Published:Updated:

குர்ஷித் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

குர்ஷித் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
குர்ஷித் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
குர்ஷித் ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி:மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளை மீதான முறைகேடு  புகார்கள் குறித்த மேலும் பல ஆதாரங்களை வெளியிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்த  ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குர்ஷித்தும், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தும் ஜாகீர்   ஹுசேன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.அதன் மூலம் மாற்றுத்   திறனாளிகளுக்கு உதவி வழங்க மத்திய அரசு ரூ.71.50 லட்சம் ஒதுக்கியது.

அந்த நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், குர்ஷித்தின் மனைவி நடத்தி வரும்   தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை அபகரித்துக்கொண்டதாகவும்,   இதையடுத்து சல்மான் குர்ஷித் பதவி விலக வேண்டும் எனவும் சமூக சேவகர் அரவிந்த்   கெஜ்ரிவால் புகார் தெரிவித்திருந்தார்.ஆனால் கெஜ்ரிவாலின் புகாரை நேற்று மறுத்த  குர்ஷித், அது தொடர்பான புகைப்பட ஆதாரம் ஒன்றை செய்தியாளர்கள் கூட்டத்தில்  வெளியிட்டார்.

ஆனால் அந்த புகைப்பட ஆதாரம் போலியானது என்று கூறிய கெஜ்ரிவால், குர்ஷித்  மீதான குற்றச்சாட்டில் உறுதியாக உள்ளதாகவும், தமது புகாருக்கு வலு சேர்க்கும்   மேலும் பல ஆதாரங்களை இன்று வெளியிடப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

##~~##
அதன்படி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால்,குர்ஷித்தின்  ஆதாரங்கள் தவறானவை என்று கூறி மேலும் சில ஆதாரங்களை வெளியிட்டதோடு,  இந்த ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு உள்ளதாகவும்,காங்கிரஸ் கட்சி மிகுந்த  அதிகார செல்வாக்குடன் உள்ளதால் யாரையும் அவர்களுக்கு ஆதரவாக பேச வைக்க  முடியும் என்றும் கூறினார்.  
குர்ஷித் நேற்று காட்டிய போட்டோ ஆதாரங்கள் 2010ம் ஆண்டில் எடுக்கப்பட்டவை  என்றும், தாங்கள் குற்றம் சாட்டியபடி இது 2009ம் ஆண்டில் அவர் எந்த முகாமையும்  நடத்தவில்லை என்றும் கூறிய அவர், குர்ஷித் சட்ட அமைச்சராக இருப்பதால் தனது  அதிகாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்துவார் என்றும்,எனவே முறைகேடுக்கு  புகாருக்கு ஆளான குர்ஷித் அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும்  தெரிவித்தார்.