Published:Updated:

டாப் 10 பிரச்னைகள் - வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!

வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!
பிரீமியம் ஸ்டோரி
வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!

சுகந்தி; பெண்ணுரிமை செயற்பாட்டாளர்

டாப் 10 பிரச்னைகள் - வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!

சுகந்தி; பெண்ணுரிமை செயற்பாட்டாளர்

Published:Updated:
வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!
பிரீமியம் ஸ்டோரி
வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!

2019-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப்பற்றி பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

பெண்கள்மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக, கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் சமீபகாலமாகத் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. பொள்ளாச்சி போன்ற சில சம்பவங்கள் மட்டுமே வெளியில் வருகின்றன. பாதிக்கப்படும் பெண்களில் வெறும் 10 சதவிகிதம் பேர்தான் போலீஸில் புகார் தர முன்வருகிறார்கள்.

டாப் 10 பிரச்னைகள் - வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கின்றன. அவை பெரும்பாலும் வெளியே வருவதில்லை. பாதிக்கப்படும் பெண்கள் பணியிட மாற்றம் வாங்கிக்கொண்டு போய்விடுவது, உயர் அதிகாரிகளிடம் சொல்லி, குற்றவாளியை எச்சரிப்பது என்பதுதான் நடக்கிறது. பாதிக்கப்படும் பெண்களில் ஓரிருவர்தான் புகார் கமிட்டியை அணுகுகிறார்கள். அங்கு, பிரச்னை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடனேயே விசாரணை நடக்கிறது. அதனால், பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காவல்துறையில் ஐ.ஜி ஒருவர்மீது பெண் எஸ்.பி ஒருவர் அளித்த பாலியல் புகாரில் இன்றுவரை என்ன நடந்திருக்கிறது? உயர் அதிகாரிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை நடந்துகொண்டிருக்கிறது. எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அந்தப் பெண் அதிகாரிக்கே இன்னும் நீதி கிடைக்கவில்லையென்றால், பிற துறைகளில் உள்ள பெண்களின் நிலை எப்படி இருக்கும், பாருங்கள்.

டாப் 10 பிரச்னைகள் - வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!

அருப்புக்கோட்டைக் கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் என்ன நடந்தது? பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் பாலியல் வக்கிரத்துக்குக் கல்லூரி மாணவிகளைப் பயன்படுத்த முயற்சி நடந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால், அடுத்த கட்டத்துக்கு நகராமல் அந்த வழக்கு முடக்கப்பட்டது. பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் பெயர் எதுவும் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் வெளிவரவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை முழுமையாகக் கண்டுபிடிக்கவில்லை. சிலர்மீது போடப்பட்ட குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாதிய ஆணவப்படுகொலைகளால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், ஆண்டிமடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, சொந்த சித்தப்பாவே வல்லுறவு கொண்ட கொடுமை நிகழ்ந்தது. மாற்றுத்திறனாளிப் பெண்கள் பாதிக்கப்பட்டால் அதற்கான சிறப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால், காவல்துறை அப்படிச் செய்வதில்லை. பாதிக்கப்பட்டவர் பட்டியலினப் பெண்ணாக இருந்தாலும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்படுவதில்லை.

வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!
வன்முறைக்களமாகும் பெண்ணுடல்!

பெரும்பாலான வழக்குகளில் விரைவாக நீதி கிடைப்பதில்லை. பல வழக்குகளில் பத்து ஆண்டுகள்கூட ஆகின்றன. இவ்வளவு காலதாமதம் ஆவதால், நீதி பெற வேண்டும் என்ற மனஉறுதியுடன் இருக்கும் பெண்கள்கூடச் சோர்ந்துவிடுகிறார்கள். எனவே, மாவட்டம்தோறும் இதற்கென விரைவு நீதிமன்றங்கள் அமைத்து, விரைவில் நீதி கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால், பாலியல் வன்கொடுமைகளில் தொடர்புடைய குற்றவாளிகள் என்கவுன்டரில் கொல்லப்படுவதைக் கொண்டாடும் நிலைதான் நீடிக்கும். அது சட்டத்துக்கும் சமூகத்துக்கும் நல்லதல்ல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism