Published:Updated:

கோயில், பள்ளி, மருத்துவமனை... ஜோதிகாவின் கருத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?#VikatanPollResults

ஜோதிகா
ஜோதிகா

"கோயிலுக்கு அதிக பணம் கொடுத்து பராமரிக்கிறீர்கள். அதை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்" என்று ஜோதிகா பேசியிருப்பது பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக நடந்த பெண்களுக்கான ஒரு விருது வழங்கும் விழாவில் தன் தஞ்சாவூர் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து ஜோதிகா பேசினார். கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோவில்,

"தஞ்சைப் பெரிய கோயில் மிகவும் புகழ்பெற்றது அழகாக இருக்கும், அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நானும் பார்த்திருக்கிறேன். மிகவும் அழகாக இருந்தது. அதை அருமையாகப் பராமரித்து வருகிறார்கள். மறுநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் நடந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை வாயால் கூற முடியாது, அவ்வளவு மோசமாக இருந்தது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள் வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். மருத்துவமனையில் நான் அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மருத்துவமனைகளும் பள்ளிகளும் மிக முக்கியம். தயவுசெய்து அவற்றுக்கு நிதியுதவி கொடுங்கள்” எனப் பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? விகடன் சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்கள் இதோ...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Twitter Poll
Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Helo Poll
Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து நமக்குக் கிடைத்த இறுதி முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
இது குறித்து மக்களின் பிற கருத்துகளைக் கீழே கமெண்டில் பார்க்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு