Published:Updated:

ஊழல் புகார்: 3 கர்நாடக முன்னாள் முதல்வர்கள் மீது விசாரணை!

ஊழல் புகார்: 3 கர்நாடக முன்னாள் முதல்வர்கள் மீது விசாரணை!
ஊழல் புகார்: 3 கர்நாடக முன்னாள் முதல்வர்கள் மீது விசாரணை!
ஊழல் புகார்: 3 கர்நாடக முன்னாள் முதல்வர்கள் மீது விசாரணை!

பெங்களூர்: பெங்களூர் - மைசூர் விரைவுச் சாலை முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடத்த லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெங்களூர் - மைசூர் இடையே விரைவுச் சாலை அமைப்பதற்கு நந்தி உள்கட்டமைப்பு நிறுவனத்துடன் (நைஸ்) கர்நாடக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்தத் திட்டத்துக்கு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியதில் சட்டமுறைகேடு நடந்துள்ளதாக லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டி.ஜே.ஆப்ரகாம் தனியார் புகார் அளித்திருந்தார்.

விரைவுச் சாலை திட்டத்துக்கு விவசாயிகளிடமிருந்து 6,999 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிலங்களில் சர்வதேச தரத்தில் சாலை அமைக்கப்பட வேண்டும். சாலை பணிகள் முடிந்து 30 ஆண்டுகள் வரை அந்தச் சாலைகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உள்ளது.

##~~##
ஆனால், விரைவுச் சாலை பணிகள் முழுமையாக முடியாத நிலையில், 2008-வது ஆண்டிலிருந்தே அந்தச் சாலையில் சுங்க கட்டணத்தை நைஸ் நிறுவனம் வசூல் செய்து வருகிறது. 2008-09-வது நிதியாண்டில் ரூ. 5.64 கோடியும், 2009-10-வது நிதியாண்டில் 35.47 கோடியும் சுங்க கட்டணமாக வசூலித்திருப்பதாக நைஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுங்க கட்டணம் வசூலிக்கும் விரைவுச் சாலை திட்டத்துக்கு விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது சட்டவிதிமீறலாகும். மேலும், இந்தத் திட்டத்துக்கு நிலங்களை தாரைவார்த்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆப்ரகாம் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனு மீது லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.கே.சுதீந்திரராவ் முன்பு நேற்று விசாரணை நடைபெற்றது.

புகாரில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இருப்பதை உணர முடிவதால், இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவ கெüடா, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, நைஸ் நிறுவன மேலாண் இயக்குநர் அசோக் கெனி உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு லோக் ஆயுக்த போலீஸாருக்கு லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.