Published:Updated:

ஆன்மிக மாநாடு ஆற்றைப் பாதுகாக்குமா?

வைகைப் பெருவிழா
பிரீமியம் ஸ்டோரி
வைகைப் பெருவிழா

வைகைப் பெருவிழா சர்ச்சை!

ஆன்மிக மாநாடு ஆற்றைப் பாதுகாக்குமா?

வைகைப் பெருவிழா சர்ச்சை!

Published:Updated:
வைகைப் பெருவிழா
பிரீமியம் ஸ்டோரி
வைகைப் பெருவிழா

மதுரையில் ஜூலை 24-ம் தேதி தொடங்கியுள்ள ‘வைகைப் பெருவிழா’ நிகழ்ச்சி, ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அகில பாரதிய சந்நியாசிகள் பேரவை மற்றும் மதுரை வைகை நதி மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. தாமிரபரணி புஷ்கரம் போலவே இந்த விழாவைவும் நடத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆனால், ‘இதன் பின்னணியில் சங் பரிவார் அமைப்பினர் உள்ளனர். பி.ஜே.பி-யின் கொள்கைகளைப் பரப்பும் இந்த விழா, மதச்சார்புடன் நடத்தப்படுகிறது’ என்று சில அமைப்புகள் புகார் எழுப்பியுள்ளன.

ஆன்மிக மாநாடு ஆற்றைப் பாதுகாக்குமா?

அதே நேரத்தில், ‘வைகை நதியைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழலைப் பேணுவது குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் அனைத்துச் சமூக மக்களும் இணைந்து இந்த விழாவை நடத்துகிறோம். காவிரியிலும் தாமிரபரணியிலும் நதிகளைக் காக்கும் விழாக்களை ஏற்கெனவே நடத்தியுள்ளோம். அதேபோல் வைகை அம்மனுக்கு ஆடியில் விழா நடத்துகிறோம். இது, வைகையைக் காக்கும் விழா. துறவியர் மாநாடு, வருண ஜபம், சாக்த பெண்கள் மாநாடு, கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு, ஐயப்பா சேவா சமாஜ் மாநாடு, வைணவ மாநாடு, சிவனடியார்கள் மாநாடு, பசு பாதுகாப்பு மாநாடு, முத்தமிழ் மாநாடு, நதிநீர் பாதுகாப்பு - விவசாயிகள் மாநாடு, சன்மார்க்க மற்றும் சித்தர்கள் மாநாடு என தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். ஆடிப்பெருக்கின்போது புனித நீராடலுடன் விழா முடிவடையும். இதில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எனப் பல கட்சியினரும் கலந்துகொள்கிறார்கள்’ என்கிறது விழாக்குழு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆன்மிக மாநாடு ஆற்றைப் பாதுகாக்குமா?

இந்த நிலையில் ஜூலை 22-ம் தேதி, மதுரை மக்களின் ஒற்றுமையைப் பிரிக்கும் வகையில் `வைகை ஆற்றுக்குள் மத விழா நடத்துவதைத் தடுக்க வேண்டும்’ என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் சிவில் உரிமைக்கழகம், சமநீதி வழக்கறிஞர் சங்கம், திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தி.மு.க. வழக்கறிஞர் அணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் புகார் மனுவையும் அளித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே தொடங்கிய துறவியர் மாநாட்டில் பேரூர் ஆதீனம், கோவிலூர் ஆதீனம், மன்னார்குடி ஜீயர், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் மிலின் பரேண்டே ஆகியோர் கலந்துகொண்டனர்.

வாஞ்சிநாதன் தலைமையில் மனு அளித்தபோது...
வாஞ்சிநாதன் தலைமையில் மனு அளித்தபோது...

இதுகுறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதனி டம் பேசினோம். “மதுரை மாநகர் மக்கள், மத நல்லிணக் கத்துடன் வாழ்ந்து வருகிறார் கள். இதைச் சீர்குலைத்து, மதரீதியாகப் பிளவை உண்டாக்கும் வகையில் இந்த விழாவை நடத்துகிறார்கள். ஏற்கெனவே சுற்றுச்சூழல் மாசுபட்டிருப்பதால், வறண்டு கிடக்கும் வைகை ஆறு, இந்த விழாவால் மேலும் மாசுபட்டு நாசமாகும். ‘வைகையைப் பாதுகாக்கிறோம்’ என்ற பெயரில் ஆன்மிக அமைப்பினரின் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலமே இவர்கள் விழா நடத்தும் நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. இதை, மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. அனைவருக்கும் பொதுவான வைகை நதியை, மதவாத அரசி யலுக்குப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.

ராஜன்
ராஜன்

வைகை நதியைப் பாதுகாக்கப் பல்வேறு போராட்டங்களை நடத்திய வைகை நதி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ராஜன், இந்த விழாவால் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார். ராஜனிடம் பேசினோம். “சந்நியாசிகள் நடத்து கின்ற விழாவில் எங்கள் அமைப்பும் இணைந்து செயல்படுகிறது. மேகமலை புலிகள் சரணாலயம் அமைக்கும் பணிகள், ஸ்மார்ட் சிட்டி ஆகிய திட்டங்களுக்காக வைகை ஆற்றில் பக்கச் சுவர்கள் எழுப்பும் பணிகள் நடக்கவிருக்கின்றன. இதனால், ஆற்றின் அகலம் குறையும். இதுகுறித்து விழாவுக்கு வரவிருக்கும் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம் முறையிட உள்ளேன். இங்கு நடக்கும் அனைத்து விழாக்களிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. எதிர்க்க வேண்டியதை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சினிமா படப்பிடிப்புக்காக வைகை ஆற்றின் மைய மண்டபம் சேதப்படுத்தப்பட்டபோதும், மாநகராட்சி சார்பில் ஆற்றுக்குள் கபடிப் போட்டி நடந்தபோதும், தனியார் ஜவுளிக்கடையின் கார் பார்க்கிங் ஆற்றில் அமைக்கப்பட்ட போதும் எதிர்த்துப் போராடினேன். ஆற்றுக்குள் கழிவுகள் கலப்பது குறித்து கவலைப் படாதவர்கள், சாமியார்கள் விழாவில் கலந்து கொள்வதை மட்டும் பெரிதுபடுத்துகிறார்கள்” என்றார்.