Published:Updated:

காமன்வெல்த் போட்டி ஊழல்: கல்மாடி உள்ளிட்ட 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு!

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடி  உள்ளிட்ட 10 பேர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
 
கடந்த 2010-ம் ஆண்டு நடந்த காமல்வெல்த் விளையாட்டு போட்டியின்போது  விளையாட்டு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.90 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக  அப்போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட  10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
##~~##
இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ,  சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிந்தர் கவுர், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கல்மாடி  உள்ளிட்ட 10 பேர் மீதும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்  என்று அறிவித்திருந்தார்.
 
அதன்படி10 பேர் மீதும் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு  செய்யப்பட்டது. அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 120 பி (கூட்டுசதி),  420 (ஏமாற்றுதல்), 201 (சாட்சியங்களை அழித்தல்) உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ்  குற்ற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.