Published:Updated:

ராணுவ வாகனங்கள் வாங்கியதில் ரூ.100 கோடி வீண்!

டெல்லி: ராணுவத்துக்கு பாதுகாப்பு வாகனங்கள் வாங்கிய விவகாரத்தில் ரூ.100 கோடி அளவுக்கு ராணுவ தளபதிகளால் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட பாதுகாப்புத் துறை கணக்கு தணிக்கைக் குழு செய்த ஆய்வின் படி, 2009-2010 மற்றும் 2010- 2011ஆம் ஆண்டுகளில் ராணுவத்துக்கு பாதுகாப்பு வாகனங்கள் வாங்கிய விவகாரத்தில் ரூ.100 கோடி அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

'இந்த இழப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். தகவல் தொடர்பு சாதனங்கள் வாங்கிய வகையிலும், அளவுக்கு அதிகமாக பால் கொள்முதல் செய்யப்பட்ட வகையிலும் அதிகாரிகள் 6 பேர் ராணுவத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் நிதி இழப்பை ஏற்படுத்தி உள்ளனர்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி'வீண் செலவினங்கள் தவிர்க்குமாறும், செலவுகளில் சம நிலையில் கடைப்பிடிக்குமாறும்' ராணுவ அதிகாரிகளுக்கு ஏ.கே. அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.