் இறங்கியதால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகியிருக்கிறது. அதிகரிக்கும் OTT கன்டென்ட்களின் தயாரிப்பு தயாரிப்பாளர் களுக்கு பட்ஜெட்டுக்குள் படமெடுக்கும் அடிப்படைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாசிட்டிவ்களை அடுக்கினாலும் இந்தத் துறையின் அடித்தளம் ஆட்டம் காணும் விஷயங்களுக்கு இன்னும் தீர்வில்லாமல்தான் இருக்கிறது.

தயாரிப்பாளர்களுக்கிடையே புரிந்துணர்வு இல்லாமையும் அதிகார ஆசையும் தயாரிப்பாளர் சங்கத்தைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தயாரிப்பாளர் சங்க அலுவல்கள் நின்ற நிலையில் அதை வழிநடத்த அமைக்கப்பட்ட குழுவும் செயலற்றுக் கிடக்கிறது. விளைவு, பல நூறு தயாரிப்பாளர்கள் தேவையான உதவிகளைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.

சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்!
சில நம்பிக்கைகளும் சிக்கல்களும்!

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் பற்றாக்குறை காரணமாகத் தரமான படைப்புகளின் வருகை குறைவாகவே உள்ளது. காப்புரிமைச் சட்டத்தைப் பற்றித் தெளிவில்லாததால் கதைத் திருட்டுப் புகார்களும் அதிகரித்துவருகின்றன. படங்களின் எண்ணிக்கை அதிகரித்தும், நடிகர்கள் பிஸியாக இருந்தும் படங்களின் வெற்றி சதவிகிதம் இன்னும் 10 சதவிகிதம்தான் இருப்பதற்குக் காரணம், நல்ல கதையும் எழுத்தாளர்களும் இல்லாததுதான்.

சமீபகாலமாகத் தமிழ் சினிமாவைத் தாங்கிவந்தது இந்தி மற்றும் வட மொழி டப்பிங் உரிமம் மற்றும் சாட்டிலைட் பிஸினஸ். இந்தி டப்பிங் வர்த்தகத்தை நம்பிப் பல படங்கள் தொடங்கப்பட்டுவந்தது. இந்நிலை யில் இதன் வீழ்ச்சி பல சிறு, குறு பட்ஜெட் படங்களின் எதிர்காலத்தை பாதித்துள்ளது.

மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் சினிமா டிக்கெட் விலை குறைவாகவே இருப்பினும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது ஒரு சாராருக்கு இன்னும் செலவு பிடிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. சினிமாத்துறையின் எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு வரிச்சுமையைக் குறைக்க வேண்டும். அதே சமயத்தில் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு உதவிடும் திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism