Published:Updated:

`டெஸ்ட் ரிசல்ட் வந்தால்தான் போர்டிங் பாஸ்!'- விமானத்தில் பெண்ணுக்கு நடந்த கட்டாய கர்ப்ப பரிசோதனை

கர்ப்ப பரிசோதனை
கர்ப்ப பரிசோதனை

பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை என்று தெரியவந்தால்தான் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியும் என்று வேறு கூறியுள்ளனர்.

ஹாங்காங் விமான நிறுவனம் ஒன்று சில நாள்களுக்கு முன்பு தங்கள் நிறுவன விமானத்தில் பயணிக்க வந்த ஒரு ஜப்பானியப் பெண்ணை கட்டாயப்படுத்தி கர்ப்ப பரிசோதனைக்கு உட்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

விமான நிறுவனம்
விமான நிறுவனம்

25 வயதான மிடோரி நிஷிடா என்ற பெண் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். இவர் சில நாள்களுக்கு முன்பு ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள சைபனுக்கு விமானத்தில் பயணித்தார். அப்போது ஹாங்காங் விமான நிறுவனத்தினர் தன்னை நடத்திய விதம் பற்றி வருந்தி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் நிஷிடா. அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் ஹாங்காங் விமான நிறுவனம் தற்போது மன்னிப்புக் கோரியுள்ளது.

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சைபனுக்குப் பயணம் மேற்கொண்ட நிஷிடாவை ஹாங்காங் விமான நிறுவனத்தினர் விமானத்திலேயே கர்ப்ப பரிசோதனை செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளனர். பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இல்லை என்று தெரியவந்தால்தான் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியும் என்று வேறு கூறியுள்ளனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிஷிடா இறுதியில் வேறு வழி இல்லாமல் பரிசோதனைக்கு முன்வந்துள்ளார்.

விமானம்
விமானம்

இந்தச் சம்பவம் பற்றி நிஷிடா தன் பதிவில், ``நான் விமானத்தில் பெண் ஒருவரால் வழிநடத்தப்பட்டேன். அவர் தன்னை மருத்துவப் பயிற்சியாளர் என்று கூறிக்கொண்டார். இறுதியில் என்னை ஒரு கழிவறைக்கு அனுப்பி கர்ப்ப பரிசோதனை உபகரணம் ஒன்றை வழங்கி சிறுநீர் கழிக்கச் சொல்லி பரிசோதனை செய்தனர். அதில் நான் கர்ப்பமாக இல்லை என்று தெரியவந்தது. அதன் பின்னரே, விமான ஊழியர்கள் இறுதியாக எனக்கு போர்டிங் பாஸ் வழங்கினர். அது ஒரு மோசமான அனுபவம்" என்று பகிர்ந்திருந்தார்.

`இரண்டு கர்ப்பப்பைகள்; ஆறு முறை கருச்சிதைவு!'- எட்டு வருடங்கள் கழித்து குழந்தையைப் பெற்றெடுத்த பெண்

அமெரிக்காவில் குழந்தை பிறந்தால் அங்கு குடியுரிமை பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் மற்ற நாடுகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் அமெரிக்காவில் வந்து குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்று அமெரிக்க அரசாங்கம் இதுபோன்ற விதிமுறைகளை வலுவாக்கியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டில் வடக்கு மரியானா தீவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிட்டத்தட்ட 600 குழந்தைகள் பிறந்தன. அவர்களில் 575 பேர் சீன தாய்மார்களுக்குப் பிறந்தவர்கள் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

விமானம்
விமானம்

இதனால் 2019 பிப்ரவரி முதல் சைபனுக்குச் செல்லும் விமானங்களில் பயணிக்கும் பெண்களிடம் இந்த கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இறுதியாக, இந்தச் சம்பவம் குறித்து தங்களின் வருத்தத்தைத் தெரிவித்து நிஷிடாவிடம் மன்னிப்புக் கோரியுள்ள ஹாங்காங் விமான நிறுவனம், அமெரிக்காவின் குடியுரிமைச் சட்டங்களை கடைப்பிடிக்கவே தாங்கள் இவ்வாறு செய்ய நேர்ந்தது என்று கூறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு