‘‘பொறியியல் படிப்பு முடித்து கனடா செல்ல இருந்த மகளை எமன் தூக்கிட்டான். ஒரே பெண்ணை இழந்து நிக்கிற என் நிலை, இனி எந்தப் பெற்றோருக்கும் வரக் கூடாது’’ என்று கதறிய சுபஸ்ரீ தந்தையின் குரல் நெஞ்சைவிட்டு அகல மறுக்கிறது. 22 வயது மகளை, விரைவில் மணக்கோலத்தில் பார்க்கக் கனவுகண்டிருப்பார் அந்தத் தந்தை. அவரின் கனவு, அந்தத் தண்ணீர் லாரியின் அடியில் சிக்கிச் சிதறியது. பிணக்கோலம் முந்திக்கொண்டது. சுபஸ்ரீயை அடக்கம் செய்துவிட்டோம். தோண்டி எடுத்து விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன.

முதலில் பேனர் கலாசாரம். வாக்குக்குப் பணம் உள்ளிட்ட சகல வித்தைகளையும் காட்டி, கோடிகளைக் கொட்டி, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சியைப் பிடிக்கும் தொழிலாகிப்போன இன்றைய அரசியல் பெற்றெடுத்த டிஜிட்டல் குழந்தைதான், விளம்பர பேனர். தொகுதிப் பக்கம் அதிகம் எட்டிப்பார்க்காத தன்னை மக்கள் மறந்துவிடுவார்களே என்ற அச்சம்; விளம்பர போதைக்கு அடிமையான தன் தலைவனைக் குளிர்விக்க வேண்டிய ஜனநாயகக் கடமை என பேனர் கலாசாரத்துக்குப் பின்னணியில் பல காரணிகள் இருக்கின்றன.

இப்படி அற்ப அரசியல் காரணங்களுக்காக வைக்கப்படும் விளம்பர பேனர்கள், அப்பாவி மக்களின் உயிர் குடிக்கும் நிலையை நோக்கித் தற்போது வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது. அப்போது சாலையில் வைக்கப்பட்ட அலங்கார வளைவின் காரணமாக ரகு என்பவர் மரணமடைந்தார். கோவை சம்பவத்திலிருந்து எந்தப் பாடத்தையும் தமிழக அரசு கற்றுக்கொள்ளவில்லை.

1991 - 1996 காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கட்-அவுட் வைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் பேனர் வைக்கும் காலகட்டம் வரையிலான 25 ஆண்டுகளில், இந்த விளம்பர அரசியல் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துவந்துள்ளது. தி.மு.க-வும் இதே வழியைத்தான் பின்பற்றியது. 2006-2011 கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்சி மாநாடு, கட்சிப் பிரமுகர்களின் இல்ல விழாக்களில் விளம்பர பேனர்கள் தாராளமாக வைக்கப்பட்டன. கடந்த எட்டு ஆண்டுகளாக தி.மு.க ஆட்சியில் இல்லாத காரணத்தால், அ.தி.மு.க-வின் பேனர் பயங்கரவாதம்தான் அதிகம் தென்படுகிறது.

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக 2006-ம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன் பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக ஏராளமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. டிராஃபிக் ராமசாமி, இந்த வழக்குகளுக்காக புகைப்பட ஆதாரங்களோடு நீதிமன்றம் வருவது வாடிக்கையான நிகழ்வாகிப்போனது.

இதுவரை பிறப்பித்த உத்தரவுகளால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டு, 2017 அக்டோபரில் நீதிபதி வைத்தியநாதன் ‘உயிரோடு இருப்பவர்களின் படங்கள் பேனர்களில் இடம்பெறக் கூடாது’ என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தீர்ப்பை எதிர்த்து, சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்தது. அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 2017 டிசம்பரில் இந்த உத்தரவை ரத்துசெய்தார். இதைத் தொடர்ந்து, 2018 டிசம்பரில் சட்டவிரோத பேனர்களுக்கு தடைவிதித்து புதிய உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி சத்தியநாராயணா (சுபஸ்ரீ வழக்கையும் இவர்தான் விசாரித்து உத்தரவிட்டுள்ளார்). இப்படி, சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக 2006 முதல் 2018 வரையில் ஏராளமான உத்தரவுகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப் பட்டுள்ளன. ஆனால் பலன்..?

சுபஸ்ரீ விவகாரத்துக்கு வருவோம். சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் நடந்த விபத்து இது. ஆனாலும், ஆம்புலன்ஸ் வரவே இல்லை. விபத்துக்குள்ளான சுபஸ்ரீயை, இளைஞர்கள் சிலர் கையில் ஏந்தியபடி 100 மீட்டர் தூரம் கடக்கிறார்கள். அதன் பிறகு, சரக்கு வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுகிறார். ‘விபத்துப் பகுதிக்கு எட்டு நிமிடத்துக்குள் ஆம்புலன்ஸ் வந்துவிடும்’ என்று அடிக்கடி பேட்டியளிக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `இந்த இடத்துக்கு கடைசி வரை ஆம்புலன்ஸ் ஏன் வரவில்லை?’ என்ற கேள்விக்கு, ‘விசாரித்துக்கொண்டிருக் கிறோம்’ என்று சீரியஸாகப் பதிலளிக்கிறார்.

இந்தக் கொடூரமான சம்பவத்தை காவல்துறை கையாண்டவிதம் கொடுமையின் உச்சம்! குற்றத்தைப் பதிவுசெய்ய வேண்டியது பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு காவல் நிலையமா அல்லது பரங்கிமலை போக்குவரத்துப் பிரிவா என்று இரண்டு துறைகளும் பட்டிமன்றம் நடத்தி, கடைசியில் ஆளுக்கொரு எஃப்.ஐ.ஆர் பதிந்துள்ளன. காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உயரதிகாரிகள், குற்றவியல் விசாரணைச் சட்டம் 178(D)-ன் அடிப்படையில் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிந்திருந்தாலே போதுமானது என்கின்றனர். இப்படி இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிந்து வழக்கை நடத்துவது எதிர்காலத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதுவே, குற்றவாளிகளின் விடுதலைக்குக்கூட காரணமாக அமையலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணா தலைமையிலான அமர்வு, காவல்துறையின் அலட்சியத்தைக் கடுமையாக விமர்சித்தது. சம்பவம் நடந்த இடத்தில் என்னென்ன இருந்தன என்பதைப் பட்டியலிடும் அப்சர்வேஷன் மகஜரில் ‘பேனர்’ என்ற வார்த்தையே இல்லை. இது, முக்கிய ஆதாரங்களைத் தெரிந்தே மறைப்பதற்குச் சமம். இதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்ல முடியாமல் திணறினார் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார். மேலும், ‘சம்பவ இடத்தில் எத்தனை பேனர்களைப் பார்த்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘மூன்று’ என்று இன்ஸ்பெக்டர் பதிலளித்தார். கடுப்பான நீதிபதிகள், ‘இன்றைய நாளிதழில் வந்த புகைப்படத்திலேயே அதிக பேனர்கள் இருப்பது கண்கூடாகத் தெரியும்போது, யாரைக் காப்பாற்ற இப்படிச் செய்கிறீர்கள்? பேனரில் இருந்த கட்சிக்கொடியின் நிறம் உங்களை கடமை செய்யவிடாமல் தடுக்கிறதா?’ என்று கேள்விக் கணைகளால் காவல்துறையைத் துளைத்தெடுத்தனர். ‘ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதுதான் எங்களின் வழக்கம்’ என்பதை நீதிபதியிடம் வெளிப்படையாகச் சொல்ல இயலாத காரணத்தால், வாயடைத்து நின்றிருந்தனர் காவல்துறையினர்.

அலட்சியமாக வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் பதியப்பட்ட வழக்கில், சுபஸ்ரீ மீது ஏறிய லாரியின் ஓட்டுநர் கைதுசெய்யப் பட்டுள்ளார். பேனர் அச்சடிக்கப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பேனரை அச்சடிக்கச் சொன்னவரும், பேனர்களை சாலையின் நடுவே வைக்கச்் சொன்னவருமான அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், இதுநாள் வரை கைதுசெய்யப்படவில்லை. இதுதான் பொதுவெளியில் தமிழக அரசின்மீது பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுபஸ்ரீ வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட அதே நேரத்தில், தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட், அ.ம.மு.க எனப் பல கட்சிகள், தங்கள் கட்சியினர் பேனர் கலாசாரத்திலிருந்து தள்ளி நிற்க வேண்டும் என்று அறிக்கைவிடுத்தன. அ.தி.மு.க-வின் அறிக்கையில் ‘சுபஸ்ரீ’, ‘இரங்கல்’ என்ற வார்த்தைகளே இடம்பெறாமல்போனது வருத்தத்துக்குரியது.

பேனர்கள் வைப்பதற்கான விதிமுறைகளை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. ஒவ்வோர் உள்ளாட்சியிலும் இது உள்ளது. காவல்துறையிடம் முன்அனுமதி பெறுவது, பேனர் வைக்கும் இடத்தைக் குறிப்பிடுவது, பேனரில் அனுமதி எண் அச்சிடுவது போன்ற எல்லா விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றினால், சென்னை நகரின் நடைபாதை, சாலையின் நடுவே, சாலையின் ஓரங்கள் என பெரும்பாலான இடங்களில் பேனர்கள் வைக்க முடியாது. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத குறிப்பிட்ட சில இடங்களில்தான் பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படும் என்ற விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுவதால்தான் பிரச்னை பூதாகரமாகிறது.

விளம்பரக் கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?

அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால், உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும். கடுமையான குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆளுங்கட்சிப் பிரமுகராக இருந்தாலும், சட்டவிரோதமாக பேனர் வைத்தால் சிறைக்குப் போகவேண்டியிருக்கும் என்ற செய்தியை மாநிலமெங்கும் உள்ள ஆளுங்கட்சியினருக்கு வலுவாகத் தெரிவிப்பதற்கு இதுவே சரியான வழி.

அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் விடுத்துள்ள அறிக்கையின்படி நடந்தாலே பெரும்பாலான பேனர் பிரச்னைகள் தீர்ந்துவிடும். தேர்தல் வாக்குறுதிகளையே அசட்டையாக காற்றில் பறக்கவிடும் கட்சிகள், பேனர் வாக்குறுதிகளை இறுதிவரை உறுதியாகப் பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குறிதான்!